"நிறுவனம்:யாழ்/ வேலணை அதிசய வைரவர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:12, 19 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை அதிசய வைரவர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அதிசய வைரவர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது.


ஒருநாள் சோளாவத்தை என்ற பாரம்பரிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் செடிகளினூடே ஒரு சூலம் இருப்பதைக் கண்டு அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போனார்கள். அப்பொழுது வீட்டுப் பெரியவர்கள் பயத்தினால் அவர்களை கண்டித்து சூலத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விடச் சொன்னார்கள். அவர்கள் வேலணை - யாழ்ப்பாண நெடுஞ்சாலையிலே கிராமத்துள் நுழையும் ஓரிடத்தில் நின்ற பூவர மரத்தின் கீழ் அச் சூலத்தை நாட்டி தாங்கள் முயற்சிக்கேற்ப ஒரு சிறிய கொட்டிலையும் அமைத்தனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது சூலத்தின் முன் நிறைவான பணம் இருப்பதைக் கண்டு ஊர் பெரியவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டினர். அதைப் பார்த்த பெரியவர்கள் அதிசய வைரவராக இருக்கிறாரே என்று வியந்து அவருக்கு அவ்விடத்தில் கோவில் அமைக்கும் முயற்சியில் இறங்கி 12.05.1987இல் அடிக்கல் நாட்டினார்கள் என கோவில் வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 151-153