"ஆளுமை:பாலகப்போடி, சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலகப்போடி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=2011.01.22|
 
இறப்பு=2011.01.22|
 
ஊர்=மட்டக்களப்பு படுவான்கரை|
 
ஊர்=மட்டக்களப்பு படுவான்கரை|
வகை=கலைஞர்
+
வகை=கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

19:28, 13 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலகப்போடி
தந்தை சின்னவிப்போடி
தாய் மாரிமுத்து
பிறப்பு 1944.11.15
இறப்பு 2011.01.22
ஊர் மட்டக்களப்பு படுவான்கரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகப்போடி, சி (11944.11.15) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிறந்த அளுமை. இவரது தந்தை சின்னவிப்போடி. தாய் மாரிமுத்து. கூத்து கலையின் மீது சிறு வயது முதலே ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கூத்து ஏடுகளை எழுதிக் கொடுக்கின்ற கணபதிப்பிள்ளை வைத்தியருடன் இணைந்து அவர் பாடி எழுதுகின்ற போது பாலகப்போடி அண்ணாவியார் அவற்றை அவதானித்து கேட்டு கொண்டிருப்பார். இவர் சிறு வயதில் இருந்தே மத்தளம் அடிப்பதைப் பழகிக் கொண்டார். பாலகப்போடி அண்ணாவியார் நாகமணிப்போடி அண்ணாவியாரை தனது குருவாகக் கொண்டு வடமோடி தென்மோடிக் கூத்துப் பாடல்கள், ஆட்ட நுணுக்கங்கள், தாளக்கட்டுக்கள் போன்றவற்றை கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். 1965ஆம் ஆண்டு முழுமையான அண்ணாவியராக திகழ்ந்தார்.

வடமோடிக் கூத்தான 17ஆம் 18ஆம் போர்க் கூத்தில் விஜயகர்ணன் பாத்திரம் ஏற்று ஆடினார். தென்மோடிக்கூத்தான சாம்பேந்திரன் நாடகத்தில் பிராமணன் பாத்திரம் ஏற்று ஆடினார். மேலும் பாலகப்போடி அண்ணாவியார் எட்டு வடமோடிக்கூத்துக்களும் பத்து தென்மோடிக் கூத்துக்களும் பழக்கி அங்கேற்றியுள்ளார். இவர் பழந்தமிழ் புராண இதிகாச நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.

விருதுகள்

கலாவித்தகர் விருது – 2000.

கலாபூஷணம் விருது – 2006.

வளங்கள்

  • நூலக எண்: 76234 பக்கங்கள் 3-5
  • நூலக எண்: 101818 பக்கங்கள் 14
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாலகப்போடி,_சி&oldid=396504" இருந்து மீள்விக்கப்பட்டது