"ஆளுமை:கோகிலா, மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கோகிலா மகேந்திரன்| | + | பெயர்=கோகிலா, மகேந்திரன்| |
− | தந்தை= | + | தந்தை=சிவசுப்பிரமணியம்| |
தாய்=செல்லமுத்து| | தாய்=செல்லமுத்து| | ||
பிறப்பு=1950.11.17| | பிறப்பு=1950.11.17| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=தெல்லிப்பழை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | கோகிலா மகேந்திரன் (1950.11.17 -) யாழ்ப்பாணம், | + | கோகிலா, மகேந்திரன் அவர்கள் (1950.11.17 -) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவரது முழுப்பெயர் கோகிலாதேவி மகேந்திரராஜா. தெல்லிப்பழை எனும் பகுதியில் சிவசுப்பிரமணியம், செல்லமுத்து தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். |
− | + | இவர் பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றுப் பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விஞ்ஞானத் துறையில் கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியாவார். இவர் 1974 இல் யாழ்ப்பாணம், பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து, கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து 1994 இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி 1999 இல் வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றவராவார். | |
− | வட | + | கிருஷ்ணர் மகேந்திரராஜா அவர்களை 1976 இல் திருமணம் செய்து பிரவீணன் எனும் மகனைப் பிள்ளையாகப் பெற்றவர். இவரது கணவர் கிருஷ்ணர் மகேந்திரராஜா அவர்கள் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தவர். |
+ | |||
+ | க.பொ.த. (சா/த) தரம் படிக்கும் போதே "மலர்களைப்போல் தங்கை" என்ற குறுநாவலை எழுதினார். அது பிரசுரமகாவில்லை. 1972இல் குயில் சஞ்சிகையில் வெளிவந்த "அன்பிற்கு முன்னால்" என்ற சிறுகதையே முதலாவது அச்சில் வெளிவந்த படைப்பு ஆகும். தொடர்ந்து நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சிறுகதைகள், மனித சொரூபங்கள், முரண்பாடுகளின் அறுவடை, அறிமுகவிழா (நூலாசிரியரில் ஒருவர்) பிரசவங்கள். வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், முகங்களும் மூடிகளும், வரிக்குயில் ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. | ||
+ | துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம், சந்தனச் சிதறல்கள் ஆகிய மூன்று நாவல்கள் வந்துள்ளன. | ||
+ | |||
+ | 23 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். வேறு ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார். குயில்கள் என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுதி. கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு நாடக அறிமுறை நூல். "அரங்கக் கலையில் ஐம்பதாண்டு" தனிமனித ஆளுமையும் நாடகமும் தொடர்பான நூல். "கோலங்கள் ஐந்து" என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் ஒருவர் இவர். | ||
+ | |||
+ | இவரது விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கதைகள் ஆகியவை இவரது சிறுவர் விஞ்ஞானப் புனைவு நூல்கள் ஆகும். | ||
+ | |||
