"ஆளுமை:முத்துலிங்கம், அப்பாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 15: வரிசை 15:
  
இவற்றுடன் திகடசக்கரம் (1995), வம்சவிருத்தி (1996), வடக்கு வீதி (1998), மகாராஜாவின் ரயில் வண்டி (2001), அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள், முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை), ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008), அமெரிக்கக்காரி (2009) ஆகிய சிறுகதை தொகுப்புக்களையும் அங்கே இப்ப என்ன நேரம்? (2005), பூமியின் பாதி வயது (2007), கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது ( 2006), அமெரிக்க உளவாளி (2010), ஒன்றுக்கும் உதவாதவன் (2011) ஆகிய கட்டுரை தொகுப்புக்களையும் வியத்தலும் இலமே (2006) என்ற நேர்காணலையும் வெளியிட்டுள்ளார்.
 
தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றிவரும் இவருக்கு கனடா தமிழர் தகவல் இதழ் 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை' விருதினை 2006இல் வழங்கி கெளரவித்துள்ளது.  
 
07:58, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துலிங்கம், அப்பாத்துரை
தந்தை அப்பாத்துரை
தாய் ராசம்மா
பிறப்பு 1937.01.19
ஊர் கொக்குவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துலிங்கம் (பி. 1937.01.19) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் அப்பாத்துரை. தாய் பெயர் இராசம்மா. கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர்.

பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றினார். பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பல சிறுகதைகள், கட்டுரைகள் என்பனவற்றை எழுதியுள்ளார். 'அக்கா' என்ற இவரின் முதல் சிறுகதை தொகுப்பு திரு க.கைலாசபதி அவர்களின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது.

இவற்றுடன் திகடசக்கரம் (1995), வம்சவிருத்தி (1996), வடக்கு வீதி (1998), மகாராஜாவின் ரயில் வண்டி (2001), அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள், முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை), ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008), அமெரிக்கக்காரி (2009) ஆகிய சிறுகதை தொகுப்புக்களையும் அங்கே இப்ப என்ன நேரம்? (2005), பூமியின் பாதி வயது (2007), கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது ( 2006), அமெரிக்க உளவாளி (2010), ஒன்றுக்கும் உதவாதவன் (2011) ஆகிய கட்டுரை தொகுப்புக்களையும் வியத்தலும் இலமே (2006) என்ற நேர்காணலையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றிவரும் இவருக்கு கனடா தமிழர் தகவல் இதழ் 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை' விருதினை 2006இல் வழங்கி கெளரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 133-134
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 61

வெளி இணைப்புக்கள்