"நிறுவனம்:அம்/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=") |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்=அம்/ தம்பிலுவில் மத்திய | + | பெயர்=அம்/ தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை| |
வகை=பாடசாலை| | வகை=பாடசாலை| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
− | மாவட்டம்= | + | மாவட்டம்=அம்பாறை| |
− | ஊர்=| | + | ஊர்=தம்பிலுவில்| |
முகவரி=பிரதான வீதி, தம்பிலுவில், அம்பாறை| | முகவரி=பிரதான வீதி, தம்பிலுவில், அம்பாறை| | ||
− | தொலைபேசி=| | + | தொலைபேசி=-| |
− | மின்னஞ்சல்=| | + | மின்னஞ்சல்=-| |
− | வலைத்தளம்=| | + | வலைத்தளம்=-| |
+ | }} | ||
+ | |||
+ | |||
+ | தம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையானது அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. திண்ணைப்பள்ளி முறைமையைக் கொண்டிருந்த தம்பிலுவில் கிராமத்தில் மெதடிஸ்த மிஷனரிகளால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இவ்வூரிலும் பரவியது. இக்கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏ. நடராசா எனும் செல்வந்தர் தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின் எதிரே 1944 இல் ஒரு சைவப்பள்ளியை அமைத்தார். | ||
+ | |||
+ | 1945இல், தம்பிலுவில் கலைமகள் மற்றும் சரஸ்வதி பாடசாலைகளும் பிரித்தானிய அரசால் பொறுப்பேற்கப்பட்டு, சைவப்பள்ளி, "இளமுறைஞர் பாடசாலை" (யூனியர் ஸ்கூல்) என்ற பெயரில், மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்த வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. இடவசதி கருதி, ஆண்கள் பாடசாலை, சைவப்பள்ளியின் வளாகத்துக்கும், பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையின் இடத்துக்கும் இடமாற்றப்பட்டன. ஆண்டு ஒன்றிலிருந்து, ஐந்து வரை ஆண் - பெண் பாடசாலைகளில் கற்பதும், விரும்பினால், யூனியர் ஸ்கூலில் எட்டாமாண்டு வரை மேற்படிப்பைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. | ||
− | + | இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின், யூனியர் ஸ்கூல் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டு, 1958இல், இன்றைய அதன் அமைவிடத்துக்கு இடமாற்றப்பட்டது. 1958இல் கனிஷ்ட பாடசாலை எனும் பெயரில் ஒரு பாடசாலை தம்பிலுவில் 02ம் பிரிவில் நிறுவப்பட்ட போதிலும் அதில் 05ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றார்கள். இதில் திரு. சோமசுந்தரமும், திரு. செபமாலையும் அதிபர்களாக கடமையாற்றினர். இப்பாடசாலையில் நிலவிய இடநெருக்கடியால் தம்பிலுவில் மகாவித்தியாலயம் ஒன்று அமைக்கப்பட்டது, இப்பாடசாலை கனிஷ்ட பாடசாலையின் தொடராகும். இதற்குரிய காணியை தருமரெட்ணம் வன்னிமை வழங்கினார். | |
+ | |||
+ | இப் பாடசாலை ஒரேயொரு கட்டடத்தையும் (வள்ளுவர் மண்டபம்) 05 உதவி ஆசிரியர்களையும் 200 மாணவர்களையும் கொண்டதாக விளங்கியது. 1961இல் திரு. எஸ். எம். லீனா அதிபராக இருந்த காலத்தில் மேலும் ஒரு கட்டடமும் கட்டப்பட்டு திரு. கணபதிப்பிள்ளை அவர்களால் பாடசாலைக் கீதமும் இயற்றப்பட்டது. அத்தோடு 10ம் வகுப்பு விஞ்ஞானப்பிரிவும், கலைப்பிரிவு 12ம் வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. | ||
+ | |||
+ | 1970இல் திரு. சச்சிதானந்தசிவம் அதிபராக இருந்த காலத்தில் வித்தியாலயத்தின் கல்வி, கலாச்சார, விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தார். 1989.12.04 அன்று மத்திய மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. 1990 தொடக்கம் 2010ம் ஆண்டு வரை கா.பொ.த சாதாரண மற்றும் கா.பொ.த உயர்தர பெறுபேறுகளின் வளர்ச்சிகள் அதிகரித்து சென்றது. அத்தோடு பாடசாலை 05 ஏக்கர் நிலப்பரப்பில் 11 கட்டடங்களுடன் அதில் இருமாடி கட்டடங்கள் 05 உள்ளன. | ||
+ | |||
+ | மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு 40 வகுப்பறைகள் உள்ளன. இதில் ஆங்கிலப் பிரிவுக்கு தனியான கட்டடம் உள்ளது. இங்கு தரம் 6 -11 வரை ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படுகிறது. போதுமான உட்கட்டமைப்பு, நீர் மற்றும் மின்சார வசதிகள் 2000 ஆண்டுக்கு பின்னர் உண்டானது. இங்கு கணணி கற்கை நிலையமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையின் கீழ் கிடைக்கப்பெற்றது. அதிபர் திரு. வி. ஜயந்தன் அவர்களுடைய காலத்தில் இப் பாடசாலைக்கு விடுதி அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு பொன்விழா கொண்டாடப்பட்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. | ||
+ | |||
+ | 2016 ஆம் ஆண்டு இப் பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ V. இராதாகிருஸ்ணன் அவர்களும், கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S. தண்டாயுதபாணி அவர்களும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு புதிதாய் தேசிய பாடசாலைக்கான பெயர் பலகையும் வள்ளுவர் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அதிபராக பா. சந்திரேஸ்வரன் கடமையாற்றுகின்றார். | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:தம்பிலுவில் அமைப்புகள்]] |
23:25, 29 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அம்/ தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | தம்பிலுவில் |
முகவரி | பிரதான வீதி, தம்பிலுவில், அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
தம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையானது அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. திண்ணைப்பள்ளி முறைமையைக் கொண்டிருந்த தம்பிலுவில் கிராமத்தில் மெதடிஸ்த மிஷனரிகளால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இவ்வூரிலும் பரவியது. இக்கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏ. நடராசா எனும் செல்வந்தர் தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின் எதிரே 1944 இல் ஒரு சைவப்பள்ளியை அமைத்தார்.
