"ஆளுமை:காங்கேசு, கந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|315-320}} | {{வளம்|4640|315-320}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:51, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | காங்கேசு |
தந்தை | கந்தர் |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1912.08.01 |
இறப்பு | 1988.01.15 |
ஊர் | வேலணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காங்கேசு, கந்தர் (1912.08.01- 1988.01.15) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தர்; இவரது தாய் வள்ளியம்மை. இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் ஆசிரியத்துவக் கல்வியை சரஸ்வதி வித்தியாசாலையிலும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் பயின்றார்.
இவர் நாரந்தனை கணேச வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை என்பவற்றில் உதவி ஆசிரியராகவும் வேலணை அரச தமிழ்க் கலவன் பாடசாலையில் தலைமையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு இவர் ஒரு மொழிப்பற்றாளன். இலக்கண அறிவும் அழகான கையெழுத்தும் கைவரப்பெற்றவர். மேலும் முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபை உறுப்பினராக இருந்து அக்கோவிலுக்கு மூலஸ்தானம் அமைப்பதில் பெரும்பங்காற்றியவர். தனது கிராமத்திலுள்ள மாணவர்களின் தேவைக்காகத் தனது சொந்தக் காணியில் பாடசாலை அமைத்துக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 315-320