"ஆளுமை:கோகிலா, மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 20: | வரிசை 20: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | * [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் | + | * [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D கோகிலா மகேந்திரன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] |
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D கோகிலா மகேந்திரன் பற்றி சி. சுதர்சன்] | *[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D கோகிலா மகேந்திரன் பற்றி சி. சுதர்சன்] | ||
வரிசை 28: | வரிசை 28: | ||
{{வளம்|6572|50-57}} | {{வளம்|6572|50-57}} | ||
{{வளம்|15444|11}} | {{வளம்|15444|11}} | ||
+ | {{வளம்|2628|04-08}} |
02:29, 17 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கோகிலா மகேந்திரன் |
தந்தை | செல்லையா சிவசுப்பிரமணியம் |
தாய் | செல்லமுத்து |
பிறப்பு | 1950.11.17 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோகிலா மகேந்திரன் (1950.11.17 -) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம்; தாய் செல்லமுத்து. பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் விஞ்ஞானத் துறையில் கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியாவார். இவர் 1974இல் யாழ்ப்பாணம், பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக பணியை ஆரம்பித்து, 1994இல் அதிபராக பதவி உயர்வு பெற்று, 1999இல் அதே கல்விப்புலத்தில் பிரதிப்பணிப்பாளராக பணியாற்றினார்.
எழுத்துலகில் இவரது "அன்பிற்கு முன்னால்" என்ற முதலாவது சிறுகதை குயில் சஞ்சிகையில் வெளியானது. தொடர்ந்து எழுபதிற்கும் மேலான சிறுகதைகளையும் 23வரையான நாடகங்களையும் எழுதியுள்ளார். Child Mental health, உள்ளக் கமலம், எங்கே நிம்மதி, கலைப்பேரரசு ஏ. ரி. பி, கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, குயில்கள், சிறுவர் உளநலம், சின்னச் சின்னப் பிள்ளைகள், தங்கத் தலைவலி, துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம், பாவலர் துரையப்பா பிள்ளை, பிரசவங்கள், மகிழ்வுடன் வாழ்தல், மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும், மனக்குறை மாற வழி, மனம் எனும் தோணி, மனச்சோர்வு முகங்களும் மூடிகளும், முற்றத்தில் சிந்திய முத்துக்கள், வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், விஞ்ஞானக் கதைகள், விழி முத்து ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். இவர் இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் பங்குபற்றியுள்ளார்.
வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலா வித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர் இரண்டு முறை இலங்கை சாகித்திய மண்டல் பரிசையும் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 217-220
- நூலக எண்: 6572 பக்கங்கள் 50-57
- நூலக எண்: 15444 பக்கங்கள் 11
- நூலக எண்: 2628 பக்கங்கள் 04-08