"நிறுவனம்:அம்/ கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=அம்/ கல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
ஊர்=கல்முனை| | ஊர்=கல்முனை| | ||
முகவரி=அம்மன் கோவில் வீதி, கல்முனை, அம்பாறை| | முகவரி=அம்மன் கோவில் வீதி, கல்முனை, அம்பாறை| | ||
− | தொலைபேசி=| | + | தொலைபேசி=-| |
− | மின்னஞ்சல்=| | + | மின்னஞ்சல்=-| |
− | வலைத்தளம்=| | + | வலைத்தளம்=-| |
}} | }} | ||
− | கல்முனை அம்பலத்தடி ஶ்ரீ விநாயகர் | + | |
+ | |||
+ | கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் ஆனது அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. இதன் வரலாறு இற்றைக்கு 200 வருடங்களுக்கு மேற்பட்டதென அறியப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இவ்வாலயத்தின் இவ்விக்கிரக வழிபாட்டை தொடங்கியவர்கள் பற்றிய பூர்வீக வரலாறை அறியமுடியவில்லை. | ||
+ | |||
+ | ஆனாலும் அம்பலத்தில் விநாயகர் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் புரிந்தமையால் மூலமூர்த்தி அம்பலத்தடி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார். 1960ம் ஆண்டுகளில் வயிரமுத்து எனும் அடியவர் ஒருவர் ஆலயத்திற்குத் தொண்டாற்றி வந்தார். அவரே மக்களின் பிரசாதங்களைப் பிள்ளையாருக்கு படையல் செய்து மணி அடித்து பூசை செய்பவராக இருந்துள்ளார். | ||
+ | |||
+ | இவருக்கு பின்னர் அழகையா என்பவரும் சச்சிதானந்தம் என்பவரும் ஆலயத்திற்குத் தொண்டாற்றியுள்ளனர். இக்காலப்பகுதியில் கல்முனை ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினர் இவ்வாலயத்தை நிருவகித்து வந்தனர். அவ்வாண்டுகளில் மூன்று வேளைப் பூசைகளைச் செய்வதற்கு நிரந்தர பூசகர் ஒருவர் அக்காலத்தில் நியமிக்கப்படவில்லை. | ||
+ | |||
+ | 1986ம் ஆண்டு கல்முனை ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினரால் மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் சைவ அடியார் அமரர். பி.வேலாயுதப்பிள்ளை அவர்கள் ஆலயத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது காலத்தில் பல திருப்பணி வேலைகள் நடைபெற்றன. ஆலயத்தின் முன்புற மதில் கட்டப்பட்டது, ஆலய நிரந்தர பூசகர் நியமிக்கப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றது, வெள்ளிக்கிழமைகளில் கல்முனை பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபா நிலையத்தினர் பஜனைகள் நடாத்தினர், பல பெரியார்களினால் நற்சிந்தனைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. 1990ம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காராணமாக சில காலம் ஆலய பூஜைகள் இடம்பெறாமல் இருந்தாலும் பின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டும் நோக்குடன் அதனைப் பாலஸ்தாபனம் செய்தனர். இவ்வேளையில் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு. சி. செல்வநாயகம் அவர்களும் செயலாளராக திரு.சி. இராஜேஸ்வரன் அவர்களும் பொருளாளராக திரு.க. சச்சிதானந்தனம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். | ||
+ | |||
+ | இவர்களுடன் 8 பேர் கொண்ட நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் ஆலயத்திருப்பணி வேலைகள் மும்முரமாக இடம்பெற்றது. மக்களிடம் நன்கொடைகளும் பெற்று ஆலயத்திற்கான பல வேலைகள் இடம்பெற்றது. மூலஸ்தானம் உட்பட மூன்று மண்டபங்கள் புதிதாக அமைக்கப்படன. கோபுரத்துடன் கூடிய வசந்த மண்டபம் அமைக்கப்பட்டது. மணிக்கோபுரம், முன்வாசல் கோபுரம், புதிய தீர்த்தக் கிணறு போன்றன அமைக்கப்பட்டு அதன் பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது மூன்று வேளைப் பூசைகளும் விசேட பூசைகளும் இடம்பெறுகின்றது. இதன் வருடாந்த தீர்த்தோற்சவம் ஆவணி சதுர்த்தியில் நடைபெறும். அதற்கு முன்னர் 10 நாட்கள் அலங்காரத் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று இறுதி நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும். |
02:28, 14 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அம்/ கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | அம்மன் கோவில் வீதி, கல்முனை, அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் ஆனது அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. இதன் வரலாறு இற்றைக்கு 200 வருடங்களுக்கு மேற்பட்டதென அறியப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இவ்வாலயத்தின் இவ்விக்கிரக வழிபாட்டை தொடங்கியவர்கள் பற்றிய பூர்வீக வரலாறை அறியமுடியவில்லை.
