"ஆளுமை:வேலுப்பிள்ளை , வீரக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர் = வேலுப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

06:13, 18 அக்டோபர் 2023 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேலுப்பிள்ளை
தந்தை வீரக்குட்டி
தாய் நல்லம்மா
பிறப்பு 1953. 04 .06
இறப்பு -
ஊர் தளவாய், மட்டக்களப்பு
வகை வேடக்கப்புறாளை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வீரக்குட்டி வேலுப்பிள்ளை (1953.04.06) தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பைச் சேர்ந்த வேடக்கப்புறாளை ஆவார். இவரது தந்தை வீரக்குட்டி, தாய் நல்லம்மா. இவரது மனைவி யோகமலர். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது ஆரம்பக் கல்வியினை தரம் மூன்று வரைக்கும் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தளவாய் கிராமத்திலே பனுவள சீயா, செல்லாப்பத்து சீயா, நல்லமாப்பான சீயா, பட்டியடி சீயா, திருக்காகனி சீயா, வெம்புத்தவறனை சீயா, புளியட்டி சீயா, நாகமுத்து, வீரக்குட்டி ஆகியோருக்குப் பின்னர் வாழும் தலைமுறையாக கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தளவாய் குமாரத்தன் வேடர் சங்கு மையத்தின் பிரதான கப்புறாளையாக இருந்து வருகின்றார். இவரது பிரதான தொழில் மீன்பிடி ஆகும். இவர் மீன்பிடி சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் முதலான அமைப்புக்களில் இருந்து ஊர் நலனுக்காகவும் பணியாற்றியுள்ளார். வேட மதகுருவாகவும், அதே சமயம் சடங்கியல் ரீதியான நோய் நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், தனது இருப்பிடத்துடனேயே ஒரு வழிபாட்டு அமைப்பினைச் செய்து அதனூடாக பணியும் செய்து வருகின்றார். எந்தவொரு குணமாக்கல் செயற்பாட்டிற்காகவும் இவர் எதுவித சன்மானமும் பெறுவதில்லை என்பது இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.