+ | அத்துடன் எங்கே நிம்மதி, மனக்குறை மாற வழி, மனமெனும் தோணி, மனச்சோர்வு, உள்ளம் பெருங்கோயில், பதின்மவயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும் (நினைவுப்பேருரை), திருமனிதர்வாழ்வு ஆகியவை இவரது உள சமூகக் கட்டுரைத் தொகுதிகளாகவும், உள்ளத்துள் உறைதல் என்ற நூல் உளவியல் சார் புனைவுச் சரிதைகளின் தொகுப்புகளாகவும், புலச்சிதறல் நெஞ்சம் புலப்பெயர்வு சார் புனைவு நூலாகவும், நேர்கொண்ட பாவை பெண்ணிய உளவியல் சார் தொகுப்பாகவும், சீர்மியத்தில் சிறப்பு முறைகள் விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள் பற்றிய நூலாகவும், குடும்பம் ஒரு கதம்பம் பெற்றோரியம் பற்றிய நூலாகவும் | ||
+ | காணப்படுகின்றன. | ||
+ | |||
+ | சிறுவர் உளநலம், மகிழ்வுடன் வாழ்தல், சின்னக் சின்னப் பிள்ளைகள் ஆகிய உளவியல் பயிற்சி சார் கைநூல்களில் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியரில் ஒருவராகவும் இருந்துள்ளார். உள்ளக் கமலம், முற்றத்தில் சிந்திய முத்துக்கள், சுனாமியில் சிதறிய சித்திரங்கள் ஆகிய உளவியல் பயிற்சிக் கைநூல்களின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். | ||
+ | அத்தோடு மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள், தண்பதப் பெருவழி ஆகிய உளவியல் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்ததுடன் சிறுவர் பாதுகாப்பு என்ற உளவியல் கட்டுரைத் தொகுப்பினதும் வாழ்வின் முன்னேற்றத்துக்கான கற்றல் என்ற கல்வி உளவியல் பயிற்சிக் கைநூலினதும் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். | ||
+ | திருப்பங்கள் என்ற குறுநாவலின் ஆசிரியர்களில் ஒருவரான இவர் அதன் பதிப்பாசிரியரும் ஆவார். | ||
+ | |||
+ | மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும் என்ற சரித்திர நூலின் தொகுப்பாசிரியர். தங்கத்தலைவி, விழிசைச் சிவம் ஆகிய தனிமனித ஆளுமை சார் நூல்களின் ஆசிரியர். விழிமுத்து, விழிசைச் சிவம் ஜனன நூற்றாண்டு மலர் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர். கலையும் வாழ்வும் என்ற நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர். பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை சிறு நூல் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். | ||
+ | |||
+ | இவரது 60ஆவது, 65ஆவது, 70ஆவது அகவை நிறைவாகச் சோலைக்குயில், விழிசைக் குயில், மாங்குயில் ஆகிய மலர்கள் வெளிவந்துள்ளன. | ||
+ | |||
+ | இவரது நூல்களில் "பிரசவங்கள்" சிறுகதைத்தொகுதி 1986இலும் , "வாழ்வு ஒருவலைப்பந்தாட்டம்" சிறுகதைத் தொகுதி 1997இலும் தேசியமட்ட சாகித்ய இலக்கிய விருதைப் பெற்றன. புலச்சிதறல் நெஞ்சம் (2014), நேர்கொண்டபாவை (2016), திருமனிதர்வாழ்வு (2018)ஆகிய நூல்கள் சுய நானாவித நூல்கள் வரிசையில் அரசு இலக்கிய விருதுக்காக விதந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாக இடம் பிடித்தன. வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதையும், மனமெனும் தோணி (2008), குடும்பம் ஒரு கதம்பம் (2023)ஆகியவை வடக்கு மாகாண விருதையும் வென்றன. | ||
+ | |||
+ | தேசிய இலக்கியப்பேரவை "குயில்கள்", "முகங்களும் மூடிகளும்" நூல்களுக்கும், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் "உள்ளம் பெருங்கோயில்" நூலுக்கும் தமிழ் இலக்கிய நிறுவகம் "நேர்கொண்ட பாவை" நூலுக்கும் பரிசுகள் வழங்கின. | ||
+ | |||
+ | இவர் பெற்றுக்கொண்ட விசேட விருதுகள் :- | ||
+ | |||
+ | 1.கொடகே தேசிய இலக்கிய விருது (2009) | ||
+ | |||
+ | 2.தமிழியல் விருது - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (2010) | ||
+ | |||
+ | 3.முதலமைச்சர் விருது - பண்பாட் டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம் (2014) | ||
+ | |||
