"ஆளுமை:திருநாவுக்கரசு, முத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=திருநாவுக்கரசு| | பெயர்=திருநாவுக்கரசு| | ||
தந்தை=முத்து| | தந்தை=முத்து| | ||
வரிசை 19: | வரிசை 19: | ||
{{வளம்|7571|165}} | {{வளம்|7571|165}} | ||
{{வளம்|15444|109-110}} | {{வளம்|15444|109-110}} | ||
+ | [[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]] |
22:58, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | முத்து |
பிறப்பு | 1943.10.30 |
இறப்பு | 1990 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, முத்து (1943.10.30 - 1990) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்து. சிறுவயது முதலே இசை, நாடகம், பாட்டு, ஆர்மோனியம் இசைத்தல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர், அரியாலையின் புகழ்பூத்த சங்கீத இசைநாடக சிரோன்மணி சபாபதிப்பிள்ளையிடம் சங்கீத நுணுக்கங்களைச் சிறுவயதில் பெற்றதோடு நாடகக் கலாநிதி நடிகமணி வி. வி. வைரமுத்துவிடம் ஆர்மோனியக் கலையைக் கற்றுத் தேர்ந்தார்.
இவர் அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, வேடன் கண்ணப்பன் ஆகிய நாடகங்களில் நடித்தும் தனது குருவான நாடகக் கலாநிதி நடிகமணி வி. வி. வைரமுத்துவின் இசை நாடகங்களுக்குப் பின்னணி இசைக் கலைஞராகவும் செயற்பட்டுள்ளார்.
ஆர்மோனியச் சக்ரவர்த்தி என பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இவர், 1963 ஆம் ஆண்டு அரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலய முன்றலில் இடம்பெற்ற இசை விழாவில் ஆசிரியப் பெருந்தகை வித்துவான் அமரர் வட அல்வை முருகேசுவால் பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 165
- நூலக எண்: 15444 பக்கங்கள் 109-110