"நூலகம் பேச்சு:நிதிப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (→செயற்றிட்டங்களும் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகளும்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 71: | வரிசை 71: | ||
# சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் அறிவுருவாக்கம் சார்ந்து தனித்தன்மையுடையனவாக இருக்கும். | # சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் அறிவுருவாக்கம் சார்ந்து தனித்தன்மையுடையனவாக இருக்கும். | ||
− | எழுந்தமானச் செயற்பாட்டில் செய்யப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை, நிதிப் பயன்பாடு ஆகிய இரு விபரங்களும் தெரியுமாதலால் அதனை ஏனைய மின்னூலாக்கங்களுடன் ஒரு செயற்றிட்டத்தின் கீழ் இணைப்பது சாத்தியம் என்றே படுகிறது. [[பயனர்:கோபி|கோபி]] 06:13, 24 அக்டோபர் 2008 (UTC) | + | எழுந்தமானச் செயற்பாட்டில் செய்யப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை, நிதிப் பயன்பாடு ஆகிய இரு விபரங்களும் தெரியுமாதலால் அதனை ஏனைய மின்னூலாக்கங்களுடன் ஒரு செயற்றிட்டத்தின் கீழ் இணைப்பது சாத்தியம் என்றே படுகிறது. ஆனால் அது ஒரு சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடாக இருக்காது. [[பயனர்:கோபி|கோபி]] 06:13, 24 அக்டோபர் 2008 (UTC) |
:ஓர் எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாவலர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி நூறு பிரதிகளைக் கூட எட்டாது. 10,000 மின்னூல்கள் இருந்தால் கூட அது தனித்தன்மையுடையதே. ஆயினும் அதனை ஒரு செயற்றிட்டமாக அறிவிப்பதென்பது பொருத்தமற்றது. ஆனால் அறிவுருவாக்க முக்கியத்துவம் சார்ந்து அதற்கான தனி அறிக்கையிடலின் தேவை உள்ளது. எண்ணிக்கை-முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொள்வதென்பது இவ்விடத்தில் பொருத்தமாகவும் இருக்காது. ஆனால் குறித்த நிதியாண்டின் குறித்த ஒரு செயற்றிட்டத்தின் கீழ் அதன் நிதி, வளப் பயன்பாட்டை அறிக்கையிடுவதுடன் அதனைச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகவும் அறிக்கையிட வேண்டும். | :ஓர் எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாவலர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி நூறு பிரதிகளைக் கூட எட்டாது. 10,000 மின்னூல்கள் இருந்தால் கூட அது தனித்தன்மையுடையதே. ஆயினும் அதனை ஒரு செயற்றிட்டமாக அறிவிப்பதென்பது பொருத்தமற்றது. ஆனால் அறிவுருவாக்க முக்கியத்துவம் சார்ந்து அதற்கான தனி அறிக்கையிடலின் தேவை உள்ளது. எண்ணிக்கை-முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொள்வதென்பது இவ்விடத்தில் பொருத்தமாகவும் இருக்காது. ஆனால் குறித்த நிதியாண்டின் குறித்த ஒரு செயற்றிட்டத்தின் கீழ் அதன் நிதி, வளப் பயன்பாட்டை அறிக்கையிடுவதுடன் அதனைச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகவும் அறிக்கையிட வேண்டும். | ||
வரிசை 78: | வரிசை 78: | ||
:இதழகம், முகப்புச் செயற்றிட்டம் ஆகிய சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் 2008-09 நிதியாண்டிலிருந்தும் 2009-10 நிதியாண்டிலிருந்தும் அதன்பின்னருங் கூட நிதி ஒதுக்கீடுகளைப் பெறும். ஆனால் நிதி ஒதுக்கீடுகளும் அது தொடர்பான அறிக்கையிடலும் குறித்த ஆண்டுகளுக்கானவையாக இருக்கும். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 06:53, 24 அக்டோபர் 2008 (UTC) | :இதழகம், முகப்புச் செயற்றிட்டம் ஆகிய சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் 2008-09 நிதியாண்டிலிருந்தும் 2009-10 நிதியாண்டிலிருந்தும் அதன்பின்னருங் கூட நிதி ஒதுக்கீடுகளைப் பெறும். ஆனால் நிதி ஒதுக்கீடுகளும் அது தொடர்பான அறிக்கையிடலும் குறித்த ஆண்டுகளுக்கானவையாக இருக்கும். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 06:53, 24 அக்டோபர் 2008 (UTC) | ||
+ | |||
