"ஆளுமை:ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், செல்லையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், [[ஆளுமை:ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாம...) |
|||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்| | பெயர்=ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்| | ||
தந்தை=செல்லையர்| | தந்தை=செல்லையர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், செல்லையர் (1918.02.08 - 1981.04.10) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். இவரது தந்தை செல்லையர். இவர் கல்வி கற்கும் காலங்களில் சங்கீதத்திலும் நாடகத்துறையிலும் ஈடுபாடு உடையவராக விளங்கினார். இவர் சிவசுப்பிரமணியம் ஐயர் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். | |
− | இவர் தனது பதினெட்டாவது வயதில் | + | இவர் தனது பதினெட்டாவது வயதில் முதலாவது கதாப்பிரசங்கத்தை வண்ணை ஶ்ரீமத் வாலம்பிகா சமேத ஶ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நிகழ்த்தினார். இவ்வாறு தொடங்கிய இவரது சங்கீத கதாப்பிரசங்கம் நல்லை கந்தசுவாமி ஆலய உற்சவ காலங்களில் தொடர்ந்தும் நடைபெற்றது. இவர் இலங்கைத் தீவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் சிறந்த கதாப்பிரசங்கியாகத் திகழ்ந்தார். இக்காலத்தில் இவர் ''மணிபாகவதர்'' என்னும் பட்டத்தைப் பெற்றார். அத்தோடு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வல்லவரான இவருக்கு ''முத்தமிழ் மணி'' என்னும் பட்டமும் கிடைக்கப்பெற்றது. |
− | ஆன்மீக | + | ஆன்மீக ஈடேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க விரும்பிய இவர், தென்னிந்தியா சென்று மதுரை ஆதீனகர்த்தா குருமஹாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஶ்ரீஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் சீடனாக மாறி துறவறம் பூண்டார். பின்னர் ஈழம் திரும்பி நல்லூர் முருகனின் கட்டளைப்படி நல்லூரில் ''நல்லை திருஞானசம்பந்த ஆதீனத்தை'' ஸ்தாபித்து முதலாவது குருமஹாசந்நிதானமாக இருந்து சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றி அறப்பணிகள் செய்து ஈழத்தின் தனிப்பெரும் ஆதீன முதல்வராகத் திகழ்ந்தார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|13}} | {{வளம்|7571|13}} | ||
{{வளம்|7474|123-127}} | {{வளம்|7474|123-127}} |
03:54, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் |
தந்தை | செல்லையர் |
பிறப்பு | 1918.02.08. |
இறப்பு | 1981.04.10. |
ஊர் | வண்ணார்ப்பண்ணை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், செல்லையர் (1918.02.08 - 1981.04.10) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். இவரது தந்தை செல்லையர். இவர் கல்வி கற்கும் காலங்களில் சங்கீதத்திலும் நாடகத்துறையிலும் ஈடுபாடு உடையவராக விளங்கினார். இவர் சிவசுப்பிரமணியம் ஐயர் என்னும் இயற்பெயரைக் கொண்டவர்.
இவர் தனது பதினெட்டாவது வயதில் முதலாவது கதாப்பிரசங்கத்தை வண்ணை ஶ்ரீமத் வாலம்பிகா சமேத ஶ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நிகழ்த்தினார். இவ்வாறு தொடங்கிய இவரது சங்கீத கதாப்பிரசங்கம் நல்லை கந்தசுவாமி ஆலய உற்சவ காலங்களில் தொடர்ந்தும் நடைபெற்றது. இவர் இலங்கைத் தீவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் சிறந்த கதாப்பிரசங்கியாகத் திகழ்ந்தார். இக்காலத்தில் இவர் மணிபாகவதர் என்னும் பட்டத்தைப் பெற்றார். அத்தோடு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வல்லவரான இவருக்கு முத்தமிழ் மணி என்னும் பட்டமும் கிடைக்கப்பெற்றது.
ஆன்மீக ஈடேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க விரும்பிய இவர், தென்னிந்தியா சென்று மதுரை ஆதீனகர்த்தா குருமஹாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஶ்ரீஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் சீடனாக மாறி துறவறம் பூண்டார். பின்னர் ஈழம் திரும்பி நல்லூர் முருகனின் கட்டளைப்படி நல்லூரில் நல்லை திருஞானசம்பந்த ஆதீனத்தை ஸ்தாபித்து முதலாவது குருமஹாசந்நிதானமாக இருந்து சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றி அறப்பணிகள் செய்து ஈழத்தின் தனிப்பெரும் ஆதீன முதல்வராகத் திகழ்ந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 13
- நூலக எண்: 7474 பக்கங்கள் 123-127