"ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியர் பக்கத்தை [[ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கை...)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியர்|
+
பெயர்=பரராசசேகரன்|
 
தந்தை=கனகசூரிய சிங்கையாரியன்|
 
தந்தை=கனகசூரிய சிங்கையாரியன்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிங்கை பரராசசேகரன் ( - 1519) யாழ்பாணம், நல்லூரை அரசாண்ட மன்னர். இவரது தந்தை கனகசூரிய சிங்கையாரியன். சப்புமல் குமாரய்யாவின் பகைக்கு அஞ்சிய கனகசூரிய சிங்கையாரியன் பரராசசேகரனையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு தொண்டை நாட்டிலிருக்கும் திருக்கோவிலூரிற்கு சென்று வாழ்ந்துவந்தான். தொண்டைமண்டல புலவர் ஒருவரிடத்தில் தனது மைந்தர்களுக்கு தமிழைப் புகட்டி 14ஆண்டுகளின் பின் மைந்தர்களோடு படைதிரட்டிவந்து பகையரசை வென்று 1467இல் மீண்டும் அரசனானதோடு பரராசசேகரனை இளவரசனாக்கினான். 11ஆண்டுகளில் இவன் இறந்துபோக பரராசசேகரன் அரசனானான்.  
+
சிங்கைப் பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியன் ( - 1519) யாழ்ப்பாணம், நல்லூரை அரசாண்ட மன்னர். இவரது தந்தை கனகசூரிய சிங்கையாரியன். சப்புமல் குமாரய்யாவின் பகைக்கு அஞ்சிய கனகசூரிய சிங்கையாரியன் பரராசசேகரனையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு தொண்டை நாட்டிலிருக்கும் திருக்கோவிலூரிற்குச் சென்று வாழ்ந்து வந்தான். தொண்டைமண்டலப் புலவர் ஒருவரிடம் தனது மைந்தர்களுக்குத் தமிழைப் புகட்டி 14 ஆண்டுகளின் பின் மைந்தர்களோடு படை திரட்டி வந்து பகையரசை வென்று 1467 இல் மீண்டும் அரசனானதோடு பரராசசேகரனை இளவரசனாக்கினான். இவன் 11 ஆண்டுகளில் இறந்து போக பரராசசேகரன் அரசனானான்.  
  
பகையரசால் யாழ்ப்பாண தமிழ் அரசுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்களை திருத்தி மிண்டும் போலிவுறச் செய்தவன் சிங்கை பரராசசேகரனே. இவன் அரசேற்றதும் யாழ்ப்பாண அரசின் நலனை காப்பதில் மிக தீவிரமாக செயற்பட்டான். யாழ்ப்பாண அரசின் வருவாயை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு மாந்தை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களை புதுப்பித்து மீண்டும் பிற நாடுகளோடு வணிகம் இடம்பெற வழி வகுத்தான். கடல் வழி வணிகத்தையும் யாழ்ப்பாண அரசுக்கு பெரும் வருவாயீட்டித்தரும் மன்னார் முத்துக்குளிக்கும் கடற்பரப்பையும் பாதுகாக்கும் வண்ணம் கடற்படையை மேல்கூறிய துறைமுகங்களில் நிறுத்திவைத்தான். மேலும் சிங்கள அரசுகளால் வரக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கும் வண்ணம் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தரைப்படைகளை புத்தளம், மாந்தை, திருகோணமலை மற்றும் வன்னி போன்ற இடங்களில் அரணமைத்து நிறுத்திவைத்தான். மிக குறுகியகாலத்தில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாண அரசை கட்டியெழுப்பினான்.  
+
பகையரசால் யாழ்ப்பாணத் தமிழ் அரசுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்களைத் திருத்தி மிண்டும் பொலிவுறச் செய்தவன் சிங்கைப் பரராசசேகரன். இவன் அரசேற்றதும் யாழ்ப்பாண அரசின் நலனைக் காப்பதில் தீவிரமாகச் செயற்பட்டான். யாழ்ப்பாண அரசின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு மாந்தை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறைத் துறைமுகங்களைப் புதுப்பித்து மீண்டும் பிற நாடுகளோடு வணிகம் இடம்பெற வழி வகுத்தான். கடல் வழி வணிகத்தையும் யாழ்ப்பாண அரசுக்குப் பெரும் வருவாயீட்டித்தரும் மன்னார் முத்துக்குளிக்கும் கடற்பரப்பையும் பாதுகாக்கும் வண்ணம் கடற்படையைத் துறைமுகங்களில் நிறுத்தி வைத்தான். மேலும் சிங்கள அரசுகளால் வரக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர் நோக்கும் வண்ணம் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தரைப்படைகளைப் புத்தளம், மாந்தை, திருகோணமலை மற்றும் வன்னி போன்ற இடங்களில் அரணமைத்து நிறுத்தி வைத்தான். மிகக் குறுகிய காலத்தில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாண அரசைக் கட்டியெழுப்பினான்.  
  