+ | அடுத்த வருடத்தில் இருந்து சிறிய செயற்திட்டங்களை அல்லது எழுந்தமான மின்பிரதியாக்கம் சார்ந்த செயற்திட்டங்களை தவிர்த்து அறிவுருவாக்கம் அல்லது முழுமை சார்ந்த செயற்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு மயூரனிடம் கூறியிருந்தேன். (அதாவது தற்போது பெயரிடப்பட்டபட்டுள்ள 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்னும் பதம்.) | ||
+ | |||
+ | ஏனெனில் வரும் வருடத்தில் தொடங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்த செயற்திட்டமும் குரும்பசிட்டி கனகரத்தினம் செயற்திட்டமும் நூலகத்திற்கு போதியளவான எண்ணிக்கை சார்ந்த அடைவுகளை எமக்கு அளிக்கும் என எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில் எழுந்தமான செயற்திட்டங்களுக்கான உந்துகைகளைக் குறைத்து ஆய்வு அடிப்படையான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பது சாரப்படவே எனது கருத்து அமைந்திருந்தது. அவற்றை வகைப்படுத்துவதில் இரண்டுவிதங்கள் தவிர்த்த 3 விடயங்களை எண்ணியிருந்தேன். | ||
+ | |||
+ | இந்நிலையில் சில கருத்துக்கள் முக்கியமானவை. | ||
+ | 1. நூலகம் தொட்டக்க காலத்தில் முக்கியமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் அவை வரைமுறை என்பதைத் தாண்டியே அமைந்திருந்தன. முகப்புச் செயற்திட்டம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம் போன்றவை எழுந்தமானமாக அமையாத போதிலும் அவை 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்னும் பகுதிக்குள் அடங்க முடியாதவை. அவற்றை வரையறைகளுக்கு உட்பட்ட எழுந்தமானச் செயற்பாடுகளாக மட்டுமே கொள்ள முடியும். | ||
+ | |||
+ | 2. செயற்திட்டங்களைப் பொறுத்தவரை 'நூலகம்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' செயற்திட்டமே மேற்கூறிய 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்ற வகை மாதிரியின் முதலாவது செயற்திட்டம் எனலாம். அடுத்து 'மல்லிகை செயற்திட்டம்' மற்றும் 'இதழகம் செயற்திட்டம்' போன்றவை இவ்வகையில் வரக் கூடியவை. இவை மட்டுமே முழுமையான பரப்புக்களை வரையக் கூடியவை. இவ்விடத்தில் முகப்புச் செயற்திட்டமோ அல்லது புலம்பெயர் சஞ்சிகைகள் திட்டமோ தம்மை தகவமைக்க முடியாதவை எனக் கருதுகின்றேன். | ||
+ | |||
+ | 3. நிதியாண்டு வசதியை வைத்து நாம் இவற்றை வகைப்படுத்துவது உகந்தது அல்ல. அவற்றின் உள்ளடக்கம் மற்றும் முழுமை பற்றியே இவற்றை வகைப்படுத்திவிட முடியும் என நினைக்கிறேன். இவகையில் வரமுடியாத புலம்பெயர் சஞ்சிகள் செயற்திட்டம் போன்றவற்றிற்கு இடைநிலையில் சில ஒழுங்கமைவுகளைக் கட்டு அவற்றின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். | ||
+ | |||
+ | ஆக, | ||
+ | * எழுந்தமானமாக செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் முதலாவது வகையில் வரும். அவை தமக்குள் சில தெரிவுகளைக் கொண்டமைந்த போதிலும் அவற்றை இவ்வகைக்குள் அடக்கிவிட முடியும். | ||
+ | அ) நூலகம்:மறுமலர்ச்சி மின்னூலாக்கத் திட்டம் | ||
+ | ஆ) நூலகம்:தட்டெழுதற் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் 2006 | ||
+ | இ) நூலகம்:தட்டெழுதற் செயற்றிட்டம், கொழும்பு 2007 | ||
+ | ஈ) நூலகம்:மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2007 | ||
+ | உ) நூலகம்:திருக்கோணமலை மின்பிரதிச் செயற்றிட்டம், 2008 | ||
+ | |||
+ | * சில எல்லைகளை வகுத்துக் கொண்டு செய்யப்பட்ட மின்பிரதியாக்கங்களும் செயற்திட்டங்களும். இவை சில முழுமைகளை வரைந்தாலும் நூலகம் என்கின்ற உள்ளடக்க உருவாக்கம் சார்ந்து அவற்றின் முழுமை எவ்வித தாக்கத்தைச் செலுத்துகின்றது என்பதைக் கருதிக்கொள்ள வேண்டும். | ||
+ | அ) நூலகம்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம் | ||
+ | ஆ) நூலகம்:முகப்புச் செயற்திட்டம், 2008 | ||
+ | இ) நூலகம்:'குரும்பசிட்டி கனகரத்தினம்' செயற்றிட்டம். | ||
+ | ஈ) நூலகம்: கொழும்பு தமிழ்ச்சங்க மின்பிரதியாக்கம். | ||
+ | |||
