"பகுப்பு:காற்று வெளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
காற்று வெளி இதழ் 2002 ஆம் ஆண்டில் இருந்து இலண்டனில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக ஷோபா விளங்கினார். கவிதைகள் , கட்டுரைகள் , சிறுகதைகள் தாங்கி இந்த இதழ் வெளி வந்தது. இலக்கிய புதுவரவுகள், வெளியீடுகள், சார் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.  
+
காற்றுவெளி இலண்டனிலிருந்து வெளிவரும் ஓர் இதழாகும். இது காலவரையறை எதுவும் இன்றி அவ்வப்போது வெளிவரும். இவ்விதழின் ஆசிரியராக சோபா அவர்கள் காணப்படுகின்றார். இதனை இலங்கையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலரான 'முல்லை அமுதன்' எனும் புனைபெயர் கொண்ட மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் இன்றுவரை வெளியிடுகின்றார். இவ்விதழ் விளம்பரங்கள் எதுவும் இன்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு கலை இலக்கிய இதழ் ஆகும். மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம். 
 +
 
 +
உலகளாவியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு வெளியாகக் காற்றுவெளி காணப்படுகிறது. கவிதை, கட்டுரை, துணுக்குச்செய்திகள், மொழியாக்கம் போன்ற பல படைப்புகள் இவ்விதழில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பிற்கும், கூடுமானவரை நவீன ஓவியங்கள் வரைகலை ஓவியங்களாகத் தரப்பட்டிருக்கின்றன. அது அந்தப் படைப்பின் புரிதலை இன்னும் ஆழப்படுத்தி அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விதழின் அனைத்து வருகையினையும் பின்வரும் வலைத்தளத்தில் பார்வையிட முடியும். https://issuu.com/kaatruveli
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:17, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:காற்று_வெளி&oldid=483544" இருந்து மீள்விக்கப்பட்டது