"ஆளுமை:முத்துத்தம்பி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

11:40, 24 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துத்தம்பி கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா முத்துத்தம்பி புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் ஈழநாட்டின் பல பாகங்களிலும் தனது ஆசிரிய சேவையை திறம்படச் செய்ததன் மூலம் நல்லாசிரியர் எனும் பட்டத்தை தட்டிக் கொண்டார்.

பிற்காலத்தில் புங்குடுதீவு கிராமத்தில் ஓர் பாடசாலைக்கு தலமை ஆசிரியரான இவர் இக் கிராமத்தின் பொதுத் தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமாதான நீதவானாக பட்டம் பெற்று மக்களுக்கு சேவை செய்தார். புங்குடுதீவு விளை பொருள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி வெங்காயக் கூடை இழைக்கும் பயிற்சியை மக்களுக்களித்து குடிசைக் கைத்தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தார்.

புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிர்வாக சபை உறுப்பினராவும் பல வருடங்கள் கணக்காளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 193-194