"ஆளுமை:வரதராஜன், மாணிக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வரதராஜன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வரதராஜன்|
+
பெயர்=மாணிக்கம் வரதராஜன்|
தந்தை=மாணிக்கம்|
+
தந்தை=உடையப்பா மாணிக்கம் |
தாய்=|
+
தாய்= ஞானேஸ்வரி |
பிறப்பு=|
+
பிறப்பு=1956.11.19|
இறப்பு=|
+
ஊர்=பாண்டிருப்பு , அம்பாறை|
ஊர்=கல்முனை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=|
+
புனை பெயர்=உமா வரதராஜன்|
 
}}
 
}}
  
வரதராஜன், மாணிக்கம் கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மாணிக்கம். இவர் சிங்கர் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.
 
தனது 17வது வயதிலேயே காலரதம் என்ற என்ற சிற்றிதழை மீலாத்கீரன் உடன் இணைந்து நடாத்திய இவர் அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் களம் என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். வியூகம் என்ற இதழைத் ஆரம்பித்தார். மேலும் இவரது வியூகம் நான்கு இதழ்கள் வெளி வந்தன. மூன்றாம் சிலுவை இவரது முதல் நாவல். உள்மன யாத்திரை (பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு), மூன்றாம் சிலுவை (நாவல், காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு) போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது உள்மன யாத்திரை என்ற நூலுக்கு இலங்கை வடகிழக்கு மாகாணசபை விருதைப் பெற்றுள்ளார்.  
+
மாணிக்கம் வரதராஜன் அவர்கள்(பி. 1956.11.19) அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த எழுத்தாளராவார். இவர் தன் தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார். இவர் 1956ம் ஆண்டு இந்தியாவின் கண்டவராயரன்பட்டி ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் பாண்டிருப்பை சேர்ந்த ஞானேஸ்வரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதனால் பிரபல எழுத்தாளர் டாக்டர் மு. வரதராஜன் அவர்களின் எழுத்துக்களில் கொண்ட ஆர்வம் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வைத்துள்ளார்.
 +
 
 +
இவர் தனது ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்திலும் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் தரம் 6 வகுப்பு மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் படிக்கும் போதே இடையில் அப்பாடசாலையில் இருந்து விலகி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் தரம் 6 இலிருந்து சாதாரண தரம் வரை கல்வி கற்றார். அங்கு அப்போதிருந்த தமிழ் ஆசிரியர் எழுத்தாளர் அருட்சகோதரர். எஸ்.ஏ. மத்தியு அவர்கள் மூலம் தமிழிலும் மற்றும் சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் மேலும் அதிகரித்தது. அத்துடன் மருதமுனை நூலகத்தில் பல புத்தகங்களை வாசித்து அதன் மூலம் பல இலக்கியவாதிகளின் எழுத்துக்களை கற்றுக்கொண்டார்.
 +
 
 +
சாதாரண தரத்திற்கு பின்னர் உயர்தர கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை மூலம் 1973ல், தன்னுடைய 17வது வயதில் இலக்கிய உலகுக்கு இவர் அறிமுகமானார். இக் கட்டுரை தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரான நா. பார்த்தசாரதி அவர்களின் 'தீபம்' இலக்கிய இதழில் வெளியானது. அவர் எழுதிய முதல் சிறுகதை 1974இல் "அந்தப்பார்வை அப்படித்தான் இருக்கும்" என்ற பெயரில் வெளியாகியிருந்தது.
 +
 
 +
அக்காலகட்டத்தில் காலரதம் எனும் சஞ்சிகையை வெளியிட்டார். அது இரண்டு வெளியீடுகள் வந்தது. அத்துடன் அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் களம் என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராக இருந்தவர். அதைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, நாடகப்பிரதி, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, மேடைப் பேச்சு, சினிமா, நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த பல வருடங்களாக இயங்கி வருபவர். 1980 களில் கல்முனையில் இயங்கிய 'புது மோடிகள்' நாடகக் குழுவின் இயக்குனர்களில் ஒருவராகவும், நடிகராகவும் செயற்பட்டவர்.
 +
 
