"ஆளுமை:சதாசிவ ஐயர், தியாகராஜ ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:சதாசிவ ஐயர், தியாகரஜ ஐயர் பக்கத்தை ஆளுமை:சதாசிவஐயர், தியாகரஜஐயர் என்ற தலைப்புக்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:02, 30 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சதாசிவஐயர், தியாகராஜஐயர் |
தந்தை | தியாகராஜஐயர் |
பிறப்பு | 1882 |
இறப்பு | 1950 |
ஊர் | சுன்னாகம் |
வகை | எழுத்தாளர், புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தி. சதாசிவஐயர் (1882 - 1950) யாழ்ப்பாணம், சுன்னாகத்தை சேர்ந்த எழுத்தாளர், புலவர். இவரது தந்தை தியாகராஜஐயர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகுந்த புலமை படைத்தவராய் திகழ்ந்த இவர் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் எவ். ஏ. தேர்வில் முதற் பிரிவில் சித்தியடைந்தார். மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும், கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் இவர் ஆசிரியராகப் பணியற்றினார். 1910ஆம் ஆண்டு தொடக்கம் கல்வித் திணைக்களத்தில் வித்தியாதரிசியாகவும், 1927ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி வித்தியாதரிசியாகவும் கடமையாற்றினார்.
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமானது இவருடைய அயரா உழைப்பினாலேயே 1921ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. தேவி தோத்திர மஞ்சரி, இருதுசங்கார காவியம், தேவிமானச பூசை அந்தாதி, பெருமாக்கடவை பிள்ளையார் இரட்டை மணிமாலை, தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்சியும் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். கரவை வேலன் கோவை, வசந்தன் கவித்திரட்டு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களை வெளியீடும் செய்துள்ளார்.
சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளைக் கௌரவிக்குமுகமாக இலங்கை அரசு அவருக்கு முகாந்திரம் என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 100-101