"ஆளுமை:பாலமனோகரன், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi, ஆளுமை:பாலமனோகரன், அ. பக்கத்தை ஆளுமை:பாலமனோகரன், அண்ணாமலை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற...)
(வேறுபாடு ஏதுமில்லை)

11:33, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலமனோகரன், அண்ணாமலை
தந்தை அண்ணாமலை
பிறப்பு 1942.07.07
ஊர் முல்லைத்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இளவழகன் என்ற புனைபெயரைக் கொண்ட அ. பாலமனோகரன் (1942.07.07 -) முல்லைத்தீவு, தண்ணீரூற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். 1962இல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 1967இல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஏற்றார். பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார்.

சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" என்பதே இவரது முதலாவது சிறுகதையாகும். 1973இல் வீரகேசரி பிரசுரமாக இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் வெளியானது.

இவர் நிலக்கிளி, கனவுகள் கலைந்தபோது, வட்டம்பூ, குமாரபுரம், தாய்வழித் தாகம், நந்தாவதி முதலான நாவல்களையும் தீபதோரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதியையும், நாவல் மரம் எனும் டேனிஷ் மொழியில் அமைந்த சிறுகதைத்தொகுதியையும், டேனிஷ்-தமிழ் அகராதியையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 93 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 36-39

வெளி இணைப்புக்கள்