"ஆளுமை:ஜீன்சியா, யூட் அல்போன்ஸ் மேவிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜீன்சியா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 25: வரிசை 25:
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் கூத்துக் கலைஞர்கள்]]
  
 
குறிப்பு : மேற்படி பதிவு ஜீன்சியா, யூட் அல்போன்ஸ் மேவிஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
 
குறிப்பு : மேற்படி பதிவு ஜீன்சியா, யூட் அல்போன்ஸ் மேவிஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

10:22, 8 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜீன்சியா
தந்தை செபஸ்தியாம்பிள்ளை
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1983.05.13
ஊர் பாஷையூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜீன்சியா, யூட் அல்போன்ஸ் மேவிஸ் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செபஸ்தியாம்பிள்ளை; தாய் இராஜேஸ்வரி. ஆரம்ப இடை நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயத்திலும் உயர் நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் புனித சார்ள்ஸ் மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.

இவரின் குடும்பம் கலைத்துறையைச் சார்ந்தது என்பது விசேட அம்சமாகும். இவரின் தந்தை, தாயார், அம்மம்மா என மூன்று தலைமுறையினர் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். கவிதை, சிறுகதை, நாடகம், நாட்டுக்கூத்து, இசை நாடகம், தெருநாடகங்கள் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். நாட்டுக்கூத்து கலையுடன் மிகவும் பரீட்சையமான ஜீன்சியா பாடி, நடிக்கும் திறமையைக் கொண்டவர். சி்று வயதில் இருந்தே நடித்து வருகிறார். இவரின் பேர்த்தியார் பாஷையூர் முதல் பெண் அண்ணாவியார் ஆவார். இவரது பேரனார் பபூன் அலெக்சாண்டர். இவரது தந்தை சசோதரர்கள் அனைவரும் கூத்துக்கலைஞர்கள். திருமறைக்கலாமன்றத்தின் கம்பன் மகன், எஸ்தாக்கியார் ஆகிய தென்மோடி கூத்துக்களில் பிரதான பெண் பாத்திரத்தினை ஏற்று நடித்துள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஜீன்சியா பாஷையூர் புனித அந்தோனியார் அறநெறிப் பாடசாலையின் ஆசியராகவும் கடமையாற்றி வருவதோடு மதனியா நாடக மன்ற உறுப்பினராகவும் உள்ளார். அத்துடன் யாழ் கலாசார அதிகார சபையின் நிர்வாக உறுப்பினராக செயற்பட்டு வருகிறார். மேலும் யாழ் பிரதேச கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் உள்ளார். கேசவராஜாவின் கதையில், பிரசன்னவிதானகே இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான அவள் எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். பல நாடகப் போட்டிகளிலும் கவிதைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.

விருதுகள்

2014ஆம் ஆண்டு பிரதேச கலாசார விழாவில் கூத்துத்துறையில் இவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு.

இளம் கலைக்கதிர் -பட்டத்தை 2018ஆம் ஆண்டு பதுவையர் கலாமன்றம் பாஷையூர் வழங்கியது.

வடஜோதி விருது- 2019ஆம் ஆண்டு யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் வழங்கியது.

குறிப்பு : மேற்படி பதிவு ஜீன்சியா, யூட் அல்போன்ஸ் மேவிஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.