+ | * உள்ளடக்க ரீதியாக முழுமைகளை நோக்கி நகர்பவையாக இருப்பவை மூன்றாவது வகைமாதிரியில் வரும். இவையே நூலகம் என்ற உள்ளடக்க சேமிப்பு என்ற கருத்துருவாக்கத்தின் மீது நேரடியாக முழுமைகளை நிகழ்த்தும் செயற்திட்டங்களாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத்தில் நூலகத்தின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பலன் தரக்கூடிய விடயங்கள் எனக் கருதுகின்றேன். | ||
+ | அ) நூலகம்:இதழகம் செயற்றிட்டம் | ||
+ | |||
+ | மயூரனால் செய்யப்பட்ட/படும் திருகோணமலைச் செயற்திட்டம் மற்றும் மல்லிகைச் செயற்திட்டம் போன்றவற்றில் காணப்படும் முழுமைகளைப் பொறுத்து சில விடயங்களை செய்ய வேண்டும். அவற்றை எண்ணிக்கை சார்ந்து ஒன்றிணைப்பதெ நல்லது என்பது எனது கருத்து. ஆயினும் அவற்றில் சில முழுமைகள் காணப்படுகின்றன. உதாரணமாக மல்லிகை, பெயர், ஆகவே போன்ற விடயங்கள். ஆயினும் மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2007 இலும் இதே மாதிரியான சில முழுமைகள் அடையப்பட்டன என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆக, திருக்கோணமலை செயற்திட்டம் மற்றும் மல்லைகைத் திட்டம் போன்றவற்றை இணைத்து இரண்டாவது வகைக்குள் இடலாம் என்பது எனது நிலைப்பாடு. | ||
+ | |||
+ | நன்றி. | ||
+ | [[பயனர்:Shaseevan|Shaseevan]] 08:08, 24 அக்டோபர் 2008 (UTC) | ||
+ | |||
+ | விரிவான கருத்துக்களுக்கு நன்றி. நிதியாண்டை முன்வைத்துச் செயற்றிட்டங்களை வகைப்படுத்துவதாக என் கருத்துக்களை முன்வைக்கவில்லை. | ||
+ | ''மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2008'' இன் கீழ் எழுந்தமான மின்பிரதியாக்கம், முகப்புச் செயற்றிட்டம், இதழகம், புலம்பெயர் இதழ்கள் மின்பிரதியாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைக்கலாம் என எண்ணினேன். | ||
+ | |||
+ | இது ஒழுங்கமைப்பதன் வசதி கருதி மட்டும் தான். சிறியதாக இருந்த சில திட்டங்களை மின்பிரதியாக்கத் திட்டம், கொழும்பு 2007 இன் இரண்டாங்கட்டத்துடன் இணைத்துப் பின்னர் இரண்டு கட்டங்களையும் இணைத்தமை போல. உண்மையில் மூன்றாவது கண் தொடர்பான மின்பிரதியாக்கமும் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடாக வருவதே. | ||
+ | |||
+ | எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட நிதியாண்டுகளுக்குத் தொடரும் செயற்றிட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அச்செயற்றிட்டங்கள் குறித்த நிதியாண்டிற்கான செயற்பாடுகள் தொடர்பில் இடைநிலை அறிக்கைகளைச் சமர்பிக்க வேண்டியதன் தேவையை இவ்வுரையாடல் சுட்டி நிற்கிறது. நன்றி. | ||
+ | |||
+ | [[பயனர்:கோபி|கோபி]] 15:51, 24 அக்டோபர் 2008 (UTC) |
09:51, 24 அக்டோபர் 2008 இல் கடைசித் திருத்தம்
எழுந்தமானமாகச் செய்யப்பட்ட மின்பிரதியாக்கங்களே 2008 இல் 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' என்பதாகப் பெயரிடப்பட்டன. அவற்றை அவ்வாறு பெயரிட்டதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
1. அதன் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட நூல்களின் முழுமையான விபரங்கள் என்னிடம் இல்லை. மற்றைய திட்டங்களின் மூலம் ஆவணப்படுத்தப்படும் விபரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்ற போதிலும் 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' இன் கீழ் ஆவணப்படுத்தப்பட்ட விபரங்கள் என்னிடம் இல்லை. ஆகையால் அதனை தனிச் செயற்திட்டமாக அறிவிக்க முடியாது எனக் கருதினேன்.
2. செயற்திட்டங்கள் என்னும் போது அவை ஓரளவு பெரிதாக இருப்பது பயன் தருவதாகும். ஆரம்ப காலங்களில் செய்யப்பட்ட திட்டங்கள் சிறிதாக இருப்பினும் நூலகத்தின் மொத்த பிரதிகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அவை பெரிதாக இருந்தமையால் அவற்றை தனிச் செயற்திட்டமாக அறிவிக்க முடியும். (இதன்படி கொழும்பு மின்பிரதியாக்கம்,2007 இரண்டு கட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.) ஆயினும் நூலக எண் 2000 தாண்டிய நிலையில் 200, 300 விடயங்களை தனிச் செயற்திட்டமாக அறிவிப்பது பலன்தரக்கூடிய விடயம் அல்லவென நினைக்கிறேன்.
மேற்கூறிய இரண்டு காரணங்களாலே 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' என்று பெயரிடப்பட்டது.
