"ஆளுமை:கார்த்திகா, கணேசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=கார்த்திகா, கணேசர்| | பெயர்=கார்த்திகா, கணேசர்| | ||
− | தந்தை=| | + | தந்தை=முத்தையா| |
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=04.03.1946| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=திருநெல்வேலி| |
− | வகை=கலைஞர்| | + | வகை=நாட்டிய கலைஞர், எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார். | + | [[படிமம்:karththika kaneesar.jpg|300px]] |
− | + | கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். தனது இளம் வயதில் இலங்கையில் நடனம் பயின்றிருந்தாலும் திருமணத்தின் பின்னரே இவர் இந்தியா சென்று நடனம் பயின்றார். நாட்டியத்தின் மேல் இவர் கொண்ட அதீத ஆர்வத்திற்கு இவருடைய கணவர் திரு. கணேசர் அவர்கள் மிகவும் பக்கபலமாக இருந்துள்ளார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார். | |
− | கொழும்பில் ஆடற் | + | இலங்கையில் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள இவர் 1972இல் கொழும்பில் கார்த்திகா ஆடற் கலையகம் என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பரதநாட்டியத்தை பயிற்றுவித்துள்ளார். நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் ''(1969), ''காலந்தோறும் நாட்டியக்கலை'', ''இந்திய நாட்டியத்தின் நாடக மாபு'', ''நாட்டியக் கடலின் புதிய அலைகள்'' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் பணிபுரிகின்றார். |
− | + | கார்த்திகா பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்து தயாரித்துள்ளார். இவர் 1974ஆம் ஆண்டு தயாரித்த "இராமாயணம்" முழுநீள நாட்டிய நாடகத்தில் குதிரையோட்டம், இராம-இராவண யுத்தம், வானரப் படைகளின் போர் போன்றவற்றிற்கு இலங்கையின் வடமோடி நாட்டுக்கூத்து ஆட்ட வகைகளை இணைத்திருந்தார்.அந்தக் காலத்தில் இது புதிய முயற்சியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் கண்டனங்களும் எழுந்தன. அவற்றைக் கண்டு தளராது தொடர்ந்து எல்லாளன்-துட்டகாமினி, கிருஷ்ண லீலா, உதயம் போன்ற பல நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார். | |
+ | மிகவும் பரந்துபட்ட அறிவு கொண்ட இவர் நாட்டியம் பற்றி மட்டுமல்லாது வேறு பல அறிவுசார்ந்த விடயங்களைப்பற்றியும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘ஞானம்’ மாத இதழில் இவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. | ||
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். | தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். | ||
08:58, 6 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கார்த்திகா, கணேசர் |
தந்தை | முத்தையா |
பிறப்பு | 04.03.1946 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | நாட்டிய கலைஞர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். தனது இளம் வயதில் இலங்கையில் நடனம் பயின்றிருந்தாலும் திருமணத்தின் பின்னரே இவர் இந்தியா சென்று நடனம் பயின்றார். நாட்டியத்தின் மேல் இவர் கொண்ட அதீத ஆர்வத்திற்கு இவருடைய கணவர் திரு. கணேசர் அவர்கள் மிகவும் பக்கபலமாக இருந்துள்ளார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார். இலங்கையில் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள இவர் 1972இல் கொழும்பில் கார்த்திகா ஆடற் கலையகம் என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பரதநாட்டியத்தை பயிற்றுவித்துள்ளார். நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் (1969), காலந்தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, நாட்டியக் கடலின் புதிய அலைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் பணிபுரிகின்றார். கார்த்திகா பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்து தயாரித்துள்ளார். இவர் 1974ஆம் ஆண்டு தயாரித்த "இராமாயணம்" முழுநீள நாட்டிய நாடகத்தில் குதிரையோட்டம், இராம-இராவண யுத்தம், வானரப் படைகளின் போர் போன்றவற்றிற்கு இலங்கையின் வடமோடி நாட்டுக்கூத்து ஆட்ட வகைகளை இணைத்திருந்தார்.அந்தக் காலத்தில் இது புதிய முயற்சியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் கண்டனங்களும் எழுந்தன. அவற்றைக் கண்டு தளராது தொடர்ந்து எல்லாளன்-துட்டகாமினி, கிருஷ்ண லீலா, உதயம் போன்ற பல நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார். மிகவும் பரந்துபட்ட அறிவு கொண்ட இவர் நாட்டியம் பற்றி மட்டுமல்லாது வேறு பல அறிவுசார்ந்த விடயங்களைப்பற்றியும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘ஞானம்’ மாத இதழில் இவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 147
- நூலக எண்: 13945 பக்கங்கள் 22