தமிழை வளர்க்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியதோடு பல பாடசாலைகளை உருவாக்கி கல்வியறிவை பரப்பினான். சப்புமல் குமாரயாவினால் அழிக்கப்பட்ட சரஸ்வதி மகாலயம் என்னும் நூலகத்தை புதுபித்து, யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் நிறுவி அதற்கு வேண்டிய நூல்களை வடகரையில் இருந்து பெற்றதோடு இராமேஸ்வரத்தில் படி எழுதும் பட்டறைகள் பல நடத்தினான். சிங்கை பரராசசேகரன் கவி பாடுவதில் மிகுந்த ஆற்றலுடையவனாக இருந்ததோடு சில ஆயிரம் தனி நிலைச் செய்யுள்களை பாடியுள்ளான். அவைகளும், மிக மிக அரிய நூல்களும் வைக்கப்படிருந்த  சரஸ்வதி மகாலயம் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.  
+
தமிழை வளர்க்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியதோடு, பல பாடசாலைகளை உருவாக்கிக் கல்வியறிவைப் பரப்பினான். சப்புமல் குமாரயாவினால் அழிக்கப்பட்ட சரஸ்வதி மகாலயம் என்னும் நூலகத்தைப் புதுப்பித்து, யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் நிறுவி அதற்கு வேண்டிய நூல்களை வடகரையில் இருந்து பெற்றதோடு இராமேஸ்வரத்தில் படி எழுதும் பட்டறைகள் பல நடத்தினான். சிங்கைப் பரராசசேகரன் கவி பாடுவதில் மிகுந்த ஆற்றலுடையவனாக இருந்ததோடு சில ஆயிரம் தனி நிலைச் செய்யுள்களைப் பாடியுள்ளான். அவைகளும், மிக மிக அரிய நூல்களும் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி மகாலயம் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:22, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரராசசேகரன்
தந்தை கனகசூரிய சிங்கையாரியன்
பிறப்பு
இறப்பு 1519
ஊர்
வகை மன்னர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிங்கைப் பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியன் ( - 1519) யாழ்ப்பாணம், நல்லூரை அரசாண்ட மன்னர். இவரது தந்தை கனகசூரிய சிங்கையாரியன். சப்புமல் குமாரய்யாவின் பகைக்கு அஞ்சிய கனகசூரிய சிங்கையாரியன் பரராசசேகரனையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு தொண்டை நாட்டிலிருக்கும் திருக்கோவிலூரிற்குச் சென்று வாழ்ந்து வந்தான். தொண்டைமண்டலப் புலவர் ஒருவரிடம் தனது மைந்தர்களுக்குத் தமிழைப் புகட்டி 14 ஆண்டுகளின் பின் மைந்தர்களோடு படை திரட்டி வந்து பகையரசை வென்று 1467 இல் மீண்டும் அரசனானதோடு பரராசசேகரனை இளவரசனாக்கினான். இவன் 11 ஆண்டுகளில் இறந்து போக பரராசசேகரன் அரசனானான்.

பகையரசால் யாழ்ப்பாணத் தமிழ் அரசுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்களைத் திருத்தி மிண்டும் பொலிவுறச் செய்தவன் சிங்கைப் பரராசசேகரன். இவன் அரசேற்றதும் யாழ்ப்பாண அரசின் நலனைக் காப்பதில் தீவிரமாகச் செயற்பட்டான். யாழ்ப்பாண அரசின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு மாந்தை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறைத் துறைமுகங்களைப் புதுப்பித்து மீண்டும் பிற நாடுகளோடு வணிகம் இடம்பெற வழி வகுத்தான். கடல் வழி வணிகத்தையும் யாழ்ப்பாண அரசுக்குப் பெரும் வருவாயீட்டித்தரும் மன்னார் முத்துக்குளிக்கும் கடற்பரப்பையும் பாதுகாக்கும் வண்ணம் கடற்படையைத் துறைமுகங்களில் நிறுத்தி வைத்தான். மேலும் சிங்கள அரசுகளால் வரக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர் நோக்கும் வண்ணம் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தரைப்படைகளைப் புத்தளம், மாந்தை, திருகோணமலை மற்றும் வன்னி போன்ற இடங்களில் அரணமைத்து நிறுத்தி வைத்தான். மிகக் குறுகிய காலத்தில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாண அரசைக் கட்டியெழுப்பினான்.

தமிழை வளர்க்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியதோடு, பல பாடசாலைகளை உருவாக்கிக் கல்வியறிவைப் பரப்பினான். சப்புமல் குமாரயாவினால் அழிக்கப்பட்ட சரஸ்வதி மகாலயம் என்னும் நூலகத்தைப் புதுப்பித்து, யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் நிறுவி அதற்கு வேண்டிய நூல்களை வடகரையில் இருந்து பெற்றதோடு இராமேஸ்வரத்தில் படி எழுதும் பட்டறைகள் பல நடத்தினான். சிங்கைப் பரராசசேகரன் கவி பாடுவதில் மிகுந்த ஆற்றலுடையவனாக இருந்ததோடு சில ஆயிரம் தனி நிலைச் செய்யுள்களைப் பாடியுள்ளான். அவைகளும், மிக மிக அரிய நூல்களும் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி மகாலயம் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 50-51
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 7-9
  • நூலக எண்: 963 பக்கங்கள் 171

வெளி இணைப்புக்கள்