மேலும், மயூரன் தற்போது ஒன்றிணைக்கும் இரண்டு திட்டங்களான திருக்கோணமலை மின்பிரதியாக்கம்,2008 மற்றும் மல்லிகைத் திட்டம் போன்றவற்றை ஒரு திட்டத்தின் இரு பகுதிகளாக இணைப்பது நல்லது என்பது எனது எண்ணம். மல்லிகை மின்பிரதியாக்கத்தின் மூலம் அண்ணளவக 4000 பக்கங்களே ஆவணப்படுத்தப்படும். முழுமைப்படுத்தல் என்ற அளவில் (qualitative) அவை முக்கியம் என்ற போதிலும், ஆவணப்படுத்தலின் அளவுடன் (quantitative) ஒப்பிடும் போது அவை முக்கியம் குறைந்தவை ஆகின்றன. இதனை விட மூனாவது விடயம் நூலகத்தின் மொத்தப் பிரதிகள்ன் எண்ணிக்கை சார்ந்தது.
Shaseevan 05:33, 23 அக்டோபர் 2008 (UTC)
நூலகத்தின் செயற்றிட்டங்கள் முடிந்த அளவு பெரியவையாக இருப்பது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கியமானது என்பது உண்மை. ஒரு மின்னூலாக்கமென்றாலும் முக்கியமே என்றாலும் செயற்றிட்டங்கள் எனப் பொறுப்பெடுக்கப்படுபவை சிறியவையாக இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
எழுந்தமானதாக இருப்பினும் அதனை ஒருங்கிணைப்பதற்கான உழைப்பு, அதற்கு நூலக நிதியிலிருந்தான ஒதுக்கீடு, மூலப் பிரதிகளை வழங்கிய விபரம் போன்றவற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஆயினும் தனிச் செயற்றிட்டமாகக் காட்டுவதில் எனக்கும் தயக்கங்கள் உள்ளன.
மல்லிகை மின்பிரதியாக்கம் ஒருவிதத்தில் இதழகச் செயற்றிட்டத்தின் சில பணிகளை நிறைவு செய்கிறது. ஆனால் அதனை இதழகத்தின் கீழ் ஒருங்கிணைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. மல்லிகை மின்னூலாக்கம் முழுமையடைகையில் அதனை அறிக்கையிடுவது பயனுள்ளதாயிருக்கும். அதேபோல இதழகத்தின் கீழ் அது தொடர்ச்சியாக ஆவணப்படுத்துவதற்கான ஒழுங்குகள் அறிக்கையிடப்படுவதும் பயனுள்ளதாக இருக்கும்.
அதே வேளை மல்லிகை அனைத்து இதழ்களையும் ஆவணப்படுத்துவதென்பது இந்த ஆண்டின் கீழ் முழுமையடையும் என்பது சாத்தியமாகாமல் போகலாம். நான்கைந்து இதழ்கள் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஆவணப்படுத்தப்பட்டுத்தான் முழுமை ஏற்படுமெனின் அப்பொழுதுதான் மல்லிகை மின்பிரதியாக்கமும், இதழகத்தின் ஒரு பகுதி வேலையும் முழுமையாகும். ஆனால் நூலகத் திட்டத்தின் அறிக்கையிடலில் இவற்றை முறையாகச் சேர்ப்பது சாத்தியமல்ல.
இந்த வகையில் qualitative, quantitative அம்சங்களைத் தனித்தனியாக அணுகுவது நல்ல தீர்வாக இருக்கலாம் என்று எனக்குப் படுகிறது. இதனைக் கருத்தில் எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையில் இப்போதுள்ள நிதி அறிக்கை கூட பொருத்தமற்றதே. நிதி வருமதிகள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டாலும் செலவு விபரங்கள் ஒவ்வொரு நிதியாண்டுக்குமாகவே (மார்ச் 31 வரை) தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறே நூலகத்தின் அறிக்கையிடலும் அமைவது சரியானது. ஒவ்வொரு நிதியாண்டுக்குமான நிதிப் பயன்பாடு அவ்வவ் ஆண்டுகளுக்கானவையாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் நூலகத்தின் செயற்றிட்டங்களை ஒழுங்கமைப்பது சரியெனப் படுகிறது. இதழகம் குறிப்பிட்ட இதழ்களை முழுமைப்படுத்தி அவற்றின் புதிய எண்களை உடனுக்குடன் வெளியிட உள்ளது; மல்லிகைத் திட்டம் மல்லிகையை முழுமையாக்க உள்ளது; முகப்புச் செயற்றிட்டம் நூலக முகப்பில் தொடர்ச்சியாக புதிய வெளியீடுகளைக் காட்சிப்படுத்துகிறது. இவையெல்லாமே qualitative இன் கீழ் வருபவையே. அவற்றின் செயற்பாடு, முழுமை தொடர்பில் அறிக்கையிடுவது அவசியமே.
ஆனால் நூலகத்தின் செயற்றிட்டங்களின் கீழ் இவற்றை உப பிரிவுகளாகக் காட்டலாம் என்றே படுகிறது.
