"நிறுவனம்: மாணவர் சபை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=மாணவர் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:23, 6 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | மாணவர் சபை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | மன்றம் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | |
| முகவரி | அரசடி வீதி, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் | www.jhlc.sch.lk |
வளங்கள்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையானது வருடாவருடம் தெரிவு செய்யப்படும் மாணவ முதல்வர்களின் செயற்பாட்டினால் திறம்பட இயங்கி வருகின்றது.
அதிபரின் தலைமையின் கீழ் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டலில் இயங்கிவரும் இச்சபையில் 50 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
காலைப் பிரார்த்தனைக்கு மாணவர்களை ஒழுங்குபடுத்தல், பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்களின் ஒழுங்கு போன்ற சேவைகளை தினமும் நடாத்துவதுடன் கல்லூரியின் விசேட நிகழ்வுகளை நடாத்த ஒத்துழைப்பும் எமது சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.
கல்லூரி அன்னையின் புனிதத் தன்மையையும், பாரம்பரியத்தையும் எமது சத்தியப் பிரமாணத்துக்கு அமைய பேணுவதுடன் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்டு மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, கௌரவம் என்பவற்றையும் பேணுவதில் எமது மாணவ முதல்வர் சபை ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைமிக்க பிரஜைகளாக உருவாகுவதற்குரிய திறன்களைப் பாடசாலைக் காலத்தில் மாணவிகள் பெற்றுக் கொள்ளும்வகையில் பல்வேறு தலைமைத்துவ பயிற்சிக் கருத்தரங்குகள் மற்றும் பாசறைகளிலும் எமது மாணவத் தலைவிகள் பங்கேற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.