"ஆளுமை:விமலாதேவி, சரவணமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=விமலாதேவி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:09, 10 மே 2023 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | விமலாதேவி |
| தந்தை | சரவணமுத்து |
| தாய் | குணசெல்வி |
| பிறப்பு | 1978.09.22 |
| ஊர் | களுவன்கேணி, மட்டக்களப்பு |
| வகை | சமூக சேவையாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
விமலாதேவி, சரவணமுத்து(1978.09.22) மட்டக்களப்பு, களுவன்கேணியைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை சரவணமுத்து; தாய் குணசெல்வி. இவரது கணவர் கமலநாதன் ஆவார். தனது ஆரம்பக்கல்வியினை களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 10 வரை கற்றுள்ளார். அத்துடன் சமூர்த்திச் சங்கத்தலைவியாகவும், மாதர் சங்க நிர்வாக உறுப்பினராகவும், தேவை நாடும் பெண்கள் அமைப்பின் கிராமிய மட்டச் செயற்பாட்டாளராகவும் அத்துடன் பாரம்பரிய நோய் நீக்குனராகவும் காணப்படுகிறார்.
அழிவின் விழிம்பில் இருக்கின்ற வேடர்களின் பண்பாட்டு அசைவுகளை நன்கறிந்து கொண்ட ஒரு யுகசந்தியாக இவர் காணப்படுகின்றார். இவர் தனது சமூகத்தில் இருந்து ஓரளவு பாடசாலைக் கல்வியைப் பயின்றதோடு மட்டுமல்லாமல் , இன்றைய காலத்தில் தனது இனத்தினை மீட்டெடுக்கக்கூடிய காலனீய நீக்கச் சிந்தனையும் கொண்டவர். இன்றைய நிலையில் நிலையில் தமது சமூகத்தின் மொழியினை (வேட மொழி) ஓரளவு பேசக்கூடியவராகவும் தனது முன்னோர்களின் மந்திர மருத்துவ நடவடிக்கை நன்கறிந்து கொண்டு , அவற்றை நோய் நீக்கல் நடவடிக்கைகளுக்காகப் பிரயோகிக்கும் ஒரு நவீனத்தெளிவும், மரபு மீட்புச் சிந்தனை கொண்ட பெண்மணியும் ஆவார்.