"ஆளுமை:துரைராஜா, சி. என்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைராஜா, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=துரைராஜா, சி. என். |
+
பெயர்=நடராஜா துரைராஜா|
தந்தை=|
+
தந்தை=நடராஜா|
தாய்=|
+
தாய்=செல்லமுத்து|
 
பிறப்பு=1943.07.15|
 
பிறப்பு=1943.07.15|
இறப்பு=|
+
இறப்பு=2018.09.11|
ஊர்=வல்வெட்டித்துறை|
+
ஊர்=திருக்கோணமலை|
வகை=கலைஞர்|
+
வகை=பல்துறை ஆளுமையாளர்|
புனைபெயர்=திருமலைக் கலைமாறன், குணகௌரி, ஸ்ரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் |
+
புனைபெயர்=திருமலை கலைமாறன், குணகௌரி, ஶ்ரீகபியார், சச்சிதுரை, பொலிகை மாறன்|
 
}}
 
}}
  
துரைராஜா (பி. 1943, ஜுலை 15) ஓர் கலைஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இலங்கைப் போக்குவரத்து சபையின் காப்பாளராகவும், வீதிப் பரிசோதனைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திருமலைக் கலைமாறன், குணகௌரி, ஸ்ரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் ஆகிய புனைப் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், ஆத்மீகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
+
வடமராட்சியில் சோதியர்வளவு, பொலிகண்டியில் அமரர் அவர்கள் நடராஜா, செல்லமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 15.07.1943இல் நடராஜா துரைராஜா பிறந்தார். அவரின் பின் விவேகானந்தன், தர்மகுலசிங்கம், விஜயலக்ஸ்மி ஆகிய சகோதரர்கள் பிறந்தனர்.  
 +
 
 +
இவர் தனது ஆரம்பக்கல்வியை வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும், தொடர்ந்து திருக்கோணமலை சென்ஜோசப் கல்லூரியிலும் இடைநிலை கல்வியை யாழ்ப்பாணம் தேவரையாளி இந்து கல்லூரியிலும் பயின்றார். பின்னர் 119/2 திருஞானசம்பந்தன் வீதி, திருகோணமலையை தனது வசிப்பிடமாகக் கொண்டு இருந்தார்.
 +
 
 +
1970ம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபையில் காப்பாளர் உத்தியோகத்தராக பதவி நியமனம் பெற்ற இவர் 1997ல் வீதி பரிசோதனை குழு தலைவராக பதவி உயர்வு பெற்று 2003ம் ஆண்டு 33 வருடகால சேவையின் பின் ஓய்வு பெற்றார். இவருடைய சேவைக்காலத்தில் பொதுமக்களிடமும், இலங்கை போக்குவரத்துச்சபை அதிகாரிகளிடமும் நன்மதிப்பை பெற்றதன் சான்றாக CTB ஆலயம், CTB அந்திமகால சேவைச்சங்கம், CTB நலன்புரிச்சங்கம் போன்றவற்றின் கௌரவ செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
 +
 
 +
சோதியர்வளவு பொலிகண்டியை சேர்ந்த சொந்த மச்சாள் ஆன செல்வராசா தம்பதிகளின் இளையமகள் ஆன இராசகுமாரியை 10.06.1968ம் ஆண்டு கரம்பிடித்தார். இல்லற வாழ்க்கையை அன்போடும் அரவணைப்புடனும் நடத்தியதன் பேறாக மங்களநாயகி, குமணராஜன், ஜெயந்தி, பத்மராஜா, பாரதிராஜா, நிருஸிதா, கௌரிதரன் ஆகிய புதல்வர்கள், புதல்விகள் எழுவரை பெற்று கண்ணும் கருத்துமாக சீரும்சிறப்புமாக வளர்த்து கல்வியூட்டிவந்தார்.
 +
 
 +
பாடசாலையில் கல்விபயிலும் காலத்திலேயே தனது இலக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1957 ம் ஆண்டு ஒளவையார், குமணவள்ளல் எனும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கரவெட்டியூர் அண்ணாச்சாமி ஆசிரியரின் நெறியாள்கையில் பல நாடகங்கள் நடித்துள்ளார். 1967இல் திருமலை நாடக மன்றத்தில் ஆதவன், காகித பூக்கள், மஞ்சுளா என்பன போன்ற இதுவரை 20 நாடகங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
 +
 
