"ஆளுமை: தெய்வநாயகி முத்துக்குமாரசுவாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்= தெய்வநாயகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:08, 11 ஏப்ரல் 2025 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தெய்வநாயகி |
தந்தை | மயில்வாகனம் |
தாய் | சின்னத்தங்கம் |
பிறப்பு | - |
இறப்பு | -- |
ஊர் | கைதடி யாழ்ப்பாணம் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெய்வநாயகி. முத்துக்குமாரசுவாமி கைதடி, யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது தந்தை மயில்வாகனம், தாயார் சின்னத்தங்கம் ஆவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தி இடைநிலைக் கல்வியை கைதடி கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலையிலும், சிரேஷ்ட கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியை திருச்சி Holy Cross Convent இலும் பயின்றார். இவர் இரசாயனத்தை விசேட பாடமாகப் பயின்று 1956ஆம் ஆண்டு இறுதிப் பரீட்சையில் முதலாம் வகுப்பில் தேறினார். அக்காலம் விஞ்ஞானப் பட்டதாரிகள் அரிதாக இருந்ததால் 1956ஆம் ஆண்டிலேயே அவருக்கு ஆசிரிய நியமனம் 'நீர்கொழும்பு ஆவா மாரியா கொன்வென்ற்' இல் கிடைத்தது. ஆங்கே ஒரு ஆண்டு பணியாற்றிய பின் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றார். இவரது கற்பித்தல் திறமையை அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் பாராட்டினர். இவரிடத்தில் கல்வி கற்றோர் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும் பிரகாசிக்கின்றனர். இவர் 1957ஆம் ஆண்டு கைதடியைச் சேர்ந்த திரு. செல்லப்பா முத்துக்குமாரசுவாமியைக் கைத்தலம் பற்றினார். இம் மனமொத்த தம்பதியினர் இல்லற வாழ்வின் பயனாக அனுசூயா, கௌரி என்ற இரு பெண்களுக்கும் யோககுமாரன் எனற ஆண்மனுவுக்கும் பெற்றோராயினர். ஆவர்களுக்குச் சிறந்த கல்வியை ஊட்டினர். ஆனால் யோககுமாரன் 2003ஆம் ஆண்டு வாகன விபத்தில் அமரரானார் இளம் பராயந் தொட்டு, தம் 'தந்தையார்- மயில்வாகனம், தாயார்-சின்னத்தங்கம் ஆகியோரின் அடிச்சுவட்பைப் பின் பற்றிச் சமய சீலராகவும், யோகசுவாமி, மார்கண்டு சுவாமி ஆகியோரின் அணுக்கத் தொண்டராகவும் விளங்கினார். இவரிடம் கல்வி கற்றோர் மனதில் என்றும் தெய்வமாக விளங்குவார் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இரசாயன ஆசிரியராக 1957ஆம் ஆண்டு தொட்டு 1990ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையும் 33 ஆண்டுகள் பணியாற்றினார். திருமதி தெய்வநாயகி முத்துக்குமாரசுவாமி. சாந்தமான வசீகரமுகம், அதில் தவழும் புன்னகை, அமைதியான சுபாவம், நெஞ்சத்துள் புதைந்துள்ள தெய்வநம்பிக்கை, நட்பின் பண்பு, கடமை உணர்வு, மற்றவர்களின் இடுக்கண் களைய உதவும் மனப்பாங்கு - இவை அனைத்தும் சேர்ந்த ஒரு உருவம் தான் 'தெய்வம்' என சக ஆசிரியைகளினால் அன்பாக அழைக்கப்பட்ட திருமதி தெய்வநாயகி முத்துக்குமாரசுவாமி (படம் - பின் உள் அட்டை) இவர் பழகுவதற்கு இனிமையானவர், தோற்றத்தில் எளிமையானவர், கட்டுப்பாட்டில் இறுக்கமானவர். கற்பித்தலில் மாத்திரமல்லாமல் பாடசாலைப் புறநடவடிக்கைகளிலும் சலிக்காது, அதிபர் சக ஆசிரியைகளுக்கும் அவர் வழங்கிய ஒத்துழைப்பு, பெற்றோர், சமூ கத்துடன் அவர் பேணிய தொடர்பு இவைகள் யாவும் எல்லோர் மத்தியிலும் அவருக்கென ஒரு தனி மதிப்பைக் கொடுத்தன. இவர் தன்னலம் கருதாது எவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவராக வாழ்ந்து 2006ஆம் ஆண்டு சிவபதமெய்தினார்.