"ஆளுமை:தர்சினி, தரணிகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=தர்சினி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
19:43, 26 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தர்சினி |
தந்தை | கோவிந்தராசா |
தாய் | இந்திரா |
பிறப்பு | 1990.10.04 |
ஊர் | அம்பாறை காரைதீவு |
வகை | எழுத்தாளர், கல்வியியலாளர், கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
'தர்சினி, தரணிகரன் (1990.10.04) அம்பாறை மாவட்டம் காரைதீவில் பிறந்த பெண் ஆளுமை. கலைஞர். இவரது தந்தை கோவிந்தராசா; தாய் இந்திரா. ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பில் கற்றார். இவரின் கணவர் தரணிகரன். மேதவன், மேகவண்ணன் எனும் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாவார் தர்சினி. ஆரம்பக் கல்வியை காரைதீவு பாலையடி விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் கற்றார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறை மீதுள்ள ஈடுபாடுகாரணமாக அதில் சிறப்புப்பட்டம் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய உப தலைவராகவும் பாலையடி விக்கினேஸ்வரா அறநெறிப் பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது எழுத்துத்துறை மீது கொண்ட விருப்பம் காரணமாக சிறுகதை, பாடலாக்கம் என படைப்புக்களை படைத்துள்ளார். பாலையடி புத்தாக்க கலாமன்றம் எனும் பெயரில் மன்றம் ஒன்றை ஆரம்பித்து இயக்கி வருகிறார்.பட்டப்படிப்பை முடித்த பின்பு அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமை புரித்தார். தற்பொழுது தமனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றார்.
பால்நிலை சமத்துவம், சமூக இடர்பாடு பெண்கள் முதன்மைத்துவம் என பல கருப்பொருளில் தனக்குள் இலை மறை காயாக இருந்த திறனை வெளிக்கொணர்ந்த வண்ணம் இருக்கும் இவர் வளருந்து வரும் கலைஞராவார்.
விருதுகள்
இளம் கலைஞர் விருது
குறிப்பு மேற்படி பதிவு தர்சினி தரணிகரணி்ன் தகவலை அடிப்படையாகக் கொண்டது.