"ஆளுமை:கணபதிப்பிள்ளை, முருகப்பன் (மூனாக்கானா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்=ஆரையம்பதி, மட்டக்களப்பு| | ஊர்=ஆரையம்பதி, மட்டக்களப்பு| | ||
வகை=கவிஞர்| | வகை=கவிஞர்| | ||
− | புனைபெயர்= | + | புனைபெயர்=மூனாக்கானா| |
}} | }} | ||
− | மு. கணபதிப்பிள்ளை (1924.01.22 - )மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த எழுத்தாளர், இவரது தந்தை முருகப்பன்; தாய் தங்கம்மா. தனது கல்வியை ஆரையம்பதி இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். | + | மு. கணபதிப்பிள்ளை (1924.01.22 - ) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த எழுத்தாளர், இவரது தந்தை முருகப்பன்; தாய் தங்கம்மா. தனது கல்வியை ஆரையம்பதி இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று 1949ஆம் ஆண்டில் கண்டி, றம்புக்கல அரசினர் தமிழ் பாடசாலையில் ஆசிரியராக பணியை ஆரம்பித்து பின், பல பாடசாலைகளிலும் கடமையாற்றி இறுதியாக மட்டக்களப்பு, கோயில் குளம் விநாயகர் வித்தியாலயத்தில் பணி புரிந்து 1981ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். |
− | + | கலை, இலக்கிய ஈடுபாடு காரணமாக புழுகுப்புராணம் , கலாகோலம், கடவுளும் நானும், தீர்த்தக்கரைதனிலே, எம்.பி.க்குக் காவடி தம்பி முதலான கவிதைகளையும், அலங்காரரூபன் கூத்து, லெட்சுமி கல்யாணம், பரிசாரி மகன், சூறாவளிக்கூத்து, அண்ணனும் தங்கையும், முதியோரைக் காப்போம் முதலான கூத்துக்களையும் படைத்துள்ளார். அத்தோடு நாடகங்கள், கிராமிய நடனங்கள், வில்லுப்பாட்டு ஆகியவற்றையும் ஆக்கியுள்ளார். கூத்துப் பாடல்கள் தொடர்பாக ஆய்வு செய்து பல கட்டுரைகளையும், இலக்கிய நெஞ்சம் , கவிதை நெஞ்சம் ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். | |
− | + | எழுத்து மற்றும் கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைக் கெளரவித்து கலைமணி (மட்-கலாசாரப் பேரவை-1989), கலாபூஷணம் (கலாசார அமைச்சு-1995), மக்கள் கவிமணி (மட்- ஆசிரியர் கலாசாலை பொன்விழா -1996), கலையரசு (வலயக் கல்வி பண்பாட்டலுவல்கள் பிரிவு–2000), தலைக்கோல் விருது (கிழக்குப் பல்கலைக் கழகம் -2001) முதலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. | |
− | |||
− | |||
− | |||
− | கலைமணி (மட்-கலாசாரப் பேரவை-1989), கலாபூஷணம் (கலாசார | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 27: | வரிசை 23: | ||
==வெளி இணைப்பு== | ==வெளி இணைப்பு== | ||
− | *[http://www.muthusom.com/2014/07/blog-post_4562.html | + | *[http://www.muthusom.com/2014/07/blog-post_4562.html மூனாக்கானா பற்றி முதுசொம் இணையத்தில்] |
01:14, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை, முருகப்பன் (மூனாக்கானா) |
தந்தை | முருகப்பன் |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1924.01.22 |
ஊர் | ஆரையம்பதி, மட்டக்களப்பு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மு. கணபதிப்பிள்ளை (1924.01.22 - ) மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த எழுத்தாளர், இவரது தந்தை முருகப்பன்; தாய் தங்கம்மா. தனது கல்வியை ஆரையம்பதி இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று 1949ஆம் ஆண்டில் கண்டி, றம்புக்கல அரசினர் தமிழ் பாடசாலையில் ஆசிரியராக பணியை ஆரம்பித்து பின், பல பாடசாலைகளிலும் கடமையாற்றி இறுதியாக மட்டக்களப்பு, கோயில் குளம் விநாயகர் வித்தியாலயத்தில் பணி புரிந்து 1981ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
கலை, இலக்கிய ஈடுபாடு காரணமாக புழுகுப்புராணம் , கலாகோலம், கடவுளும் நானும், தீர்த்தக்கரைதனிலே, எம்.பி.க்குக் காவடி தம்பி முதலான கவிதைகளையும், அலங்காரரூபன் கூத்து, லெட்சுமி கல்யாணம், பரிசாரி மகன், சூறாவளிக்கூத்து, அண்ணனும் தங்கையும், முதியோரைக் காப்போம் முதலான கூத்துக்களையும் படைத்துள்ளார். அத்தோடு நாடகங்கள், கிராமிய நடனங்கள், வில்லுப்பாட்டு ஆகியவற்றையும் ஆக்கியுள்ளார். கூத்துப் பாடல்கள் தொடர்பாக ஆய்வு செய்து பல கட்டுரைகளையும், இலக்கிய நெஞ்சம் , கவிதை நெஞ்சம் ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
எழுத்து மற்றும் கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைக் கெளரவித்து கலைமணி (மட்-கலாசாரப் பேரவை-1989), கலாபூஷணம் (கலாசார அமைச்சு-1995), மக்கள் கவிமணி (மட்- ஆசிரியர் கலாசாலை பொன்விழா -1996), கலையரசு (வலயக் கல்வி பண்பாட்டலுவல்கள் பிரிவு–2000), தலைக்கோல் விருது (கிழக்குப் பல்கலைக் கழகம் -2001) முதலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 162-164
- நூலக எண்: 14462 பக்கங்கள் 05-08
- நூலக எண்: 13943 பக்கங்கள் 120-124