"ஆளுமை:உமாகாந்தன், திருச்செல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர் = உமாகாந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:33, 2 நவம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | உமாகாந்தன் |
| தந்தை | திருச்செல்வம் |
| தாய் | சாவித்திரி |
| பிறப்பு | 1994.10.30 |
| இறப்பு | - |
| ஊர் | கல்லடி, வெருகல், திருகோணமலை |
| வகை | இளம் சமூக சேவையாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
உமாகாந்தன், திருச்செல்வம் (1994.10.30) கல்லடி - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த இளம் சமூக சேவையாளர் ஆவார். இவரது தந்தை திருச்செல்வம், தாய் சாவித்திரி. இவருக்கு இரண்டு பெண் சகோதரங்களும், இரண்டு ஆண் சகோதரங்களும் உள்ளனர். இவர் தனது ஆரம்பக்கல்வியினை வெருகல்- கல்லடி ஶ்ரீ மலை நீலியம்மன் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். பின்னர் தனது உயர் கல்வியினை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் கற்றுள்ளார். இவர் உயர் தரம் வரையில் மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் பல சமூக அமைப்புக்கள், ஊர் நலத்திட்டங்கள் மற்றும் சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்ட ஓர் இளந்தலைமுறையைச் சேர்ந்தவராகவும் காணப்படுகின்றார். அவ்வகையில் ஶ்ரீ பெரிய தெய்வம் அறி நெறிப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார். அதே சமயம் world vision நிறுவனத்தின் கள அலுவலராகவும் கடமையாற்றுகின்றார். அத்துடன் தேசிய இளைஞர் பேரவையின் கலாசாரப்பிரிவின் அங்கத்துவராகவும், மாவட்ட சம்மேளன உறுப்பினராகவும், நகர சபை உறுப்பினராகவும் என பல அமைப்புக்களில் பல பதவி நிலைகளினை வகித்தவராகவும் கூட காணப்படுகின்றார். தனது சமூகத்தில் இருந்து பல வகையான கற்றறிந்த சூழலில் பணியாற்றிவர் என்ற வகையில் தமது சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவராகவும் இன்றுவரைக்கும் காணப்படுகின்றார்.