"ஆளுமை:ஜுவேரியா, முகைதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜுவேரியா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 19: வரிசை 19:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:59, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜுவேரியா
தந்தை முகைதீன்
தாய் தரிசா
பிறப்பு 1968.01.15
ஊர் எரிக்கலம்பிட்டி
வகை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜுவேரியா, முகைதீன் மன்னார் எரிக்கலம்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முகைதீன்; தாய் தரிசா. ஆரம்ப இடைநிலை உயர்க் கல்வியை மன்னார் எரிக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் கற்றார். உளவள டிப்ளோமா முடித்துள்ள ஜுவேரியா 25 வருடங்களாக பெண்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் பெண் செயற்பாட்டாளராவார்.

முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனத்தின் ஊடாக பெண்களுக்கு வலுட்டல் செயற்பாடுகளில் இயங்கி வருகிறார். பெண்களின் உரிமை சார்ந்த நிலைமாறுகால நீதி தொடர்பாக விழிப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தின் குழுவுக்கு முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிறுவனத்தின் ஊடாக அழுத்தம் கொடுத்து வருகிறார். காதி நீதிமன்றத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதற்கும் குரல் கொடுத்து வருகிறார். ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளையும் உளவள ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு ஜுவேரியா, முகைதீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.