"ஆளுமை:வேலாயுதம், நல்லதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்= வேலாயுதம்)|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:50, 30 ஆகத்து 2023 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வேலாயுதம்) |
தந்தை | நல்லதம்பி |
தாய் | வள்ளி |
பிறப்பு | 1963.03.22 |
இறப்பு | - |
ஊர் | குஞ்சன்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு |
வகை | கரையோர வேட தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லதம்பி வேலாயுதம் (1963.03.22) கிழக்கு மாகாண கரையோர வேடர்களின் தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவர் பிறந்த இடம் மட்டக்களப்பு மாங்கேணி - காரைமுனை எனும் கிராமம் ஆகும். தற்போது வசிக்கும் இடம் மாங்கேணி குஞ்சன்குளம் எனும் கிராமம் ஆகும். தந்தை நல்லதம்பி;தாய் வள்ளி. இவரது மனைவி லீலா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் பாடசாலைக் கல்வியை அறியாதவர். தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் தெளிவுடன் தீர்த்துக் கொள்ளக் கூடியவராகக் காணப்படுகிறார். இவரது பிரதான தொழில் தேன் எடுத்தல் ஆகும். அத்துடன் மீன்பிடியையும் மேற்கொள்கின்றார். நவீன சிந்தனைகள் தமது சமூகத்தினை அத்துடன் குஞ்சன்குளம் கிராமத்தின் வழிபாடு, கல்வி, சமூக முன்னெடுப்புக்கள் முதலான சகல விடயங்களிலும் தன்முனைப்புடன் செயற்படக்கூடிய ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். தமது வழிபாடுகள் வனங்களில் இருந்து எவ்வாறு கிராமங்களை நோக்கி நகர்ந்தது, அதற்கான காரணங்கள் , நவீன சிந்தனையானது தமது மரபில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் முதலானவற்றையும் நன்கறிந்து கொண்ட ஒரு சமூக சேவையாளர் ஆவார்.