"ஆளுமை:முருகானந்தன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 20: | வரிசை 20: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் | + | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D முருகானந்தன், சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] |
வரிசை 27: | வரிசை 27: | ||
{{வளம்|10301|57-58}} | {{வளம்|10301|57-58}} | ||
{{வளம்|13958|188-192}} | {{வளம்|13958|188-192}} | ||
+ | {{வளம்|1037|11}} |
04:02, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகானந்தன் |
தந்தை | சண்முகம் |
தாய் | இராசம்மா |
பிறப்பு | 1950.01.14 |
ஊர் | கரணவாய் |
வகை | எழுத்தாளர், வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகானந்தன், சண்முகம் (1950.01.14 - ) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த வைத்தியர்; எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் இராசம்மா. இவர் கரணவாய் அமெரிக்க மிசன் ஆரம்பப் பாடசாலை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியியையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு மருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வியைக் கற்று, வைத்தியராக கடமையாற்றியுள்ளார்.
கல்லூரியில் கற்கும் காலத்தில், தனது 26ஆவது வயதில் இவரது முதலாவது ஆக்கம் கண்களின் வார்த்தைகள் தெரியாதோ எனும் தலைப்பில் 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் 'தினகரன்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவர் பிரகவாதஆனந்த, வன்னேரிஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். மீன்குஞ்சுகள், தரைமீன்கள், இது எங்கள் தேசம், இனி வானம் வசப்படும், ஒரு மணமகனைத் தேடி, நாம் பிறந்த மண் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நாளை நமதே, எயிட்ஸ் இல்லாத உலகம் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் நீ நடந்த பாதையிலே, துளித்தெழும் புதுச் செடிகள், நெருப்பாறு, அது ஓர் அழகிய நிலாக்காலம் ஆகிய கவிதைகள், குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.
இவரது மீன்குஞ்சுகள் சிறுகதை சென்னை இலக்கியச் சிந்தனையின் 1979ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாக தெரிவு செய்யப்பட்தோடு 2003இல் வெளியான தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்கு 2004ஆம் ஆண்டு சிறுதைக்கான சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது. மேலும் மீரா பதிப்பக வெளியீடான 'எயிட்ஸ் இல்லாத உலகம்' என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 80-83
- நூலக எண்: 10301 பக்கங்கள் 57-58
- நூலக எண்: 13958 பக்கங்கள் 188-192
- நூலக எண்: 1037 பக்கங்கள் 11