அவ்வகையில் திருக்கோணமலை மின்னூலாக்கம், மல்லிகைத் திட்டம் ஆகியவற்றின் கீழான மின்னூலாக்கத்தை ஒரு செயற்றிட்டமாகவும் முகப்புச் செயற்றிட்டம், இதழகம், எழுந்தமான மின்னூலாக்கம் ஆகியவை மூலம் மின்னூலாக்கப்பட்டவற்றை இன்னொரு செயற்றிட்டமாகவும் ஒருங்கிணைக்கலாம். இந்த ஒருங்கிணைப்பு quantitative சார்ந்த்து மட்டுமே. 2009 மார்ச் 31 உடனோ அதற்கு முன்னரோ இவை நிறைவடையும். அதன்பின்னரான செயற்பாடுகள் புதிய செயற்றிட்டங்களாக இருக்கும்.
அதே வேளை qualitative சார்ந்து ஒவ்வொரு முழுமையிலும் அறிக்கையிடுவதும் தேவையானதே. அந்த அறிக்கையிடல் நிதியாண்டுகள் சார்ந்து இல்லாமல் அவற்றின் செயற்பாடு சார்ந்து அமையும். அவ்வகையில் மல்லிகைத் திட்டமோ, இதழகமோ எடுத்துக் கொண்ட பணிகள் முழ்மையடைகையில் (அது இரு மாதங்களோ இரு ஆண்டுகளோ) அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியும்.
நன்றி.
கோபி 00:48, 24 அக்டோபர் 2008 (UTC)
1. எனக்கு இலகுவாகக் கிடைத்த பிரதிகள் மற்றும் நூலகத்திற்கு தனிப்பட்டவர்கள் அனுப்பி வைத்த பிரதிகளுமாக செய்யப்பட்ட மின்பிரதியாக்கங்களின் பூரண விபரம் என்னிடம் இல்லை. அவையே அப்பகுதியில் வந்துள்ளவையாகும். ஆக, அடுத்த ஆண்டில் இருந்து செய்யப்படும் எழுந்தமான மின்பிரதியாக்கங்களுக்குப் புதிய செயற்திட்டம் எனப் பெயரிட முடியும் என நினைக்கிறேன்.
2. செயற்திட்டங்களை ஒருங்கிணைப்பவர்களை மையமாக வைத்து அவற்றின் நகர்வு இருக்குமாகையால் செயற்திட்டங்கள் தமக்குள் ஒன்றுபட்டிருந்தாலும் ஒருங்கிணைப்பாளரால் தொடர்புபடுவதே அதிகம் பயனுள்ளது.
3. qualitative, quantitative சேர்ந்ததாக செயற்திட்டங்கள் இருப்பதே எதிர்காலத்தின் பயன் தருவதாகும். 2009 ஆம் ஆண்டின் இறுதியில் 10 000 இலக்குகளை கொண்டு நகரும் போது சிறிய அளவிலான மின்பிரதியாக்கங்களை தனிச்செயற்திட்டமாகக் கருத முடியாது. qualitative, quantitative தவிர நூலகத்தின் மொத்த பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் செயற்திட்டத்திற்கன செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட முடியும்.
4. செலவு விபரங்கள் மற்றும் நிதியாண்டை மார்ச் 31 என நிர்ணயிப்பது உகந்தது எனவே நினைக்கிறேன்.
5. முகப்புச் செயற்திட்டம், ஏற்கனவே தினம் ஒரு மின்னூல் என்பதை தொடர முடியாத நிலையில் உருவான திட்டமாகும். தினம் ஒரு மின்னூல் திட்டத்தில் நூல்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டன. ஆயினும் வாரம் ஒரு மின்னூலின் கீழ் முக்கியமான அரிதன நூல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. மேலும் முகப்புச் செயற்திட்டம் 2009 ஆம் ஆண்டின் இறுதிவரை தொடரும். ஆகையால் பணக்கொடுப்பனவில் கூட அத்திட்டம் தனித்தன்மையானது. அண்ணளவாக 200 நூல்கள் (நூல்கள் மட்டும்), அவற்றின் ஒழுங்கு, பணக்கொடுப்பனவு அண்ணளவாக 100,000 ஐத்தாண்டும். அதனை விட அது ஆரம்பிக்கப்பட்ட போது நூலகத்தில் இருந்த மொத்த நூல்களினதும் நுலகத்தினதும் 'ஒழுங்கு'. இவற்றைக் கருத்தில் கொண்டே நாம் அவற்றைத் தீர்மானிக்க முடியும் எனக் கருதுகின்றேன்.
6. இதழகம் செயற்திட்டத்தில் உபபிரிவாக மல்லிகை மின்பிரதியாக்கம் நிகழுவது மட்டுமல்லாது. இதழகம் என்பதின் கருத்தியல் வெளிப்பாடு. நூலகத்தில் இதழகம் போன்ற செயற்பாட்டின் முக்கியத்துவம். மற்றும் அதனூடாக ஆவணப்படுத்தப்படப் போகின்ற சஞ்சிகைகளின் எண்ணிக்கை கூட அதிகமானதாகவே இருக்கப் போகின்றது. தற்போதைய 35 வகையான சஞ்சிகைகள் என்பது ஆரம்ப அளவு மாத்திரமே. எதிர்காலத்தில் அதன் அளவு இன்னும் அதிகமாகும். மேலும் 35 இதழ்கள் தொடர்பாகவும் அத்திட்டம் கொண்டுவர எத்தனிக்கும் முழுமை (நூலகத்தில் அறிவுருவாக்கச் செயற்பாடுகளின் ஆரம்பமாக இச்செயற்திட்டமே இருக்கப் போகின்றது.) போன்றவை அதனைத் தனித்துவமாக்கின்றன.