 +
1959ல் கல்வெட்டு எனும் கவிதையை முதல் கவிதையாக எழுத ஆரம்பித்தவர் 1000 கவிஞர்கள் கவிதைகள் உலகசாதனை புத்தகத்திற்கு எழுதியது வரை 300 கவிதைகளுக்கு மேல் எழுதினார். சமகாலத்தில் பல சிறுகதைகளையும் இலக்கியத்துறையில் பல விமர்சனங்களையும் தந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990களில் நாட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியேறி இந்தியாவில் அகதி முகாமில் வாழ்ந்தகாலத்தில் அங்கு பாலர்பாடசாலை, படிப்பகம் முதலானவற்றை தலைமை தாங்கி வழிநடத்தி சென்றதோடு இவர் இந்தியாவில் இருந்தகாலத்தில் இவருடைய வீடு உடைக்கப்பட்டு விலை மதிப்பற்ற புத்தகங்கள் அழித்தொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயர்கண்டு நெஞ்சுபொறுக்குதில்லையே என்ற கட்டுரையை எழுதியிருந்தார். இக்கட்டுரை இந்தியாவில் பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைளிலும் வெளியாகியதை வாசித்த அன்றைய தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் "துளைக்கிறது நெஞ்சை துரைராஜாவின் கடிதம்" என்ற பதில் கடிதம் பத்திரிகையில் வெளியிட்டார். இது அமரர் அவர்களின் ஆற்றுகைக்கு கிடைத்த வெற்றி ஆகும். மீண்டும் 1993ம் ஆண்டு இவரும் இவர் குடும்பத்தினரும் தாயகம் திரும்பினர்.
 +
 
 +
1965ம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் அவர்களின் ஆசியுடன் தமிழரசுக்கட்சியில் அங்கத்துவராக சேர்ந்து அவர்கள் 1979இல் திருமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு காரணமாக மீண்டும் 1983ம் ஆண்டில் நகராட்சி மன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்று சாதனையும் படைத்தார். 1994ம் ஆண்டில் பாராளுமன்ற பொது தேர்தலில் இரா.சம்பந்தன் ஐயாவின் (பாராளுமன்ற உறுப்பினர்) நம்பிக்கைக்குரிய உறுப்பினராக போட்டியிட்டார்.
 +
 
 +
இவர் ஊஞ்சல் பாட்டு கவசம் எழுதிய கோவில்களாக அருள்மிகு ஶ்ரீபத்திரகாளி அம்மன் கவசம், அன்புவளிபுரம் ஞானவைரவர் ஊஞ்சல் பாட்டு, காந்தி நகர் அம்மன் ஊஞ்சல் பாட்டு, திருப்புகழ் மாலை எனும் நூலின் திருக்கோணேஸ்வரர் தமிழ் அர்ச்சனை, திருமலை கற்பக பிள்ளையார் ஆலய ஊஞ்சல் பாட்டு, நல்லுர் கந்தன் திருவிழா காலங்களில் நாள்தோறும் நல்லூர் கந்தன் புகழ்பாடும் கவிதைகள் போன்றனவாகும்.
 +
 
 +
சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசிய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் அதே நேர இந்தியாவின் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகியவற்றிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகி உள்ளது.
 +
 
 +
இவர் திருமலை கலைமாறன், குணகௌரி, ஸ்ரீபழியார், சச்சிதுரை, பொலிகை மாறன் ஆகிய புனைப்பெயர்களால் அறியப்பட்டார். இவர் வித்தகர் விருது, கவிஞர் விருது, கலாவித்தகர் விருது, கலாபூஷணம், சாகித்திய விருது, அருட்கவி போன்ற விருதுகளை பெற்று இருந்தார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 20: வரிசை 39:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%A8._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் துரைராஜா]
 
[[பகுப்பு:திருகோணமலை ஆளுமைகள்]]

01:13, 18 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராஜா துரைராஜா
தந்தை நடராஜா
தாய் செல்லமுத்து
பிறப்பு 1943.07.15
இறப்பு 2018.09.11
ஊர் திருக்கோணமலை
வகை பல்துறை ஆளுமையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வடமராட்சியில் சோதியர்வளவு, பொலிகண்டியில் அமரர் அவர்கள் நடராஜா, செல்லமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 15.07.1943இல் நடராஜா துரைராஜா பிறந்தார். அவரின் பின் விவேகானந்தன், தர்மகுலசிங்கம், விஜயலக்ஸ்மி ஆகிய சகோதரர்கள் பிறந்தனர்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும், தொடர்ந்து திருக்கோணமலை சென்ஜோசப் கல்லூரியிலும் இடைநிலை கல்வியை யாழ்ப்பாணம் தேவரையாளி இந்து கல்லூரியிலும் பயின்றார். பின்னர் 119/2 திருஞானசம்பந்தன் வீதி, திருகோணமலையை தனது வசிப்பிடமாகக் கொண்டு இருந்தார்.

1970ம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபையில் காப்பாளர் உத்தியோகத்தராக பதவி நியமனம் பெற்ற இவர் 1997ல் வீதி பரிசோதனை குழு தலைவராக பதவி உயர்வு பெற்று 2003ம் ஆண்டு 33 வருடகால சேவையின் பின் ஓய்வு பெற்றார். இவருடைய சேவைக்காலத்தில் பொதுமக்களிடமும், இலங்கை போக்குவரத்துச்சபை அதிகாரிகளிடமும் நன்மதிப்பை பெற்றதன் சான்றாக CTB ஆலயம், CTB அந்திமகால சேவைச்சங்கம், CTB நலன்புரிச்சங்கம் போன்றவற்றின் கௌரவ செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சோதியர்வளவு பொலிகண்டியை சேர்ந்த சொந்த மச்சாள் ஆன செல்வராசா தம்பதிகளின் இளையமகள் ஆன இராசகுமாரியை 10.06.1968ம் ஆண்டு கரம்பிடித்தார். இல்லற வாழ்க்கையை அன்போடும் அரவணைப்புடனும் நடத்தியதன் பேறாக மங்களநாயகி, குமணராஜன், ஜெயந்தி, பத்மராஜா, பாரதிராஜா, நிருஸிதா, கௌரிதரன் ஆகிய புதல்வர்கள், புதல்விகள் எழுவரை பெற்று கண்ணும் கருத்துமாக சீரும்சிறப்புமாக வளர்த்து கல்வியூட்டிவந்தார்.

