"ஆளுமை:இராசகன்னி, செபமாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை1| பெயர்=இராசகன்னி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Meuriy, ஆளுமை: இராசகன்னி, செபமாலை பக்கத்தை ஆளுமை:இராசகன்னி, செபமாலை என்ற தலைப்புக்கு வழிமாற்று...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
05:07, 5 மே 2022 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | இராசகன்னி |
| தந்தை | செபமாலை |
| தாய் | சலோமை |
| பிறப்பு | 1957 |
| ஊர் | கிளிநொச்சி, வலைப்பாடு |
| வகை | நாட்டுக்கூத்து கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
இராசகன்னி, செபமாலை (1957 - ) கிளிநொச்சி, வலைப்பாட்டை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர் ஆவார். இவரது தந்தை தேவசகாயம்; தாய் சலோமை. தனது ஆரம்ப பாடசாலை கல்வியை வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று எட்டாம் ஆண்டு கல்வியைத் தொடர்வதற்காக மன்னார் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் சேர்க்கப்பட்டார்.
இவர் தனது 16வது வயதில் புனிதவதி நாட்டுக் கூத்தில் புனிதவதியின் தோழியாக தோன்றினார். தனது அண்ணன், சிந்தாந்துரை அண்ணாவி போன்றவர்களின் நாடகளான கண்டியரசன், தர்மபிரகாசம், நொண்டி என்பவற்றில் நடித்தார். அத்தோடு சமூக நாடகங்களான விடைகொடுத்தாய், பூந்தோட்ட காவல்காரன், என்பவற்றிலும் பாத்திரமேற்று நடித்தார்.
1993 ஆம் ஆண்டு மறைகல்வி நிலையத்தினால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் சிறந்த பாடகராக தெரிவுசெய்யப்பட்டார். பரதநாட்டியம், அபிநய நடனம், கும்மி, கோலாட்டம் எனும் கலை செயற்பாடுகளை தனது சொந்த தேடலின் மூலமாக பெற்று ஆலயத் திருவிழா, ஒளிவிழா, பொது நிகழ்வுகள் என்பவற்றை சிறப்பித்தார். தற்போது வலைப்பாடு வானவில் இசை குழுவில் சிறந்த பாடகியாக உள்ளார். தனது தகப்பன் காலத்திற்கும், அண்ணன் சிந்தாந்துரை அண்ணாவி காலத்திற்கும் பிற்பாடு ஒப்பாரி பாடல், பசாம் படித்தல், ஆலய பாடர்குழாம் என்று தொடர்கின்றது இவரது கலைப் பணி.