7. புலம்பெயர் சஞ்சிகைகள் திட்டம் என்பதன் முக்கியத்துவமும் முக்கியமானது. முதல் இரண்டு கட்டங்களும் பத்மநாப ஐயரது முயற்சியாக இருக்கும். அதன் தொடர்ச்சியில் வேறுவகையான சஞ்சிகைகளும் ஆவணப்படுத்தப்படும்.
நூலகத்தில் 1500 பிரதிகள் இருந்த நிலையில், நூலகம் எதுவித ஒழுங்கமைப்பும் அற்று இருந்தவேளையில் இச்செயற்திட்டங்களின் முக்கியத்துவம் தனித்தன்மையனதாகவே நான் கருதுகின்றேன். நூலகம் தற்போது கண்டடைந்த ஒழுங்கிற்கும் சிலவிதமான வரையறைகளுக்கும் இவை முக்கியமானவை என்பது எனது நிலைப்பாடு.
மேலும், ஏற்கனவே சில செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தவன் என்ற ரீதியில் அவற்றின் காலவரைகளுக்கு ஏற்ப என்னால் செயற்பட முடியும். அதுமட்டுமன்றி அவற்றின் முக்கியத்துவத்தினை மதிப்பிட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே பேச்சுப்பக்கத்தில் வந்து உரையாடவும் முடிந்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டின் இறுதியில் 10000 இலக்குகள் என்பது கூட இதுசாரப்பட்டதே.
Shaseevan 05:22, 24 அக்டோபர் 2008 (UTC)
செயற்றிட்டங்களும் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகளும்
1. மார்ச் 31 இலங்கையின் நிதியாண்டு முடிவு என்பதால் அது பொருத்தமானதே.
2. இதழகம், புலம்பெயர் இதழ்கள் மின்பிரதியாக்கம், முகப்புச் செயற்றிட்டம் என்பனவற்றின் முக்கியத்துவத்தை நான் எந்த அளவிலும் குறைத்து மதிப்பிடவில்லை. உண்மையில் அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை நூலகத் திட்டத்தை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கிறது. எல்லாவற்றையும் ஆவணப்படுத்துதல் என்ற பொதுவான மின்னூலாக்கச் செயற்றிட்ட அணுகுமுறையுடன் library collection development என்ற முக்கிய விடயத்தைச் சேர்த்திருக்கிறது.
முகப்புச் செயற்றிட்டம் 2009 இறுதிவரை தொடரப் போகிறது. இதழகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படப் போவது. அவ்வகையில் அவை குறித்த செயற்றிட்டங்களாக குறித்த நிதியாண்டுகளுக்குள் அடங்கப்போவதில்லை. இது காலவரையறை தொடர்பான பிரச்சினை அல்ல; அறிக்கையிடல் தொடர்பானது மாத்திரமே.
எனது கோரிக்கை என்னவென்றால் செயற்றிட்டங்களின் வரையறையை அவற்றின் ஒருங்கிணைப்பு+நிதி ஒதுக்கீடு சார்ந்து மட்டும் அமைத்துக் கொள்வதாகும். பிரதிகளின் எண்ணிக்கை, நிதிப் பயன்பாடு, நிதியாண்டு ஆகியன தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கு இது உதவும்.
முகப்புச் செயற்றிட்டம், இதழகம், புலம்பெயர் இதழ்கள் மின்பிரதியாக்கம் போன்றவற்றை நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் எனும் வகையாக அறிக்கையிட வேண்டும். இத்தகைய முதலாவது செயற்பாடாக werc மின்பிரதியாக்கம் இருக்கிறது. (werc மின்பிரதியாக்கம் அவ்வாண்டின் ஏனைய செயற்றிட்டங்களிலிருந்து வேறுபட்டிருப்பதால் மட்டுமே அதனைத் தனிச் செயற்றிட்டமாக அமைக்க வேண்டியிருந்தது.) werc செயற்பாட்டுக்கு அறிக்கையிட்டது போல இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிக்கையிட வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால்,
- செயற்றிட்டங்கள் குறித்த நிதியாண்டுகளுக்குள் அதிகளவு மின்னூலாக்கங்களை ஒருங்கிணைக்கும்.
- சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் அறிவுருவாக்கம் சார்ந்து தனித்தன்மையுடையனவாக இருக்கும்.
எழுந்தமானச் செயற்பாட்டில் செய்யப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை, நிதிப் பயன்பாடு ஆகிய இரு விபரங்களும் தெரியுமாதலால் அதனை ஏனைய மின்னூலாக்கங்களுடன் ஒரு செயற்றிட்டத்தின் கீழ் இணைப்பது சாத்தியம் என்றே படுகிறது. ஆனால் அது ஒரு சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடாக இருக்காது. கோபி 06:13, 24 அக்டோபர் 2008 (UTC)
- ஓர் எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாவலர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி நூறு பிரதிகளைக் கூட எட்டாது. 10,000 மின்னூல்கள் இருந்தால் கூட அது தனித்தன்மையுடையதே. ஆயினும் அதனை ஒரு செயற்றிட்டமாக அறிவிப்பதென்பது பொருத்தமற்றது. ஆனால் அறிவுருவாக்க முக்கியத்துவம் சார்ந்து அதற்கான தனி அறிக்கையிடலின் தேவை உள்ளது. எண்ணிக்கை-முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொள்வதென்பது இவ்விடத்தில் பொருத்தமாகவும் இருக்காது. ஆனால் குறித்த நிதியாண்டின் குறித்த ஒரு செயற்றிட்டத்தின் கீழ் அதன் நிதி, வளப் பயன்பாட்டை அறிக்கையிடுவதுடன் அதனைச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகவும் அறிக்கையிட வேண்டும்.
- அடுத்த ஆண்டில் 8000 மின்னூல்களை உருவாக்குவதென்பது 2-3 செயற்றிட்டங்களாக இருப்பதே போதுமானது. ஆனால் அதைவிட அதிகமான சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளும் தொடரலாம்.
- இதழகம், முகப்புச் செயற்றிட்டம் ஆகிய சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள் 2008-09 நிதியாண்டிலிருந்தும் 2009-10 நிதியாண்டிலிருந்தும் அதன்பின்னருங் கூட நிதி ஒதுக்கீடுகளைப் பெறும். ஆனால் நிதி ஒதுக்கீடுகளும் அது தொடர்பான அறிக்கையிடலும் குறித்த ஆண்டுகளுக்கானவையாக இருக்கும். நன்றி. கோபி 06:53, 24 அக்டோபர் 2008 (UTC)
அடுத்த வருடத்தில் இருந்து சிறிய செயற்திட்டங்களை அல்லது எழுந்தமான மின்பிரதியாக்கம் சார்ந்த செயற்திட்டங்களை தவிர்த்து அறிவுருவாக்கம் அல்லது முழுமை சார்ந்த செயற்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு மயூரனிடம் கூறியிருந்தேன். (அதாவது தற்போது பெயரிடப்பட்டபட்டுள்ள 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்னும் பதம்.)
ஏனெனில் வரும் வருடத்தில் தொடங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்த செயற்திட்டமும் குரும்பசிட்டி கனகரத்தினம் செயற்திட்டமும் நூலகத்திற்கு போதியளவான எண்ணிக்கை சார்ந்த அடைவுகளை எமக்கு அளிக்கும் என எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில் எழுந்தமான செயற்திட்டங்களுக்கான உந்துகைகளைக் குறைத்து ஆய்வு அடிப்படையான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பது சாரப்படவே எனது கருத்து அமைந்திருந்தது. அவற்றை வகைப்படுத்துவதில் இரண்டுவிதங்கள் தவிர்த்த 3 விடயங்களை எண்ணியிருந்தேன்.
இந்நிலையில் சில கருத்துக்கள் முக்கியமானவை. 1. நூலகம் தொட்டக்க காலத்தில் முக்கியமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் அவை வரைமுறை என்பதைத் தாண்டியே அமைந்திருந்தன. முகப்புச் செயற்திட்டம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம் போன்றவை எழுந்தமானமாக அமையாத போதிலும் அவை 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்னும் பகுதிக்குள் அடங்க முடியாதவை. அவற்றை வரையறைகளுக்கு உட்பட்ட எழுந்தமானச் செயற்பாடுகளாக மட்டுமே கொள்ள முடியும்.
2. செயற்திட்டங்களைப் பொறுத்தவரை 'நூலகம்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' செயற்திட்டமே மேற்கூறிய 'நூலகச் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடுகள்' என்ற வகை மாதிரியின் முதலாவது செயற்திட்டம் எனலாம். அடுத்து 'மல்லிகை செயற்திட்டம்' மற்றும் 'இதழகம் செயற்திட்டம்' போன்றவை இவ்வகையில் வரக் கூடியவை. இவை மட்டுமே முழுமையான பரப்புக்களை வரையக் கூடியவை. இவ்விடத்தில் முகப்புச் செயற்திட்டமோ அல்லது புலம்பெயர் சஞ்சிகைகள் திட்டமோ தம்மை தகவமைக்க முடியாதவை எனக் கருதுகின்றேன்.
