"ஆளுமை:ஸுலைஹா, அபூசஹுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 20: வரிசை 20:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
[[பகுப்பு:பெண் எழுத்கதாளர்ள்கள்]]
+
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

23:43, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஸுலைஹா
தந்தை அபூசஹுமான்
தாய் கைருன்னிஸ்ஸா, எம். ஏ. சி.
பிறப்பு 1969.05.27
இறப்பு -
ஊர் அனுராதபுரம்
வகை எழுத்தாளர், ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸுலைஹா, அபூசஹுமான் (1960.05.27) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அபூசஹுமான்; தாய் கைருன்னிஸ்ஸா, எம். ஏ. சி. தரம் 01 முதல் 11 வரை கெக்கிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், 12 முதல் 13 வரை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்ற இவர் ஆசிரியர் பயிற்சிக்காக பேராதனைப் ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, ஆங்கில ஆசிரியர் டிப்ளோமாப் பயிற்சிக்காக இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகம், ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாவுக்காக கண்டி உயர் தொழில் நுட்ப நிறுவகம், கல்விமாணி கற்கை நெறி நிமித்தம் ஆங்கில தேசியக் கல்வி நிறுவகம் என்பனவற்றில் கற்றுள்ளார்.

ஆங்கில ஆசிரியராக கெக்கிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், மரதன்கடவல அல்-அமீன் முஸ்லிம் வித்தியாலயம் மரதன்கடவல இஹலபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் அதிபராக மரதன்கடவல அல்-அமீன் முஸ்லிம் வித்தியாலயம், கெக்கிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.

இவரது முதல் ஆக்கம் மல்லிகையில் 90 களில் வெளிவந்த ஓ! ஆபிரிக்காவே மொழிபெயர்புக் கவிதை தொகுப்பு ஆகும்.மேலும் பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும், அந்தப் புதுச்சந்திரிகையின் இரவு, இந்த நிலம் எனது போன்ற மொழிபெயர்ப்புக் கவிதை தொகுப்புக்களையும் ஞாபகிக்கதக்கதோர் புன்னகை என்ற மொழிபெயர்புக் கட்டுரை தொகுதியையும், வானம்பாடியும் ரோஜாவும் என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதை தொகுதியையும் எழுதியுள்ளார். சிறந்த மொழிப்பெயர்புக்கான சாகித்திய மண்டல பரிசு, துரைவி விருது, Inspirational woman award போன்ற பல விருதுகளையும், சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்