"ஆளுமை:வீரசிங்கம், நாகமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(" {{ஆளுமை| பெயர்=வீரசிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 5: | வரிசை 5: | ||
தாய்=ஆச்சிமுத்து| | தாய்=ஆச்சிமுத்து| | ||
பிறப்பு=1938.07.02| | பிறப்பு=1938.07.02| | ||
| − | இறப்பு= | + | இறப்பு=| |
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
வகை=தொழிலதிபர்| | வகை=தொழிலதிபர்| | ||
23:46, 11 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | வீரசிங்கம் நாகமணி |
| தந்தை | நாகமணி |
| தாய் | ஆச்சிமுத்து |
| பிறப்பு | 1938.07.02 |
| ஊர் | வேலணை |
| வகை | தொழிலதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நா.வீரசிங்கம் வேலணையை சோளாவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். தமிழ் மொழி பற்றாளர், இன உணர்வு மிக்கவர், நாட்டுபற்று நிறைந்தவர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், நலிந்தோருக்கு உதவும் நல்லிதய வள்ளலார் இவ்வாறு பல கோணங்களில் இவரை நாம் காணலாம். இவர் ஆரம்பத்தில் சாதாரண கடை லிகிதராகவே தொழிலைத் தொடர்ந்த இவர் பின்னர் பிறவுன்சன் இன்டபிரைஸ் என்ற தொழில் நிறுவனத்தை உருவாக்கும் அளவு வளர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் தனித் தமிழ் இயக்கச் செயற்பாடுகளுடன் ஈடுபாடு நிறைந்தவராவார். திருவாளர்கள் எஸ்.பி.சாமி. பொன் தியாகராசா போன்றோருடன் இணைந்து வேலணை வாலிபர் முன்னேற்றச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ் விழாக்கள், இலக்கிய விழாக்களை நடத்தியதோடு, 1964இல் தாய் நாடு என்ற மாதசஞ்சிகையை வெளியிட்டு யாழ்தாசன் என்ற புனைபெயரில் ஆக்கங்களை படைத்து வந்தார். அத்தோடு யாழ் கலையரங்கம் என்ற கலைக் கழகத்தை உருவாக்கி அதன் செயலாளராக செயற்பட்ட இவர் இக் கலையரங்கின் மூலம் கலைஞரின் நச்சுக்கோப்பை, நடமாடியின் சங்கிலியன் போன்ற பால நாடகங்களை மேடையேற்றி கலைஞர்களுக்கு உதவி வந்தார். தமிழ்ச்சங்க பணிகளுக்கு உதவிகள் செய்து வரும் இவர் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், ஓம் படை நம்பிக்கை குழு உறுப்பினராகவும் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். தமிழகத்தில் கவிப் பேரரசு வைரமுத்துவையும், தென்னகப் பாடகர்கள் பலரையும் வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்திய பெருமையில் இவருக்கு நிறைய பங்குண்டு. இவ்வாறு பல சேவைகளை இன்றும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 462-466