"ஆளுமை:யோகராசா, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=கிளிநொச்சி, புலோப்பளை|
 
ஊர்=கிளிநொச்சி, புலோப்பளை|
வகை=இசைக் கலைஞர்|
+
வகை=இசைக்கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

04:09, 14 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகராசா
தந்தை கந்தையா
தாய் -
பிறப்பு 1948.07.03
ஊர் கிளிநொச்சி, புலோப்பளை
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா, கந்தையா (1948.07.03 - ) கிளிநொச்சி, புலோப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை கந்தையா. தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றுக்கொண்டார். 17,18 வயதுகளில் கொழும்பு மரக்கறி அனுப்பும் மரக்கலமிருஸ் என்பவரிடம் மிருதங்கத்தையும், பாட்டு பாடுதலையையும் முறைப்படி கற்றார். சங்கத்தானையில் 1982 ஆம் ஆண்டு சினிமா பாணியில் மேடையேற்றப்பட்ட நீரும் நெருப்பும் எனும் நாடகத்திற்கு மிருதங்கம் வாசித்தார். 1974 ஆம் ஆண்டு தொடக்கம், சின்னத்திரை அவருடன் இணைந்து நாடகங்களுக்கு மிருதங்கம் வாசித்ததுடன், ஆறுமுகம், செல்லத்துரை, சின்னத்திரை, செல்லையா, போன்ற கலைஞர்களுடன் இணைந்து அவர்களின் கூத்துக்களுக்கு பிரதான மிருதங்க வித்துவனாகவும் செயற்பட்டார்.

புலோபளைமுருகையன், சோறன்பற்று அம்மன், நோச்சித்தாழ்வு, சின்ன தாளையடி அம்மன், தணிக்கையடிமுருகன் ஆலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.

2011 இல் கிளிநொச்சி மாவட்ட கலாசாரப்பேரவையால் கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரது கலைப்பணி பளைப்பிரதேச கலாச்சார பேரவையுடனும் சென்மேரிஸ், அறிவொளி கலைமன்றங்களுடனும் இணைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகராசா,_கந்தையா&oldid=469706" இருந்து மீள்விக்கப்பட்டது