"ஆளுமை:பூபாலபிள்ளை, சதாசிவம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→வெளி இணைப்புக்கள்) |
சி (→வெளி இணைப்புக்கள்) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D பீதாம்பரப் புலவர் பற்றி சி. சுதர்சன்] | *[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D பீதாம்பரப் புலவர் பற்றி சி. சுதர்சன்] | ||
− | [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdk0t1 தோத்திரக் கோவை (1922)] | + | *[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdk0t1 தோத்திரக் கோவை (1922)] |
16:13, 21 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பூபாலபிள்ளை |
தந்தை | சதாசிவப்பிள்ளை |
தாய் | வள்ளிப்பிள்ளை |
பிறப்பு | 1856 |
இறப்பு | 1921 |
ஊர் | மட்டக்களப்பு, புளியந்தீவு |
வகை | எழுத்தாளர், பண்டிதர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூபாலபிள்ளை, சதாசிவப்பிள்ளை (1856 - 1921) மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சதாசிவப்பிள்ளை; இவரது தாய் வள்ளியம்மை. இவர் இளமையில் மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியிலும் கிறிஸ்தவ மத்திய கல்லூரியிலும் கல்வி பயின்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு, தமிழ் இலக்கண இலக்கியங்களையும் புராண இதிகாசங்களையும் சித்தாந்த சாஸ்திரங்களையும் வல்லவை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கம்பிள்ளையிடம் பயின்றார். இவர் அரசாங்க எழுதுவினைஞராக ஏறக்குறைய 30 ஆண்டுகள் சேவை செய்து, பதவி உயர்வு பெற்றுப் பகிரங்க சேவைப்பகுதி முதல்வராகப் பணியாற்றி 1915 இல் ஓய்வு பெற்றார்.
இவர் திருமுருகர் பதிகம், சீமந்தனி புராணம், விநாயகர் மான்மியம், புளியநகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர் பதிகம், சிவதோத்திரம், முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை, அரசடி கணேசர் அகவல், கணேசர் கலிவெண்பா, கண்டி கதிரேசர் பதிகம், தமிழ் வரலாறு போன்ற நூல்களை இயற்றினார். இவரது சமயம் தொடர்பான நூல்களை 1923 ஆம் ஆண்டு திருமலை செ. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை தொகுத்து வெளியிட்டுள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதரான இவர், மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினராகவும் பரீட்சகராகவும் இருந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 227-228
- நூலக எண்: 963 பக்கங்கள் 174
- நூலக எண்: 13816 பக்கங்கள் 129-140
- நூலக எண்: 3771 பக்கங்கள் 89
- நூலக எண்: 2469 பக்கங்கள் 207-212
- நூலக எண்: 15597 பக்கங்கள் 96-99