"ஆளுமை:புவனேஸ்வரி, சண்முகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | '''புவனேஸ்வரி, சண்முகநாதன்''' (1962.02.26) பதுளை, தெளிவத்தை தோட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அழகிரிசாமி பிலிப்ஸ்; தாய் மரியாள் அங்கம்மா . புவனேஸ்வரி சண் எனும் புனைபெயரில் ஆக்கங்களை எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை தெளிவத்தை தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பதுளை பாரதி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டதாரியாகவும் தமிழ்நாடு காரைக்குடி அழகப்பர் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், நாட்டார், கிராமிய பாடல்கள் எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர் புவனேஸ்வரி. 1978ஆம் ஆண்டில் இருந்தே இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி பத்திரிகையில் கவிதைகள் (மணிக்கவிதை) வெளிவந்துள்ளன. சமூக நிகழ்ச்சிகளில் பேசுவதுடன் சமூக வலைதளங்களில் வெளிவரும் தமிழ்பட்டறை மின்னிதழில் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. 1983ஆம் ஆண்டு முதல் | + | '''புவனேஸ்வரி, சண்முகநாதன்''' (1962.02.26) பதுளை, தெளிவத்தை தோட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அழகிரிசாமி பிலிப்ஸ்; தாய் மரியாள் அங்கம்மா . புவனேஸ்வரி சண் எனும் புனைபெயரில் ஆக்கங்களை எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை தெளிவத்தை தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பதுளை பாரதி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டதாரியாகவும் தமிழ்நாடு காரைக்குடி அழகப்பர் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். |
+ | |||
+ | பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், நாட்டார், கிராமிய பாடல்கள் எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர் புவனேஸ்வரி. 1978ஆம் ஆண்டில் இருந்தே இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி பத்திரிகையில் கவிதைகள் (மணிக்கவிதை) வெளிவந்துள்ளன. சமூக நிகழ்ச்சிகளில் பேசுவதுடன் சமூக வலைதளங்களில் வெளிவரும் தமிழ்பட்டறை மின்னிதழில் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. 1983ஆம் ஆண்டு ஆரம்பகல்வி ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றியதுடன், அதன் பின் 2000ஆம் ஆண்டு முதல் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருகிறார். ஹட்டன் கல்வி வலயத்தில் சேவையாற்றியுள்ளார். இவரின் மகன் அருண்பிரசாத் ஒரு வைத்தியர் என்பதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார். | ||
விருதுகள் | விருதுகள் |
18:49, 2 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | புவனேஸ்வரி |
தந்தை | அழகிரிசாமி பிலிப்ஸ் |
தாய் | மரியாள் அங்கம்மா |
பிறப்பு | 1962.02.26 |
ஊர் | தெளிவத்தை (பதுளை) |
வகை | எழுத்தாளர், கல்வியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புவனேஸ்வரி, சண்முகநாதன் (1962.02.26) பதுளை, தெளிவத்தை தோட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அழகிரிசாமி பிலிப்ஸ்; தாய் மரியாள் அங்கம்மா . புவனேஸ்வரி சண் எனும் புனைபெயரில் ஆக்கங்களை எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை தெளிவத்தை தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பதுளை பாரதி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டதாரியாகவும் தமிழ்நாடு காரைக்குடி அழகப்பர் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், நாட்டார், கிராமிய பாடல்கள் எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர் புவனேஸ்வரி. 1978ஆம் ஆண்டில் இருந்தே இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி பத்திரிகையில் கவிதைகள் (மணிக்கவிதை) வெளிவந்துள்ளன. சமூக நிகழ்ச்சிகளில் பேசுவதுடன் சமூக வலைதளங்களில் வெளிவரும் தமிழ்பட்டறை மின்னிதழில் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. 1983ஆம் ஆண்டு ஆரம்பகல்வி ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றியதுடன், அதன் பின் 2000ஆம் ஆண்டு முதல் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருகிறார். ஹட்டன் கல்வி வலயத்தில் சேவையாற்றியுள்ளார். இவரின் மகன் அருண்பிரசாத் ஒரு வைத்தியர் என்பதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.
விருதுகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது இளங்கவி விருது கவி நிலா விருது வளர் நிலா விருது கவி முகில் விருது சொல்வேந்தர் விருது கவிச்சாகரம் விருது நிலாக்கவி விருது கவித் தாமரை விருது
குறிப்பு : மேற்படி பதிவு புவனேஸ்வரி, சண்முகநாதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.