"நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=கிளி/வட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
1953 ம் ஆண்டு தொடங்கிய வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மத்திய பகுதியில் 03.05.1954 அன்று வட்டக்கச்சி அரசினர்
+
1953ஆம் ஆண்டு தொடங்கிய வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மத்திய பகுதியில் 03.05.1954 ஆம் ஆண்டு அன்று வட்டக்கச்சி அரசினர் வித்தியாலயம் என்ற பெயருடன் இவ் வித்தியாலயம் இயங்க தொடங்கியது. 15.10.1954 இல் இவ் வித்தியாலயத்தின் முதலாவது கட்டடம் அந்நாள் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வித்தியாலய முதல் அதிபராக திரு.கே.சிவகுருநாதன் மற்றும் முதல் ஆசிரியராக திருமதி சி.சிவகாமிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார். 03 ஆசிரியர்களும் 103 மாணவர்களும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
வித்தியாலயம் என்ற பெயருடன் இவ் வித்தியாலயம் இயங்க தொடங்கியது. 15.10.1954 இல் இவ் வித்தியாலயத்தின் முதலாவது கட்டடம் அந்நாள் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வித்தியாலய முதல் அதிபராக திரு.கே.சிவகுருநாதன் மற்றும் முதல் ஆசிரியராக திருமதி சி.சிவகாமிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார். 03 ஆசிரியர்களும் 103 மாணவர்களும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
 
1955 ஆம் ஆண்டு மாபெரும் கலை விழா நடைபெற்றது. அது மட்டுமன்றி 1962,1966 களில் பெற்றோர் தின விழாக்கள் நடந்தேறியது. இடைக்காலத்தில் யாழ்/இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்யப்பட்டதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
 
02:55, 9 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1953ஆம் ஆண்டு தொடங்கிய வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மத்திய பகுதியில் 03.05.1954 ஆம் ஆண்டு அன்று வட்டக்கச்சி அரசினர் வித்தியாலயம் என்ற பெயருடன் இவ் வித்தியாலயம் இயங்க தொடங்கியது. 15.10.1954 இல் இவ் வித்தியாலயத்தின் முதலாவது கட்டடம் அந்நாள் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வித்தியாலய முதல் அதிபராக திரு.கே.சிவகுருநாதன் மற்றும் முதல் ஆசிரியராக திருமதி சி.சிவகாமிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார். 03 ஆசிரியர்களும் 103 மாணவர்களும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

1955 ஆம் ஆண்டு மாபெரும் கலை விழா நடைபெற்றது. அது மட்டுமன்றி 1962,1966 களில் பெற்றோர் தின விழாக்கள் நடந்தேறியது. இடைக்காலத்தில் யாழ்/இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்யப்பட்டதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

இவ் வித்தியாலயம் வரலாற்றில் 1978 ஆம் ஆண்டு பொற்காலம் என குறிப்பிடப்பட்டது. காரணம் அக்காலத்தில் கடமை ஆற்றிய அதிபர் திரு.நா.பொன் சபாபதி அவர்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று குடும்ப பின்னணிகளை கண்டு ஆராய்ந்து மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வருதல், இருப்பிட வசதிகளையும் செய்து மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தார். 30.07.1979 ஆம் ஆண்டு மண்டபம் சி, மண்டபம் டி, மண்டபம் இ ஆகியன அடிக்கல் நாட்டப்பட்டு பூரணமாக்கப்பட்டது.

11.08.1976 ஆம் ஆண்டு முதலாவது மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி யாழ்/வட்டக்கச்சி மகா வித்தியாலயம் என தரம் உயர்த்தப்பட்டது. 02.06.1978ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட உடற்பயிற்சி போட்டியில் 13 வயது பிரிவு 04 இடம் கிடைத்தது . 1990.02.20ஆம் ஆண்டு வட்ட தீபம் இதழ் 01 வெளியிடப்பட்டது, 1994.02.21 ஆம் ஆண்டு வட்டதீபம் இதழ் 02 வெளியிடப்பட்டது. 15.06.2014 ஆம் ஆண்டு கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. வட்ட தீபம் இதழ் 03 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. 2017.07.12ஆம் ஆண்டு வைர விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினர் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடன் நடைபெற்றது.