"ஆளுமை:சந்திரகுலசிங்கம், கயிலாசபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரகுலச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 17: வரிசை 17:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|7571|176}
+
{{வளம்|7571|177}

02:21, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரகுலசிங்கம், கயிலாசபிள்ளை
தந்தை கயிலாசபிள்ளை
பிறப்பு 1951.03.05
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.சந்திரகுலசிங்கம் (1951.03.05 - ) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கயிலாசப்பிள்ளை. கல்விப் பொதுத் தராதரம் வரை கல்வி கற்ற இவர் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே இவரது சங்கீத ஆசிரியர் சங்கீத பூஷணம் ஆர். இராசலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் 1967ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் பிருதிவிவராஜன் நாடகத்தின் மூலம் அறிமுகமாகி இத் துறையில் கால் பதித்தார்.

பாடசாலை விட்டு விலகிய காலத்தின் பின்னர் கோண்டாவில் வடக்கு வாகீஸ்வரி நாடகமன்றத்தின் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்த இவரது ஒருசதம், அலாவுதீன் போன்ற நாடகங்கள் இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்த நாடகங்களாகும். மேலும் உறவுகள், நரகொடு சுவர்க்கம், ஆளுக்கு ஆள், ஏகலைவன் போன்ற நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். அத்தோடு இருபது நாடகங்களுக்கு மேல் நடித்த இவர் பங்குப்பற்றிய நாடகங்கள் பலமுறை மேடையேற்றப்பட்டுளன.

இவர் அலாவுதீன், இனியொரு விதி செய்வோம் போன்ற நாடகங்களில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். முற்றுப்புள்ளி, உறவுகள், நரகொடு சுவர்க்கம் போன்ற இவரது நாடகங்கள் வீடியோ பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறீ வாகீஸ்வரி சனசமூக நிலையம், நேதாஜி சனசமூக நிலையம் ஆகியன இவரின் நாடகக் கலையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளன. இவர் ஆற்றிய கலைப்பணிகளுக்காக கலாபூஷணம் விருது இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

{{வளம்|7571|177}