"ஆளுமை:பசுபதி,கந்தையா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பசுபதி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
[[படிமம்:Pasupathy kanthaiya.jpg|300px]] | [[படிமம்:Pasupathy kanthaiya.jpg|300px]] | ||
− | பசுபதி கந்தையா (1925.07.14 - 1965.07.05) பருத்தித்துறை | + | பசுபதி கந்தையா (1925.07.14 - 1965.07.05) வராத்துப்பளை,பருத்தித்துறை. இவரது தந்தை கந்தையா; தாய் அன்னம். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுள்ள செவிடர் குருடர் பாடசாலையில் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றார். |
+ | |||
யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளுடன் செயற்பட்டவர். பகுத்தறிவு வாதியாகவும் இறைமறுப்பாளராகவு வாழ்ந்தார். | யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளுடன் செயற்பட்டவர். பகுத்தறிவு வாதியாகவும் இறைமறுப்பாளராகவு வாழ்ந்தார். | ||
1956 தொடக்கம் 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டதற்கு முன்னின்று உழைத்தவர். மேலும், தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். | 1956 தொடக்கம் 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டதற்கு முன்னின்று உழைத்தவர். மேலும், தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். | ||
+ | |||
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது கவிதைகளை வெளியிட்டு வந்துள்ளார். இவர் தனது கவிதைகளில் சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். பசுபதி தனது 40வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். இவரது மறைவிற்குப் பின்னால் 1965 செப்டம்பரில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் புது உலகம் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. | இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது கவிதைகளை வெளியிட்டு வந்துள்ளார். இவர் தனது கவிதைகளில் சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். பசுபதி தனது 40வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். இவரது மறைவிற்குப் பின்னால் 1965 செப்டம்பரில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் புது உலகம் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. | ||
23:47, 1 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பசுபதி |
தந்தை | கந்தையா |
தாய் | அன்னம் |
பிறப்பு | 1925.07.14 |
இறப்பு | 1965.07.05 |
ஊர் | வராத்துப்பளை,பருத்தித்துறை,
வகை= இடதுசாரி,கவிஞர் |
வகை | {{{வகை}}} |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பசுபதி கந்தையா (1925.07.14 - 1965.07.05) வராத்துப்பளை,பருத்தித்துறை. இவரது தந்தை கந்தையா; தாய் அன்னம். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுள்ள செவிடர் குருடர் பாடசாலையில் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.
யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளுடன் செயற்பட்டவர். பகுத்தறிவு வாதியாகவும் இறைமறுப்பாளராகவு வாழ்ந்தார். 1956 தொடக்கம் 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டதற்கு முன்னின்று உழைத்தவர். மேலும், தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார்.
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது கவிதைகளை வெளியிட்டு வந்துள்ளார். இவர் தனது கவிதைகளில் சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். பசுபதி தனது 40வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். இவரது மறைவிற்குப் பின்னால் 1965 செப்டம்பரில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் புது உலகம் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.
வெளி இணைப்புக்கள்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF