"ஆளுமை:சந்திரகுலசிங்கம், கயிலாசபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Meuriy, ஆளுமை:சந்திரகுலசிங்கம், கயிலாசப்பிள்ளை பக்கத்தை ஆளுமை:சந்திரகுலசிங்கம், கயிலாசபிள்ளை...) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சந்திரகுலசிங்கம்| | பெயர்=சந்திரகுலசிங்கம்| | ||
தந்தை=கயிலாசபிள்ளை| | தந்தை=கயிலாசபிள்ளை| |
02:50, 21 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சந்திரகுலசிங்கம் |
தந்தை | கயிலாசபிள்ளை |
பிறப்பு | 1951.03.05 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரகுலசிங்கம், கயிலாசபிள்ளை (1951.03.05 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கயிலாசப்பிள்ளை. கல்விப் பொதுத் தராதரம் வரை கல்வி கற்ற இவர், பாடசாலையில் படிக்கும் காலத்தில் சங்கீத ஆசிரியர் சங்கீத பூஷணம் ஆர். இராசலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் 1967 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் பிருதிவராஜன் நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இவர் பாடசாலை விட்டு விலகிய பின்னர் கோண்டாவில் வடக்கு வாகீஸ்வரி நாடகமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்தார். ஒருசதம், அலாவுதீன் உறவுகள், நரகொடு சுவர்க்கம், ஆளுக்கு ஆள், ஏகலைவன் என இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் அலாவுதீன், இனியொரு விதி செய்வோம் போன்ற நாடகங்களில் நடித்தமைக்காகச் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். முற்றுப்புள்ளி, உறவுகள், நரகொடு சுவர்க்கம் போன்ற இவரது நாடகங்கள் வீடியோ பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஶ்ரீ வாகீஸ்வரி சனசமூக நிலையம், நேதாஜி சனசமூக நிலையம் ஆகியன இவரின் நாடகக் கலையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. இவர் ஆற்றிய கலைப்பணிகளுக்காகக் கலாபூஷணம் விருதினையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 177
- நூலக எண்: 15444 பக்கங்கள் 156