 +
1981ம் ஆண்டு சிங்கர் நிறுவனத்தின் கல்முனை முகாமையாளராக பணியை ஆரம்பித்து 30 வருடங்கள் வேலை செய்தார். 1989ம் ஆண்டு  இவரது முதலாவது உள்மன யாத்திரை எனும் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. அதன் பின் அரசனின் வருகை எனும் சிறுகதை வெளியிட்டார். இது இந்தியா டுடேயில் வெளியான 'அரசனின் வருகை' என்ற சிறுகதை உமா வரதராஜனின் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
 +
 
 +
படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் 'அரசனின் வருகை', ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலைச் சித்திரிக்கிறது. அதன் பேசுபொருள் ஈழ அரசியலுக்கு மட்டுமன்றி உலக அரசியலுக்கும் பொருந்தக்கூடியது. இந்தக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பின்னர் மூன்றாம் சிலுவை (2009), உமா வரதராஜன் கதைகள் (2011), மோகத்திரை (2019), எல்லாமும் ஒன்றல்ல (2022) போன்ற வெளியீடுகள் வந்தது. இவரின் "அரசனின் வருகை" புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில் the advent of the king என்ற பெயரிலும், 'எலியம்' என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும் "முன் பின் தெரியா நகரில்" என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த in our translated world என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் "Alien city" என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன.
 +
 +
இவரின் எலியம் எனும் சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 க்கான 'தமிழ் இலக்கிய நயம்' பாடத் திட்டத்தில் 2015லிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நூல்களை விமர்சித்துள்ளார்.
 +
 
 +
அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கியவர். அந் நிகழ்ச்சிகளாக 1990-1991 காலப்பகுதியில் ரூபவாஹினியில் 'சங்கமம்', 1991-1994 வரை ரூபவாஹினியில் 'ஊர் கோலம்' கலை, கலாசார நிகழ்ச்சி, 2010-2011 வரை நேத்ரா தொலைக்காட்சியில் 'அழியாத கோலங்கள்' பழைய திரைப்படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி, 2012-2014 வரை நேத்ரா தொலைக்காட்சியில் 'உதிராப் பூக்கள்' பழைய திரைப்படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி) பத்தியெழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். (கீற்று-கிறுக்கல்கள் (1978), களம்-கிறுக்கல்கள் (1992-1998), திசை-திரைக்கோலம் (1989),வீரகேசரி-காலரதம் (1990), மூன்றாவது மனிதன்-கை போன போக்கில் (1999-2000) போன்றன காணப்படுகின்றன.
 +
 
 +
1988-89ல் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசையும், விருதையும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத் துறை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தமிழ் சாகித்திய விழா 1993 ஆண்டின் போது, கொழும்பில் 'தமிழ் மணி' பட்டம் வழங்கி கௌரவித்தது. 2002 ல் இஸ்லாமிய ஆய்வு மையமும், ஸ்ரீலங்காவுக்கான தென்கிழக்கு ஆய்வமைப்பும் இலக்கியத் துறைக்கான விருதை வழங்கியது.
 +
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
வரிசை 19: வரிசை 34:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13389|193-196}}
 
{{வளம்|13389|193-196}}
 +
[[பகுப்பு:அம்பாறை ஆளுமைகள்]]

02:37, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் மாணிக்கம் வரதராஜன்
தந்தை உடையப்பா மாணிக்கம்
தாய் ஞானேஸ்வரி
பிறப்பு 1956.11.19
ஊர் பாண்டிருப்பு , அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் உமா வரதராஜன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கம் வரதராஜன் அவர்கள்(பி. 1956.11.19) அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த எழுத்தாளராவார். இவர் தன் தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார். இவர் 1956ம் ஆண்டு இந்தியாவின் கண்டவராயரன்பட்டி ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் பாண்டிருப்பை சேர்ந்த ஞானேஸ்வரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதனால் பிரபல எழுத்தாளர் டாக்டர் மு. வரதராஜன் அவர்களின் எழுத்துக்களில் கொண்ட ஆர்வம் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வைத்துள்ளார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்திலும் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் தரம் 6 வகுப்பு மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் படிக்கும் போதே இடையில் அப்பாடசாலையில் இருந்து விலகி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் தரம் 6 இலிருந்து சாதாரண தரம் வரை கல்வி கற்றார். அங்கு அப்போதிருந்த தமிழ் ஆசிரியர் எழுத்தாளர் அருட்சகோதரர். எஸ்.ஏ. மத்தியு அவர்கள் மூலம் தமிழிலும் மற்றும் சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் மேலும் அதிகரித்தது. அத்துடன் மருதமுனை நூலகத்தில் பல புத்தகங்களை வாசித்து அதன் மூலம் பல இலக்கியவாதிகளின் எழுத்துக்களை கற்றுக்கொண்டார்.