+ | 4.மூத்த நாடக எழுத்தாளர் விருது - றோயல் கல்லூரித் தமிழ் மன்றம் -கொழும்பு (2015) | ||
+ | |||
+ | 5.ரூப ராணி ஜோசப் நினைவு இலக்கிய விருது - மக்கள் கலை இலக்கிய மன்றம் -கண்டி (2017) | ||
+ | |||
+ | 6.ஐ .பி .சி தமிழ் பன்முக ஆளுமை விருது (2019) | ||
+ | |||
+ | 7.Inspirational woman விருது - மகளிர் விவகார அமைச்சு - வடமாகாணம் (2019) | ||
+ | |||
+ | 8.மகாஜனா விழுது விருது - பழைய மாணவர் தாய்ச் சங்கம் (2019) | ||
+ | |||
+ | 9.சிவத்தமிழ் விருது - சிவத்தமிழ்ச் செல்வி அறநிதியச் சபை- தெல்லிப்பழை (2020) | ||
+ | |||
+ | 10.குறமகள் ஞாபகார்த்த ,பல்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது - வென்மேரி அறக்கட்டளை (2022) | ||
+ | |||
+ | 11.அரச கேசரி விருது - இயல் துறை - யாழ் மாநகர சபை (2023) | ||
+ | |||
+ | 12.வாழ்நாள் சாதனையாளர் விருது - இரா .உதயணன் இலக்கிய நிறுவகம் (2023) | ||
+ | |||
+ | 13.தமிழ் வித்தகர் விருது - சைவப்புலவர் செல்லத்துரை அறக்கட்டளை (2024) | ||
+ | |||
+ | கெளரவப் பட்டங்கள்:- | ||
+ | |||
+ | 1.இலக்கிய வித்தகர் - இந்துசமய ,தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சு (1986) | ||
+ | |||
+ | 2.கலைச்சுடர் - வலிவடக்குப் பிரதேச செயலகம் (2004) | ||
+ | |||
+ | 3.சமூக ஒளி - கத்தோலிக்கக் கலை இலக்கிய வட்டம் (2010) | ||
+ | |||
+ | 4.கலாபூசணம் - இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (2014) | ||
+ | |||
+ | 5.சமூக திலகம் - கொட்டடி சனசமூக நிலையமும், கிராம அபிவிருத்திச் சங்கமும் (2016) | ||
+ | |||
+ | 6.கலைப்பிரவாகம் - வட இலங்கைச் சங்கீத சபை (2017) | ||
+ | |||
+ | 7.செம்புலத்திருமகள் - சுன்னாகம் சிவன் சிறுவர் கழகம் (2023) | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
வரிசை 30: | வரிசை 96: | ||
{{வளம்|2628|04-08}} | {{வளம்|2628|04-08}} | ||
{{வளம்|4695|42}} | {{வளம்|4695|42}} | ||
+ | {{வளம்|10174|31}} | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:கோகிலா மகேந்திரன்]] |
01:33, 4 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கோகிலா, மகேந்திரன் |
தந்தை | சிவசுப்பிரமணியம் |
தாய் | செல்லமுத்து |
பிறப்பு | 1950.11.17 |
ஊர் | தெல்லிப்பழை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோகிலா, மகேந்திரன் அவர்கள் (1950.11.17 -) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவரது முழுப்பெயர் கோகிலாதேவி மகேந்திரராஜா. தெல்லிப்பழை எனும் பகுதியில் சிவசுப்பிரமணியம், செல்லமுத்து தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.
இவர் பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றுப் பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விஞ்ஞானத் துறையில் கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியாவார். இவர் 1974 இல் யாழ்ப்பாணம், பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து, கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து 1994 இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி 1999 இல் வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றவராவார்.
கிருஷ்ணர் மகேந்திரராஜா அவர்களை 1976 இல் திருமணம் செய்து பிரவீணன் எனும் மகனைப் பிள்ளையாகப் பெற்றவர். இவரது கணவர் கிருஷ்ணர் மகேந்திரராஜா அவர்கள் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தவர்.
