"ஆளுமை:பிரியந்தனா, தியாகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 13: வரிசை 13:
  
 
விருதுகள்
 
விருதுகள்
 +
 
நிலா முற்றம் குழுமத்தின் ஊடாக இவர் எழுதிய கவிதைகள் பல சான்றிதழ்களை பெற்றுள்ளன.  
 
நிலா முற்றம் குழுமத்தின் ஊடாக இவர் எழுதிய கவிதைகள் பல சான்றிதழ்களை பெற்றுள்ளன.  
  

23:44, 26 மே 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் ப்ரியந்தனா
தந்தை தியாகராஜா
தாய் மங்களநாயகி
பிறப்பு 25.11
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ப்ரியந்தனா, தியாகராஜா (25.11) யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த எழுத்தாளர். ப்ரியா காசிநாதன் எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். இவரது தந்தை தியாகராஜா; தாய் மங்களநாயகி. ஆரம்பக் கல்வியை யா/கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் கல்விகற்றார். ஆங்கில டிப்ளோமா முடித்துள்ள எழுத்தாளர் British way English Academy இல் விரிவுரையாளராகக் கடமையாற்றகிறார். அத்தோடு முகாமைத்துவம் தொடர்பாகக் கற்றுக்கொண்டுள்ளார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்கு இவர் பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை எழுதி வரும் பிரியந்தனாவின் ஆக்கங்கள் தினக்குரல் பத்திரிகையிலும் சாரதி என்னும் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான Motivation கவிதையாகவும் தமிழ்மொழி தொடர்பான கவிதையாகவும் இவரின் கவிதைகள் அமைந்துள்ளது. கவிதை நூல் ஒன்றை மிக விரைவில் வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கின்றார் இளம் எழுத்தாளரான பிரியந்தனா. பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். சுன்னாகம் ரொட்ரிக்கிளப், சிறகுகள் அமையத்திலும் உறுப்பினராக இருந்து வருகிறார். சிறகுகள் அமையம் ஒன்பது மாவட்டங்களின் தனது கிளையையின் ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது. இலங்கையில் ஒலிபரப்பாகும் ஒலி ஊடகத்தின் ஊடாக இவர் அதன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இவர் வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் இரண்டிலும் ஆர்வமுள்ளவர். எழுத்துத்துறையுடன் சமூகசேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றார் பிரியந்தனா. அமுதசுரபி அறக்கட்டளை நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. இவர் குறும்படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். அத்தோடு வயலின் வாசிப்பதிலும் ஆர்வமுள்ளவர்.

விருதுகள்

நிலா முற்றம் குழுமத்தின் ஊடாக இவர் எழுதிய கவிதைகள் பல சான்றிதழ்களை பெற்றுள்ளன.

குறிப்பு : மேற்படி பதிவு ப்ரியந்தனா, தியாகராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.