சாதாரண தரத்திற்கு பின்னர் உயர்தர கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை மூலம் 1973ல், தன்னுடைய 17வது வயதில் இலக்கிய உலகுக்கு இவர் அறிமுகமானார். இக் கட்டுரை தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரான நா. பார்த்தசாரதி அவர்களின் 'தீபம்' இலக்கிய இதழில் வெளியானது. அவர் எழுதிய முதல் சிறுகதை 1974இல் "அந்தப்பார்வை அப்படித்தான் இருக்கும்" என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

அக்காலகட்டத்தில் காலரதம் எனும் சஞ்சிகையை வெளியிட்டார். அது இரண்டு வெளியீடுகள் வந்தது. அத்துடன் அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் களம் என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராக இருந்தவர். அதைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, நாடகப்பிரதி, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, மேடைப் பேச்சு, சினிமா, நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த பல வருடங்களாக இயங்கி வருபவர். 1980 களில் கல்முனையில் இயங்கிய 'புது மோடிகள்' நாடகக் குழுவின் இயக்குனர்களில் ஒருவராகவும், நடிகராகவும் செயற்பட்டவர்.

1981ம் ஆண்டு சிங்கர் நிறுவனத்தின் கல்முனை முகாமையாளராக பணியை ஆரம்பித்து 30 வருடங்கள் வேலை செய்தார். 1989ம் ஆண்டு இவரது முதலாவது உள்மன யாத்திரை எனும் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. அதன் பின் அரசனின் வருகை எனும் சிறுகதை வெளியிட்டார். இது இந்தியா டுடேயில் வெளியான 'அரசனின் வருகை' என்ற சிறுகதை உமா வரதராஜனின் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் 'அரசனின் வருகை', ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலைச் சித்திரிக்கிறது. அதன் பேசுபொருள் ஈழ அரசியலுக்கு மட்டுமன்றி உலக அரசியலுக்கும் பொருந்தக்கூடியது. இந்தக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பின்னர் மூன்றாம் சிலுவை (2009), உமா வரதராஜன் கதைகள் (2011), மோகத்திரை (2019), எல்லாமும் ஒன்றல்ல (2022) போன்ற வெளியீடுகள் வந்தது. இவரின் "அரசனின் வருகை" புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில் the advent of the king என்ற பெயரிலும், 'எலியம்' என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும் "முன் பின் தெரியா நகரில்" என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த in our translated world என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் "Alien city" என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன.

இவரின் எலியம் எனும் சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 க்கான 'தமிழ் இலக்கிய நயம்' பாடத் திட்டத்தில் 2015லிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நூல்களை விமர்சித்துள்ளார்.

அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கியவர். அந் நிகழ்ச்சிகளாக 1990-1991 காலப்பகுதியில் ரூபவாஹினியில் 'சங்கமம்', 1991-1994 வரை ரூபவாஹினியில் 'ஊர் கோலம்' கலை, கலாசார நிகழ்ச்சி, 2010-2011 வரை நேத்ரா தொலைக்காட்சியில் 'அழியாத கோலங்கள்' பழைய திரைப்படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி, 2012-2014 வரை நேத்ரா தொலைக்காட்சியில் 'உதிராப் பூக்கள்' பழைய திரைப்படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி) பத்தியெழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். (கீற்று-கிறுக்கல்கள் (1978), களம்-கிறுக்கல்கள் (1992-1998), திசை-திரைக்கோலம் (1989),வீரகேசரி-காலரதம் (1990), மூன்றாவது மனிதன்-கை போன போக்கில் (1999-2000) போன்றன காணப்படுகின்றன.

1988-89ல் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசையும், விருதையும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத் துறை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தமிழ் சாகித்திய விழா 1993 ஆண்டின் போது, கொழும்பில் 'தமிழ் மணி' பட்டம் வழங்கி கௌரவித்தது. 2002 ல் இஸ்லாமிய ஆய்வு மையமும், ஸ்ரீலங்காவுக்கான தென்கிழக்கு ஆய்வமைப்பும் இலக்கியத் துறைக்கான விருதை வழங்கியது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13389 பக்கங்கள் 193-196