க.பொ.த. (சா/த) தரம் படிக்கும் போதே "மலர்களைப்போல் தங்கை" என்ற குறுநாவலை எழுதினார். அது பிரசுரமகாவில்லை. 1972இல் குயில் சஞ்சிகையில் வெளிவந்த "அன்பிற்கு முன்னால்" என்ற சிறுகதையே முதலாவது அச்சில் வெளிவந்த படைப்பு ஆகும். தொடர்ந்து நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சிறுகதைகள், மனித சொரூபங்கள், முரண்பாடுகளின் அறுவடை, அறிமுகவிழா (நூலாசிரியரில் ஒருவர்) பிரசவங்கள். வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், முகங்களும் மூடிகளும், வரிக்குயில் ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம், சந்தனச் சிதறல்கள் ஆகிய மூன்று நாவல்கள் வந்துள்ளன.
23 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். வேறு ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார். குயில்கள் என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுதி. கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு நாடக அறிமுறை நூல். "அரங்கக் கலையில் ஐம்பதாண்டு" தனிமனித ஆளுமையும் நாடகமும் தொடர்பான நூல். "கோலங்கள் ஐந்து" என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் ஒருவர் இவர்.
இவரது விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கதைகள் ஆகியவை இவரது சிறுவர் விஞ்ஞானப் புனைவு நூல்கள் ஆகும்.
அத்துடன் எங்கே நிம்மதி, மனக்குறை மாற வழி, மனமெனும் தோணி, மனச்சோர்வு, உள்ளம் பெருங்கோயில், பதின்மவயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும் (நினைவுப்பேருரை), திருமனிதர்வாழ்வு ஆகியவை இவரது உள சமூகக் கட்டுரைத் தொகுதிகளாகவும், உள்ளத்துள் உறைதல் என்ற நூல் உளவியல் சார் புனைவுச் சரிதைகளின் தொகுப்புகளாகவும், புலச்சிதறல் நெஞ்சம் புலப்பெயர்வு சார் புனைவு நூலாகவும், நேர்கொண்ட பாவை பெண்ணிய உளவியல் சார் தொகுப்பாகவும், சீர்மியத்தில் சிறப்பு முறைகள் விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள் பற்றிய நூலாகவும், குடும்பம் ஒரு கதம்பம் பெற்றோரியம் பற்றிய நூலாகவும் காணப்படுகின்றன.
சிறுவர் உளநலம், மகிழ்வுடன் வாழ்தல், சின்னக் சின்னப் பிள்ளைகள் ஆகிய உளவியல் பயிற்சி சார் கைநூல்களில் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியரில் ஒருவராகவும் இருந்துள்ளார். உள்ளக் கமலம், முற்றத்தில் சிந்திய முத்துக்கள், சுனாமியில் சிதறிய சித்திரங்கள் ஆகிய உளவியல் பயிற்சிக் கைநூல்களின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். அத்தோடு மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள், தண்பதப் பெருவழி ஆகிய உளவியல் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்ததுடன் சிறுவர் பாதுகாப்பு என்ற உளவியல் கட்டுரைத் தொகுப்பினதும் வாழ்வின் முன்னேற்றத்துக்கான கற்றல் என்ற கல்வி உளவியல் பயிற்சிக் கைநூலினதும் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். திருப்பங்கள் என்ற குறுநாவலின் ஆசிரியர்களில் ஒருவரான இவர் அதன் பதிப்பாசிரியரும் ஆவார்.
மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும் என்ற சரித்திர நூலின் தொகுப்பாசிரியர். தங்கத்தலைவி, விழிசைச் சிவம் ஆகிய தனிமனித ஆளுமை சார் நூல்களின் ஆசிரியர். விழிமுத்து, விழிசைச் சிவம் ஜனன நூற்றாண்டு மலர் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர். கலையும் வாழ்வும் என்ற நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர். பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை சிறு நூல் போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
இவரது 60ஆவது, 65ஆவது, 70ஆவது அகவை நிறைவாகச் சோலைக்குயில், விழிசைக் குயில், மாங்குயில் ஆகிய மலர்கள் வெளிவந்துள்ளன.
