"ஆளுமை:வள்ளிநாயகி, இராமலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(3 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=வள்ளிநாயகி இராமலிங்கம் | | + | பெயர்=வள்ளிநாயகி, இராமலிங்கம்| |
− | தந்தை=| | + | தந்தை=சின்னத்தம்பி| |
− | தாய்=| | + | தாய்=செல்லமுத்து| |
பிறப்பு=1933.01.09| | பிறப்பு=1933.01.09| | ||
− | இறப்பு=| | + | இறப்பு=2016.09.15| |
ஊர்=காங்கேசன்துறை| | ஊர்=காங்கேசன்துறை| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்= | | + | புனைபெயர்=குறமகள்| |
}} | }} | ||
− | வள்ளிநாயகி இராமலிங்கம் (1933.01.09 - ) யாழ்ப்பாணம், | + | வள்ளிநாயகி, இராமலிங்கம் (1933.01.09 - 2016.09.15) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியை, விரிவுரையாளர் (ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி), பதில் அதிபர் (அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி). இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லமுத்து. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார். |
+ | இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' 1955 அளவில் ஈழகேசரியில் பிரசுரமானது.தொடர்ந்து குறமகள், இராசாத்திரம், சத்தியபிரியா, காங்கயி, சக்திக்கனல் ஆகிய புனைபெயரில் வாழ்வைத் தேடு, பிரிவும் இன்பம் தரும், ஆளுமைகள் அழிகின்றன, ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது, அவள் கொடுத்த விலை, வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும் உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் 65 சிறுகதைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 300 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் உள்ளிட்ட இலங்கை, இந்திய, கனேடிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் கனடாவிலிருந்து வெளிவரும் செய்தித் தாளான துருவத்தாரகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய இவரது நூல்கள். | ||
+ | |||
+ | இவரது கலிங்கத்துக் காவலன் என்ற வானொலி நாடகம் அகில இலங்கைக் கலைக்கழக நாடகப் போட்டியில் பரிசு பெற்றது. பாற்கடல் கடைந்த கதை, இராமர் யுத்தம் என்பன இவரது நாட்டிய நாடகங்களாகும். இவர் மாலை சூட்டும் நாள் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர், தனது முதுமாணிப்பட்ட படிப்பிற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களின் கல்வி - ஓர் ஆய்வு' என்ற ஆய்வேட்டை நூலாக வெளியிட்டார். இலங்கை தமிழர் எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ் இலக்கிய வட்டம், கலை இலக்கியக் கழகம், பெண்கள ஆய்வு வட்டம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றவராகவும் விளங்குகின்றார். | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[:பகுப்பு:வள்ளிநாயகி இராமலிங்கம்|இவரது நூல்கள்]] | * [[:பகுப்பு:வள்ளிநாயகி இராமலிங்கம்|இவரது நூல்கள்]] | ||
− | |||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | + | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D வள்ளிநாயகி இராமலிங்கம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1856|33-38}} | {{வளம்|1856|33-38}} | ||
{{வளம்|10203|23-25}} | {{வளம்|10203|23-25}} | ||
+ | {{வளம்|16488|104-105}} | ||
+ | {{வளம்|10174|30}} | ||
+ | |||
+ | {{குறுங்கட்டுரை}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
04:14, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வள்ளிநாயகி, இராமலிங்கம் |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | செல்லமுத்து |
பிறப்பு | 1933.01.09 |
இறப்பு | 2016.09.15 |
ஊர் | காங்கேசன்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வள்ளிநாயகி, இராமலிங்கம் (1933.01.09 - 2016.09.15) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியை, விரிவுரையாளர் (ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி), பதில் அதிபர் (அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி). இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லமுத்து. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' 1955 அளவில் ஈழகேசரியில் பிரசுரமானது.தொடர்ந்து குறமகள், இராசாத்திரம், சத்தியபிரியா, காங்கயி, சக்திக்கனல் ஆகிய புனைபெயரில் வாழ்வைத் தேடு, பிரிவும் இன்பம் தரும், ஆளுமைகள் அழிகின்றன, ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது, அவள் கொடுத்த விலை, வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும் உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் 65 சிறுகதைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 300 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் உள்ளிட்ட இலங்கை, இந்திய, கனேடிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் கனடாவிலிருந்து வெளிவரும் செய்தித் தாளான துருவத்தாரகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய இவரது நூல்கள்.
இவரது கலிங்கத்துக் காவலன் என்ற வானொலி நாடகம் அகில இலங்கைக் கலைக்கழக நாடகப் போட்டியில் பரிசு பெற்றது. பாற்கடல் கடைந்த கதை, இராமர் யுத்தம் என்பன இவரது நாட்டிய நாடகங்களாகும். இவர் மாலை சூட்டும் நாள் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர், தனது முதுமாணிப்பட்ட படிப்பிற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களின் கல்வி - ஓர் ஆய்வு' என்ற ஆய்வேட்டை நூலாக வெளியிட்டார். இலங்கை தமிழர் எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ் இலக்கிய வட்டம், கலை இலக்கியக் கழகம், பெண்கள ஆய்வு வட்டம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றவராகவும் விளங்குகின்றார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 33-38
- நூலக எண்: 10203 பக்கங்கள் 23-25
- நூலக எண்: 16488 பக்கங்கள் 104-105
- நூலக எண்: 10174 பக்கங்கள் 30