"ஆளுமை:ஹேமமாலினி, உதயகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்= அனுராதபுரம்| | ஊர்= அனுராதபுரம்| | ||
− | வகை= எழுத்தாளர், கலைஞர்| | + | வகை= எழுத்தாளர், கலைஞர்,உற்பத்தியாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | '''ஹேமமாலினி, உதயகுமார்''' (1948.06.04) அனுராதபரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மெய்யழகன்; தாய் தில்லையம்மா. அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். சிறுகதை, கட்டுரை, கவிதை, பாடல் எழுதுதல், நாடக நெறியாளர், நாடக நடிகை, ஓவியர், தையல் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் என பன்முகத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டவர் எழுத்தாளர் ஹேமமாலினி. 1964ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் நுழைந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கை | + | '''ஹேமமாலினி, உதயகுமார்''' (1948.06.04) அனுராதபரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மெய்யழகன்; தாய் தில்லையம்மா. அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். சிறுகதை, கட்டுரை, கவிதை, பாடல் எழுதுதல், நாடக நெறியாளர், நாடக நடிகை, ஓவியர், தையல் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் என பன்முகத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டவர் எழுத்தாளர் ஹேமமாலினி. 1964ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் நுழைந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இசையும் கதையும்,சிறுகதை, கவிதை போன்ற நிகழ்ச்சியின் ஊடாக ஒலிபரப்பப்பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களிலும் ஹேமமாலினியின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சுனேரா பவுண்டேசனின் ஊடாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கான இரண்டு வருட பயிற்சியையும் இவர் முடித்துள்ளார். இவரால் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நாடக நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்டு வடமாகாணத்தில் முதலாமிடத்தை இந்நாடகம் பெற்றமை விசேட அம்சமாகும். அத்தோடு சுனேர பவுண்டேசனின் வவுனியா இணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். தையல், ஓவியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் சித்திர பாட ஆசிரிய ஆலோசகராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்துள்ளார். தேசிய அருங்கலைகள் பேரவையின் செயலாளராகவும் உள்ளார். சிங்கள நாளிதழ்களில் வெளிவந்த சிறுவர் கதைகளை மொழிப்பெயர்த்து தமிழ் நூல் தொகுப்பொன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். சலோம் எனும் சிறுகைத்தொழிலகத்தினையும் நடத்தி வருகிறார். பாடல்கள் எழுதுவதோடு அவற்றைப் பாடும் திறனையும் கொண்டுள்ளார் ஹேமமாலினி.தற்போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் தையல் வகுப்போடு கைப்பணி வகுப்புகளையும் நடாத்துகின்றார். |
== படைப்புகள் == | == படைப்புகள் == |
10:14, 11 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஹேமமாலினி |
தந்தை | மெய்யழகன் |
தாய் | தில்லையம்மா |
பிறப்பு | 1948.06.04 |
ஊர் | அனுராதபுரம் |
வகை | எழுத்தாளர், கலைஞர்,உற்பத்தியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஹேமமாலினி, உதயகுமார் (1948.06.04) அனுராதபரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மெய்யழகன்; தாய் தில்லையம்மா. அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். சிறுகதை, கட்டுரை, கவிதை, பாடல் எழுதுதல், நாடக நெறியாளர், நாடக நடிகை, ஓவியர், தையல் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் என பன்முகத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டவர் எழுத்தாளர் ஹேமமாலினி. 1964ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் நுழைந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இசையும் கதையும்,சிறுகதை, கவிதை போன்ற நிகழ்ச்சியின் ஊடாக ஒலிபரப்பப்பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களிலும் ஹேமமாலினியின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சுனேரா பவுண்டேசனின் ஊடாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கான இரண்டு வருட பயிற்சியையும் இவர் முடித்துள்ளார். இவரால் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நாடக நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்டு வடமாகாணத்தில் முதலாமிடத்தை இந்நாடகம் பெற்றமை விசேட அம்சமாகும். அத்தோடு சுனேர பவுண்டேசனின் வவுனியா இணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். தையல், ஓவியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் சித்திர பாட ஆசிரிய ஆலோசகராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்துள்ளார். தேசிய அருங்கலைகள் பேரவையின் செயலாளராகவும் உள்ளார். சிங்கள நாளிதழ்களில் வெளிவந்த சிறுவர் கதைகளை மொழிப்பெயர்த்து தமிழ் நூல் தொகுப்பொன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். சலோம் எனும் சிறுகைத்தொழிலகத்தினையும் நடத்தி வருகிறார். பாடல்கள் எழுதுவதோடு அவற்றைப் பாடும் திறனையும் கொண்டுள்ளார் ஹேமமாலினி.தற்போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் தையல் வகுப்போடு கைப்பணி வகுப்புகளையும் நடாத்துகின்றார்.
படைப்புகள்
விருதுகள்
தேசிய உற்பத்திக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
குறிப்பு : மேற்படி பதிவு ஹேமமாலினி, உதயகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.