இவரது நூல்களில் "பிரசவங்கள்" சிறுகதைத்தொகுதி 1986இலும் , "வாழ்வு ஒருவலைப்பந்தாட்டம்" சிறுகதைத் தொகுதி 1997இலும் தேசியமட்ட சாகித்ய இலக்கிய விருதைப் பெற்றன. புலச்சிதறல் நெஞ்சம் (2014), நேர்கொண்டபாவை (2016), திருமனிதர்வாழ்வு (2018)ஆகிய நூல்கள் சுய நானாவித நூல்கள் வரிசையில் அரசு இலக்கிய விருதுக்காக விதந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாக இடம் பிடித்தன. வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதையும், மனமெனும் தோணி (2008), குடும்பம் ஒரு கதம்பம் (2023)ஆகியவை வடக்கு மாகாண விருதையும் வென்றன.
தேசிய இலக்கியப்பேரவை "குயில்கள்", "முகங்களும் மூடிகளும்" நூல்களுக்கும், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் "உள்ளம் பெருங்கோயில்" நூலுக்கும் தமிழ் இலக்கிய நிறுவகம் "நேர்கொண்ட பாவை" நூலுக்கும் பரிசுகள் வழங்கின.
இவர் பெற்றுக்கொண்ட விசேட விருதுகள் :-
1.கொடகே தேசிய இலக்கிய விருது (2009)
2.தமிழியல் விருது - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (2010)
3.முதலமைச்சர் விருது - பண்பாட் டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம் (2014)
4.மூத்த நாடக எழுத்தாளர் விருது - றோயல் கல்லூரித் தமிழ் மன்றம் -கொழும்பு (2015)
5.ரூப ராணி ஜோசப் நினைவு இலக்கிய விருது - மக்கள் கலை இலக்கிய மன்றம் -கண்டி (2017)
6.ஐ .பி .சி தமிழ் பன்முக ஆளுமை விருது (2019)
7.Inspirational woman விருது - மகளிர் விவகார அமைச்சு - வடமாகாணம் (2019)
8.மகாஜனா விழுது விருது - பழைய மாணவர் தாய்ச் சங்கம் (2019)
9.சிவத்தமிழ் விருது - சிவத்தமிழ்ச் செல்வி அறநிதியச் சபை- தெல்லிப்பழை (2020)
10.குறமகள் ஞாபகார்த்த ,பல்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது - வென்மேரி அறக்கட்டளை (2022)
11.அரச கேசரி விருது - இயல் துறை - யாழ் மாநகர சபை (2023)
12.வாழ்நாள் சாதனையாளர் விருது - இரா .உதயணன் இலக்கிய நிறுவகம் (2023)
13.தமிழ் வித்தகர் விருது - சைவப்புலவர் செல்லத்துரை அறக்கட்டளை (2024)
கெளரவப் பட்டங்கள்:-
1.இலக்கிய வித்தகர் - இந்துசமய ,தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சு (1986)
2.கலைச்சுடர் - வலிவடக்குப் பிரதேச செயலகம் (2004)
3.சமூக ஒளி - கத்தோலிக்கக் கலை இலக்கிய வட்டம் (2010)
4.கலாபூசணம் - இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (2014)
5.சமூக திலகம் - கொட்டடி சனசமூக நிலையமும், கிராம அபிவிருத்திச் சங்கமும் (2016)
6.கலைப்பிரவாகம் - வட இலங்கைச் சங்கீத சபை (2017)
7.செம்புலத்திருமகள் - சுன்னாகம் சிவன் சிறுவர் கழகம் (2023)
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 217-220
- நூலக எண்: 6572 பக்கங்கள் 50-57
- நூலக எண்: 15444 பக்கங்கள் 11
- நூலக எண்: 2628 பக்கங்கள் 04-08
- நூலக எண்: 4695 பக்கங்கள் 42
- நூலக எண்: 10174 பக்கங்கள் 31