3. நிதியாண்டு வசதியை வைத்து நாம் இவற்றை வகைப்படுத்துவது உகந்தது அல்ல. அவற்றின் உள்ளடக்கம் மற்றும் முழுமை பற்றியே இவற்றை வகைப்படுத்திவிட முடியும் என நினைக்கிறேன். இவகையில் வரமுடியாத புலம்பெயர் சஞ்சிகள் செயற்திட்டம் போன்றவற்றிற்கு இடைநிலையில் சில ஒழுங்கமைவுகளைக் கட்டு அவற்றின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
ஆக,
- எழுந்தமானமாக செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் முதலாவது வகையில் வரும். அவை தமக்குள் சில தெரிவுகளைக் கொண்டமைந்த போதிலும் அவற்றை இவ்வகைக்குள் அடக்கிவிட முடியும்.
அ) நூலகம்:மறுமலர்ச்சி மின்னூலாக்கத் திட்டம் ஆ) நூலகம்:தட்டெழுதற் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் 2006 இ) நூலகம்:தட்டெழுதற் செயற்றிட்டம், கொழும்பு 2007 ஈ) நூலகம்:மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2007 உ) நூலகம்:திருக்கோணமலை மின்பிரதிச் செயற்றிட்டம், 2008
- சில எல்லைகளை வகுத்துக் கொண்டு செய்யப்பட்ட மின்பிரதியாக்கங்களும் செயற்திட்டங்களும். இவை சில முழுமைகளை வரைந்தாலும் நூலகம் என்கின்ற உள்ளடக்க உருவாக்கம் சார்ந்து அவற்றின் முழுமை எவ்வித தாக்கத்தைச் செலுத்துகின்றது என்பதைக் கருதிக்கொள்ள வேண்டும்.
அ) நூலகம்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம் ஆ) நூலகம்:முகப்புச் செயற்திட்டம், 2008 இ) நூலகம்:'குரும்பசிட்டி கனகரத்தினம்' செயற்றிட்டம். ஈ) நூலகம்: கொழும்பு தமிழ்ச்சங்க மின்பிரதியாக்கம்.
- உள்ளடக்க ரீதியாக முழுமைகளை நோக்கி நகர்பவையாக இருப்பவை மூன்றாவது வகைமாதிரியில் வரும். இவையே நூலகம் என்ற உள்ளடக்க சேமிப்பு என்ற கருத்துருவாக்கத்தின் மீது நேரடியாக முழுமைகளை நிகழ்த்தும் செயற்திட்டங்களாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத்தில் நூலகத்தின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பலன் தரக்கூடிய விடயங்கள் எனக் கருதுகின்றேன்.
அ) நூலகம்:இதழகம் செயற்றிட்டம்
மயூரனால் செய்யப்பட்ட/படும் திருகோணமலைச் செயற்திட்டம் மற்றும் மல்லிகைச் செயற்திட்டம் போன்றவற்றில் காணப்படும் முழுமைகளைப் பொறுத்து சில விடயங்களை செய்ய வேண்டும். அவற்றை எண்ணிக்கை சார்ந்து ஒன்றிணைப்பதெ நல்லது என்பது எனது கருத்து. ஆயினும் அவற்றில் சில முழுமைகள் காணப்படுகின்றன. உதாரணமாக மல்லிகை, பெயர், ஆகவே போன்ற விடயங்கள். ஆயினும் மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2007 இலும் இதே மாதிரியான சில முழுமைகள் அடையப்பட்டன என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆக, திருக்கோணமலை செயற்திட்டம் மற்றும் மல்லைகைத் திட்டம் போன்றவற்றை இணைத்து இரண்டாவது வகைக்குள் இடலாம் என்பது எனது நிலைப்பாடு.
நன்றி. Shaseevan 08:08, 24 அக்டோபர் 2008 (UTC)
விரிவான கருத்துக்களுக்கு நன்றி. நிதியாண்டை முன்வைத்துச் செயற்றிட்டங்களை வகைப்படுத்துவதாக என் கருத்துக்களை முன்வைக்கவில்லை. மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2008 இன் கீழ் எழுந்தமான மின்பிரதியாக்கம், முகப்புச் செயற்றிட்டம், இதழகம், புலம்பெயர் இதழ்கள் மின்பிரதியாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைக்கலாம் என எண்ணினேன்.
இது ஒழுங்கமைப்பதன் வசதி கருதி மட்டும் தான். சிறியதாக இருந்த சில திட்டங்களை மின்பிரதியாக்கத் திட்டம், கொழும்பு 2007 இன் இரண்டாங்கட்டத்துடன் இணைத்துப் பின்னர் இரண்டு கட்டங்களையும் இணைத்தமை போல. உண்மையில் மூன்றாவது கண் தொடர்பான மின்பிரதியாக்கமும் சேகரிப்பு மேம்பாட்டுச் செயற்பாடாக வருவதே.
எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட நிதியாண்டுகளுக்குத் தொடரும் செயற்றிட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அச்செயற்றிட்டங்கள் குறித்த நிதியாண்டிற்கான செயற்பாடுகள் தொடர்பில் இடைநிலை அறிக்கைகளைச் சமர்பிக்க வேண்டியதன் தேவையை இவ்வுரையாடல் சுட்டி நிற்கிறது. நன்றி.
கோபி 15:51, 24 அக்டோபர் 2008 (UTC)