"ஆளுமை:தனராஜ், தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{6115|3- | + | {{6115|3-3}} |
{{9062|72-82}} | {{9062|72-82}} | ||
{{10508|16-20}} | {{10508|16-20}} |
23:01, 25 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தனராஜ் |
பிறப்பு | 1948.04.06 |
ஊர் | தலவாக்கலை |
வகை | கல்வியியலாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பேராசிரியர் தனராஜ், தை நுவரெலியா தலவாக்கலையில் பிறந்த பிறந்த ஆளுமை. தனது ஆரம்பக் கல்வியை தலவாக்கெல்ல மிடில்டன் தோட்டப் பாடசாலையிலும், பின்னர் தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் பாடசாலையிலும் உயர்தரத்தை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார். கோல்புறூக் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவ ஆசிரியராக 1968ஆம் ஆண்டு கல்விப்பணியைத் தொடரந்தார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகத் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியலில் முதுமாணிப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தில் MBA புதுடில்லி National Institute of Educational Planning and Administration நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். தொழில் ரீதியாக ஆசிரியர் (1971-1972), அதிபர் (1976-1983) ஆகிய பதவிகளை வகித்த இவர் இலங்கை கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி செயல் திட்டத்தில் செயற்திட்ட அதிகாரி (1984), மாலைத்தீவு, ஓமான் போன்ற நாடுகளிலும் ஆசிரியராகவும் இலங்கை கல்வி அமைச்சின் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்திச் செயற்திட்டத்தில் செயற்திட்ட அதிகாரியாகவும், இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறைப் பணிப்பாளராகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி செயல்படுத்தப்பட்ட தொலைக்கல்வி நவீன மயமாக்கல் தெயற்திட்டத்தில் நிபுணத்துவ ஆலோசகர் ஆகிய பதவிகளை வகித்தள்ளார்.
இந்தியா, அவுஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து முதலிய நாடுகளில் கல்விசார் பயிற்சி நெறிகளைில் கலந்துகொண்டுள்ளார்.
இவரின் கல்வி முகாமைத்துவம் தொடர்பான கட்டுரைகள் இலங்கையின் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியருமாவார். அத்துடன் மொழிபெயர்பபாளராகவும் தன்னை அடையாளப்படுத்துகின்றார். ”தலைமைத்துவக் கோட்பாடுகள்” இவரின் நூலாகும்.
படைப்புகள்
வளங்கள்
வார்ப்புரு:6115 வார்ப்புரு:9062 வார்ப்புரு:10508 வார்ப்புரு:10508 வார்ப்புரு:11655 வார்ப்புரு:15466 வார்ப்புரு:15861