ஆனாலும் அம்பலத்தில் விநாயகர் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் புரிந்தமையால் மூலமூர்த்தி அம்பலத்தடி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார். 1960ம் ஆண்டுகளில் வயிரமுத்து எனும் அடியவர் ஒருவர் ஆலயத்திற்குத் தொண்டாற்றி வந்தார். அவரே மக்களின் பிரசாதங்களைப் பிள்ளையாருக்கு படையல் செய்து மணி அடித்து பூசை செய்பவராக இருந்துள்ளார்.
இவருக்கு பின்னர் அழகையா என்பவரும் சச்சிதானந்தம் என்பவரும் ஆலயத்திற்குத் தொண்டாற்றியுள்ளனர். இக்காலப்பகுதியில் கல்முனை ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினர் இவ்வாலயத்தை நிருவகித்து வந்தனர். அவ்வாண்டுகளில் மூன்று வேளைப் பூசைகளைச் செய்வதற்கு நிரந்தர பூசகர் ஒருவர் அக்காலத்தில் நியமிக்கப்படவில்லை.
1986ம் ஆண்டு கல்முனை ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினரால் மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் சைவ அடியார் அமரர். பி.வேலாயுதப்பிள்ளை அவர்கள் ஆலயத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது காலத்தில் பல திருப்பணி வேலைகள் நடைபெற்றன. ஆலயத்தின் முன்புற மதில் கட்டப்பட்டது, ஆலய நிரந்தர பூசகர் நியமிக்கப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றது, வெள்ளிக்கிழமைகளில் கல்முனை பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபா நிலையத்தினர் பஜனைகள் நடாத்தினர், பல பெரியார்களினால் நற்சிந்தனைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. 1990ம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காராணமாக சில காலம் ஆலய பூஜைகள் இடம்பெறாமல் இருந்தாலும் பின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டும் நோக்குடன் அதனைப் பாலஸ்தாபனம் செய்தனர். இவ்வேளையில் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு. சி. செல்வநாயகம் அவர்களும் செயலாளராக திரு.சி. இராஜேஸ்வரன் அவர்களும் பொருளாளராக திரு.க. சச்சிதானந்தனம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் 8 பேர் கொண்ட நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் ஆலயத்திருப்பணி வேலைகள் மும்முரமாக இடம்பெற்றது. மக்களிடம் நன்கொடைகளும் பெற்று ஆலயத்திற்கான பல வேலைகள் இடம்பெற்றது. மூலஸ்தானம் உட்பட மூன்று மண்டபங்கள் புதிதாக அமைக்கப்படன. கோபுரத்துடன் கூடிய வசந்த மண்டபம் அமைக்கப்பட்டது. மணிக்கோபுரம், முன்வாசல் கோபுரம், புதிய தீர்த்தக் கிணறு போன்றன அமைக்கப்பட்டு அதன் பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது மூன்று வேளைப் பூசைகளும் விசேட பூசைகளும் இடம்பெறுகின்றது. இதன் வருடாந்த தீர்த்தோற்சவம் ஆவணி சதுர்த்தியில் நடைபெறும். அதற்கு முன்னர் 10 நாட்கள் அலங்காரத் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று இறுதி நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும்.