"ஆளுமை:நூறுல் ஹக், எம். எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=எம்.எம்.நூறுல் ஹக்| |
− | தந்தை=| | + | தந்தை=முஹம்மது முத்து| |
− | தாய்=| | + | தாய்=பாத்தும்மா| |
− | பிறப்பு= | + | பிறப்பு=1963.07.08| |
− | + | ஊர்=சாய்ந்தமருது , அம்பாறை| | |
− | ஊர்=அம்பாறை| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | + | புனை பெயர்=எம்.எம்.எம்.மிஹ்லார், நபா, மருதூர் மெய்யொளி, எம்.என்.எச். செஞ்சுடர், இலக்கணி, இனன் முஜாதலா, அபூமிஸ்பாஹுல் ஹக், அபூபாத்திமா பர்வீன்| | |
}} | }} | ||
− | நூறுல் ஹக் (1964.08.27 | + | |
+ | எம். எம். எம். நூறுல் ஹக் (பி.1964.08.27) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மர்ஹூம் முத்து, பாத்தும்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் எம்.எம்.எம்.மிஹ்லார், நபா, மருதூர் மெய்யொளி, எம்.என்.எச். செஞ்சுடர், இலக்கணி, இனன் முஜாதலா, அபூமிஸ்பாஹுல் ஹக், அபூபாத்திமா பர்வீன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார். | ||
+ | |||
+ | இவர் க.பொ.த.(உயர் தரம்) சித்தியடைந்து ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். 2003 பெப்ரவரி 01ம் திகதி முதல் "முஸ்லிம்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் முதலாவது ஆக்கம் 1981.05.15ம் திகதி தினபதி பத்திரிகையின் 'இஸ்லாமியப் பூங்கா பகுதியில் 'ஜும்ஆவுக்கு 40 பேர் தேவையா?” எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை முன்னுாற்றைம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், சில கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். அதேநேரம் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல் விமர்சனங்களைச் செய்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. | ||
+ | |||
+ | இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, அல்ஹதா, தூது, திசை, தினத்தந்தி, எழுச்சிக்குரல், நவமணி, அல்-ஜஸிரா, பாமிஸ், இடி, சரிநிகர், விடிவு, அல்ஹஸனாத், வெற்றி, ஆதவன், ப்ரியநிலா, பார்வை, உதயம், முஸ்லிம் குரல், நிகரி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.இவரின் கட்டுரைகள் சமூக உணர்வு மிக்கவை. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக, சமயநிலைப்பாடுகள் குறித்து அழுத்தமாக ஆராயக்கூடியவை. | ||
+ | |||
+ | முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை எழுத்துருப்படுத்துவதில் நூறுல்ஹக் வெற்றி கண்டு வருகிறார். இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் நிலை குறித்தும் பல்வேறுபட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களாக வலிமார்களும் வஸீலாத் தேடல்களும் (1988), தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் (1996), தீவும் தீர்வுகளும் (19980, சிறுபான்மையினர் சில அவதானங்கள் (2002), முஸ்லீம் பூர்வீகம் (2006), ஈமானியப் பேரொளிகள் (2009), அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் (2011), முஸ்லிம் அரசியலின் இயலாமை (2016) , யார் துரோகிகள்? (2017) போன்றன காணப்படுகின்றன. | ||
+ | |||
+ | இவை தவிர சவூதி அரேபியாவில் தபூக் நகரில் இவர் இருந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களைத் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டார். அவை ஈதுல் பித்ர் -சிறப்பு மலர் (1993), ஈதுல் அழ்ஹா -சிறப்பு மலர் (1993) போன்றனவாகும். | ||
+ | |||
+ | இவர் எழுத்துத்துறையுடன் இணைந்தவகையில் இவர் பத்திரிகைத் துறையிலும் தனது கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதாவது சோலை (1984), அல்-ஹதா (1984-1987) ஆகியவற்றில் பிரதம ஆசிரியராகவும் பார்வை (1989-1990), உதயம் (1991-1992), சங்கமம் (1994-1995), இடி (2001-2002) ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் முஸ்லிம் குரல் (2003-2004), எழுவான் (2006-2012) ஆகிய பத்திரிகைகளில் பிரதி ஆசிரியராகவும் கடமையாற்றியவர். | ||
+ | |||
+ | 2002 இல் இஸ்லாமிய ஆய்வுநிலையம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் "இளம் படைப்பாளருக்கான விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். இவர் சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம், சாய்ந்த மருது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டம், ஹனுப்பிட்டிய இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராகவும், முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஆவார். | ||
+ | |||
+ | பதினேழு வயதில் எழுத்துப்பணியில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்ட இவர் “ஹாதிபுல் ஹுதா”-நேரிய எழுத்தாளர் என்ற பட்டத்தினை தனது எழுத்துப் பணிக்காக பெற்றவர்.2012 இல் கிழக்கு மாகாணசபை சாஹித்திய விருதை விமர்சனத்துறைக்கும் 2009 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் 2020 இல் வித்தகர் விருதையும் பெற்றுக்கொண்டார். 2021 ஆம் ஆண்டு இவர் காலமானார். | ||
+ | |||
வரிசை 19: | வரிசை 34: | ||
* | * | ||
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:அம்பாறை ஆளுமைகள்]] |
02:18, 24 செப்டம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | எம்.எம்.நூறுல் ஹக் |
தந்தை | முஹம்மது முத்து |
தாய் | பாத்தும்மா |
பிறப்பு | 1963.07.08 |
ஊர் | சாய்ந்தமருது , அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
புனை பெயர் | எம்.எம்.எம்.மிஹ்லார், நபா, மருதூர் மெய்யொளி, எம்.என்.எச். செஞ்சுடர், இலக்கணி, இனன் முஜாதலா, அபூமிஸ்பாஹுல் ஹக், அபூபாத்திமா பர்வீன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எம். எம். எம். நூறுல் ஹக் (பி.1964.08.27) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மர்ஹூம் முத்து, பாத்தும்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் எம்.எம்.எம்.மிஹ்லார், நபா, மருதூர் மெய்யொளி, எம்.என்.எச். செஞ்சுடர், இலக்கணி, இனன் முஜாதலா, அபூமிஸ்பாஹுல் ஹக், அபூபாத்திமா பர்வீன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார்.