1945இல், தம்பிலுவில் கலைமகள் மற்றும் சரஸ்வதி பாடசாலைகளும் பிரித்தானிய அரசால் பொறுப்பேற்கப்பட்டு, சைவப்பள்ளி, "இளமுறைஞர் பாடசாலை" (யூனியர் ஸ்கூல்) என்ற பெயரில், மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்த வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. இடவசதி கருதி, ஆண்கள் பாடசாலை, சைவப்பள்ளியின் வளாகத்துக்கும், பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையின் இடத்துக்கும் இடமாற்றப்பட்டன. ஆண்டு ஒன்றிலிருந்து, ஐந்து வரை ஆண் - பெண் பாடசாலைகளில் கற்பதும், விரும்பினால், யூனியர் ஸ்கூலில் எட்டாமாண்டு வரை மேற்படிப்பைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின், யூனியர் ஸ்கூல் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டு, 1958இல், இன்றைய அதன் அமைவிடத்துக்கு இடமாற்றப்பட்டது. 1958இல் கனிஷ்ட பாடசாலை எனும் பெயரில் ஒரு பாடசாலை தம்பிலுவில் 02ம் பிரிவில் நிறுவப்பட்ட போதிலும் அதில் 05ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றார்கள். இதில் திரு. சோமசுந்தரமும், திரு. செபமாலையும் அதிபர்களாக கடமையாற்றினர். இப்பாடசாலையில் நிலவிய இடநெருக்கடியால் தம்பிலுவில் மகாவித்தியாலயம் ஒன்று அமைக்கப்பட்டது, இப்பாடசாலை கனிஷ்ட பாடசாலையின் தொடராகும். இதற்குரிய காணியை தருமரெட்ணம் வன்னிமை வழங்கினார்.
இப் பாடசாலை ஒரேயொரு கட்டடத்தையும் (வள்ளுவர் மண்டபம்) 05 உதவி ஆசிரியர்களையும் 200 மாணவர்களையும் கொண்டதாக விளங்கியது. 1961இல் திரு. எஸ். எம். லீனா அதிபராக இருந்த காலத்தில் மேலும் ஒரு கட்டடமும் கட்டப்பட்டு திரு. கணபதிப்பிள்ளை அவர்களால் பாடசாலைக் கீதமும் இயற்றப்பட்டது. அத்தோடு 10ம் வகுப்பு விஞ்ஞானப்பிரிவும், கலைப்பிரிவு 12ம் வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
1970இல் திரு. சச்சிதானந்தசிவம் அதிபராக இருந்த காலத்தில் வித்தியாலயத்தின் கல்வி, கலாச்சார, விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தார். 1989.12.04 அன்று மத்திய மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. 1990 தொடக்கம் 2010ம் ஆண்டு வரை கா.பொ.த சாதாரண மற்றும் கா.பொ.த உயர்தர பெறுபேறுகளின் வளர்ச்சிகள் அதிகரித்து சென்றது. அத்தோடு பாடசாலை 05 ஏக்கர் நிலப்பரப்பில் 11 கட்டடங்களுடன் அதில் இருமாடி கட்டடங்கள் 05 உள்ளன.
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு 40 வகுப்பறைகள் உள்ளன. இதில் ஆங்கிலப் பிரிவுக்கு தனியான கட்டடம் உள்ளது. இங்கு தரம் 6 -11 வரை ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படுகிறது. போதுமான உட்கட்டமைப்பு, நீர் மற்றும் மின்சார வசதிகள் 2000 ஆண்டுக்கு பின்னர் உண்டானது. இங்கு கணணி கற்கை நிலையமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையின் கீழ் கிடைக்கப்பெற்றது. அதிபர் திரு. வி. ஜயந்தன் அவர்களுடைய காலத்தில் இப் பாடசாலைக்கு விடுதி அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு பொன்விழா கொண்டாடப்பட்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு இப் பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ V. இராதாகிருஸ்ணன் அவர்களும், கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S. தண்டாயுதபாணி அவர்களும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு புதிதாய் தேசிய பாடசாலைக்கான பெயர் பலகையும் வள்ளுவர் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அதிபராக பா. சந்திரேஸ்வரன் கடமையாற்றுகின்றார்.