"ஆளுமை:இராஜலட்சுமி, க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=இராஜலட்சும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:54, 29 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | இராஜலட்சுமி |
பிறப்பு | 1954.09.05 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜலட்சுமி, க 1972ஆம் ஆண்டு கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். பாடசாலைக் காலத்தில் நடனம், நாடகம், பாட்டு, பேச்சு ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் இவரின் கிராமத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை இணைத்து கலைமகள் நாடகமன்றத்தின் ஊடாக சமூக நாடகங்களை பல இடங்களில் அரங்கேற்றியுள்ளார். 1990ஆம் ஆண்டு அரச அலுவலர்கள் மட்டும் இணைந்து உருவாக்கிய கோவலன் கூத்தில் பங்குபற்றி மேடையேற்றினார். ரூபவாஹினி தொலைக்காட்சி இக்கூத்தினை ஒளிபரப்பியது. இக்கூத்தின் பின்னணிப் பாடகியாகவும் இவர் பங்கு பற்றினார்.
விருதுகள்
சாமஸ்ரீ விருது – 2017