இவர் க.பொ.த.(உயர் தரம்) சித்தியடைந்து ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். 2003 பெப்ரவரி 01ம் திகதி முதல் "முஸ்லிம்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் முதலாவது ஆக்கம் 1981.05.15ம் திகதி தினபதி பத்திரிகையின் 'இஸ்லாமியப் பூங்கா பகுதியில் 'ஜும்ஆவுக்கு 40 பேர் தேவையா?” எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை முன்னுாற்றைம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், சில கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். அதேநேரம் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல் விமர்சனங்களைச் செய்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, அல்ஹதா, தூது, திசை, தினத்தந்தி, எழுச்சிக்குரல், நவமணி, அல்-ஜஸிரா, பாமிஸ், இடி, சரிநிகர், விடிவு, அல்ஹஸனாத், வெற்றி, ஆதவன், ப்ரியநிலா, பார்வை, உதயம், முஸ்லிம் குரல், நிகரி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.இவரின் கட்டுரைகள் சமூக உணர்வு மிக்கவை. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக, சமயநிலைப்பாடுகள் குறித்து அழுத்தமாக ஆராயக்கூடியவை.
முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை எழுத்துருப்படுத்துவதில் நூறுல்ஹக் வெற்றி கண்டு வருகிறார். இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் நிலை குறித்தும் பல்வேறுபட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களாக வலிமார்களும் வஸீலாத் தேடல்களும் (1988), தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் (1996), தீவும் தீர்வுகளும் (19980, சிறுபான்மையினர் சில அவதானங்கள் (2002), முஸ்லீம் பூர்வீகம் (2006), ஈமானியப் பேரொளிகள் (2009), அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் (2011), முஸ்லிம் அரசியலின் இயலாமை (2016) , யார் துரோகிகள்? (2017) போன்றன காணப்படுகின்றன.
இவை தவிர சவூதி அரேபியாவில் தபூக் நகரில் இவர் இருந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களைத் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டார். அவை ஈதுல் பித்ர் -சிறப்பு மலர் (1993), ஈதுல் அழ்ஹா -சிறப்பு மலர் (1993) போன்றனவாகும்.
இவர் எழுத்துத்துறையுடன் இணைந்தவகையில் இவர் பத்திரிகைத் துறையிலும் தனது கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதாவது சோலை (1984), அல்-ஹதா (1984-1987) ஆகியவற்றில் பிரதம ஆசிரியராகவும் பார்வை (1989-1990), உதயம் (1991-1992), சங்கமம் (1994-1995), இடி (2001-2002) ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் முஸ்லிம் குரல் (2003-2004), எழுவான் (2006-2012) ஆகிய பத்திரிகைகளில் பிரதி ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.
2002 இல் இஸ்லாமிய ஆய்வுநிலையம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் "இளம் படைப்பாளருக்கான விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். இவர் சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம், சாய்ந்த மருது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டம், ஹனுப்பிட்டிய இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராகவும், முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஆவார்.
பதினேழு வயதில் எழுத்துப்பணியில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்ட இவர் “ஹாதிபுல் ஹுதா”-நேரிய எழுத்தாளர் என்ற பட்டத்தினை தனது எழுத்துப் பணிக்காக பெற்றவர்.2012 இல் கிழக்கு மாகாணசபை சாஹித்திய விருதை விமர்சனத்துறைக்கும் 2009 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் 2020 இல் வித்தகர் விருதையும் பெற்றுக்கொண்டார். 2021 ஆம் ஆண்டு இவர் காலமானார்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 37-40