"ஆளுமை:சிவத்தம்பி, கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pilogini பயனரால் ஆளுமை:சிவத்தம்பி, கா., ஆளுமை:சிவத்தம்பி, கார்த்திகேசு என்ற தலைப்புக்கு நகர்த்தப...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சிவத்தம்பி | + | பெயர்=சிவத்தம்பி| |
− | தந்தை=| | + | தந்தை=கார்த்திகேசு| |
− | தாய்=| | + | தாய்=வள்ளியம்மை| |
− | பிறப்பு= | + | பிறப்பு=1932.10.05| |
− | இறப்பு=| | + | இறப்பு=2011.07.06| |
ஊர்=கரவெட்டி| | ஊர்=கரவெட்டி| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிவத்தம்பி ( | + | கார்த்திகேசு சிவத்தம்பி (1932.10.05 - 2011.07.06) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறந்த இலக்கிய விமர்சகரும்; சமூகசிந்தனையாளர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் வள்ளியம்மை. ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை பாராளுமன்ற சமநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தமிழ், சமயம், மானுடவியல், அரசியல், சமுகவியல், நாடகம், வரலாறு, கவின்கலை சார்ந்த துறைகளில் தடம் பதித்தவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது, இலங்கை ஜப்பானிய நட்புறவுக் கழக விருது பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1970ல் இலண்டன் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் ஆய்வு நடாத்தி கலாநிதிப் பட்டம் பெற்றார். |
+ | |||
+ | 1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். | ||
+ | |||
+ | பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். இவர் "யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்", "மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துரிமையும் என்ற ஆராய்வு தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார். | ||
வரிசை 16: | வரிசை 20: | ||
{{வளம்|143|08-167}} | {{வளம்|143|08-167}} | ||
{{வளம்|10239|33-36}} | {{வளம்|10239|33-36}} | ||
− | + | {{வளம்|4192|57-58}} | |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் சிவத்தம்பி] | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் சிவத்தம்பி] |
01:29, 1 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவத்தம்பி |
தந்தை | கார்த்திகேசு |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1932.10.05 |
இறப்பு | 2011.07.06 |
ஊர் | கரவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசு சிவத்தம்பி (1932.10.05 - 2011.07.06) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறந்த இலக்கிய விமர்சகரும்; சமூகசிந்தனையாளர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் வள்ளியம்மை. ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை பாராளுமன்ற சமநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தமிழ், சமயம், மானுடவியல், அரசியல், சமுகவியல், நாடகம், வரலாறு, கவின்கலை சார்ந்த துறைகளில் தடம் பதித்தவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது, இலங்கை ஜப்பானிய நட்புறவுக் கழக விருது பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1970ல் இலண்டன் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் ஆய்வு நடாத்தி கலாநிதிப் பட்டம் பெற்றார்.
1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.
பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். இவர் "யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்", "மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துரிமையும் என்ற ஆராய்வு தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 143 பக்கங்கள் 08-167
- நூலக எண்: 10239 பக்கங்கள் 33-36
- நூலக எண்: 4192 பக்கங்கள் 57-58