பாடசாலையில் கல்விபயிலும் காலத்திலேயே தனது இலக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1957 ம் ஆண்டு ஒளவையார், குமணவள்ளல் எனும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கரவெட்டியூர் அண்ணாச்சாமி ஆசிரியரின் நெறியாள்கையில் பல நாடகங்கள் நடித்துள்ளார். 1967இல் திருமலை நாடக மன்றத்தில் ஆதவன், காகித பூக்கள், மஞ்சுளா என்பன போன்ற இதுவரை 20 நாடகங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

1959ல் கல்வெட்டு எனும் கவிதையை முதல் கவிதையாக எழுத ஆரம்பித்தவர் 1000 கவிஞர்கள் கவிதைகள் உலகசாதனை புத்தகத்திற்கு எழுதியது வரை 300 கவிதைகளுக்கு மேல் எழுதினார். சமகாலத்தில் பல சிறுகதைகளையும் இலக்கியத்துறையில் பல விமர்சனங்களையும் தந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990களில் நாட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியேறி இந்தியாவில் அகதி முகாமில் வாழ்ந்தகாலத்தில் அங்கு பாலர்பாடசாலை, படிப்பகம் முதலானவற்றை தலைமை தாங்கி வழிநடத்தி சென்றதோடு இவர் இந்தியாவில் இருந்தகாலத்தில் இவருடைய வீடு உடைக்கப்பட்டு விலை மதிப்பற்ற புத்தகங்கள் அழித்தொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயர்கண்டு நெஞ்சுபொறுக்குதில்லையே என்ற கட்டுரையை எழுதியிருந்தார். இக்கட்டுரை இந்தியாவில் பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைளிலும் வெளியாகியதை வாசித்த அன்றைய தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் "துளைக்கிறது நெஞ்சை துரைராஜாவின் கடிதம்" என்ற பதில் கடிதம் பத்திரிகையில் வெளியிட்டார். இது அமரர் அவர்களின் ஆற்றுகைக்கு கிடைத்த வெற்றி ஆகும். மீண்டும் 1993ம் ஆண்டு இவரும் இவர் குடும்பத்தினரும் தாயகம் திரும்பினர்.

1965ம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் அவர்களின் ஆசியுடன் தமிழரசுக்கட்சியில் அங்கத்துவராக சேர்ந்து அவர்கள் 1979இல் திருமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு காரணமாக மீண்டும் 1983ம் ஆண்டில் நகராட்சி மன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்று சாதனையும் படைத்தார். 1994ம் ஆண்டில் பாராளுமன்ற பொது தேர்தலில் இரா.சம்பந்தன் ஐயாவின் (பாராளுமன்ற உறுப்பினர்) நம்பிக்கைக்குரிய உறுப்பினராக போட்டியிட்டார்.

இவர் ஊஞ்சல் பாட்டு கவசம் எழுதிய கோவில்களாக அருள்மிகு ஶ்ரீபத்திரகாளி அம்மன் கவசம், அன்புவளிபுரம் ஞானவைரவர் ஊஞ்சல் பாட்டு, காந்தி நகர் அம்மன் ஊஞ்சல் பாட்டு, திருப்புகழ் மாலை எனும் நூலின் திருக்கோணேஸ்வரர் தமிழ் அர்ச்சனை, திருமலை கற்பக பிள்ளையார் ஆலய ஊஞ்சல் பாட்டு, நல்லுர் கந்தன் திருவிழா காலங்களில் நாள்தோறும் நல்லூர் கந்தன் புகழ்பாடும் கவிதைகள் போன்றனவாகும்.

சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசிய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் அதே நேர இந்தியாவின் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகியவற்றிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகி உள்ளது.

இவர் திருமலை கலைமாறன், குணகௌரி, ஸ்ரீபழியார், சச்சிதுரை, பொலிகை மாறன் ஆகிய புனைப்பெயர்களால் அறியப்பட்டார். இவர் வித்தகர் விருது, கவிஞர் விருது, கலாவித்தகர் விருது, கலாபூஷணம், சாகித்திய விருது, அருட்கவி போன்ற விருதுகளை பெற்று இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 50-53
  • நூலக எண்: 3051 பக்கங்கள் 104-107

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:துரைராஜா,_சி._என்.&oldid=614640" இருந்து மீள்விக்கப்பட்டது