"ஆளுமை:காவலூர் இராசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:காவலூர் இராசதுரை, மரியாம்பிள்ளை, [[ஆளுமை:காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம...) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Gopi, ஆளுமை:காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை பக்கத்தை ஆளுமை:காவலூர் இராசதுரை என்ற தலைப...) |
||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19: | வரிசை 19: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | ||
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|25}} | {{வளம்|4253|25}} | ||
{{வளம்|1203|05-07}} | {{வளம்|1203|05-07}} |
09:01, 20 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | காவலூர் டேவிட் இராசதுரை |
தந்தை | மரியாம்பிள்ளை |
பிறப்பு | 1931.10.13 |
இறப்பு | 2014.10.14 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.13 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. ஊர்காவற்றுறை அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பின்னர் இலங்கை மத்திய வங்கியிலும் அரசாங்க உணவக உற்பத்தி இலாகாவிலும் லிகிதராகவும் இலங்கை ஷெல் கம்பனி ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரசாரப் பிரிவிலும் கடமையாற்றினார்.
தனது 30 ஆவது வயதில் குழந்தை ஒரு தெய்வம்' என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிடும் இவர், 1950 ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய போதும் 1959 இன் பின்னர்தான் சிறுகதையாசிரியராகப் பரிணமித்தார். விமர்சனத்துறை, வசனக் கவிதையிலும் ஈடுபாடு உடையவர். இவரது சிறுகதைகள் இவரது சொந்த ஊரான கரம்பனை நிலைக்களமாகக் கொண்டவை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கலைக்கோலம் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். இவரது இசைக்கோவைத் தயாரிப்பு தேசிய சேவையிலும் மறு ஒலிபரப்பாகிய முதல் நிகழ்ச்சி என்ற சிறப்பிற்குரியது. சுதந்திரன், வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். காலங்கள் தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் வசீகரா விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். குழந்தை ஒரு தெய்வம், வீடு யாருக்கு, ஒரு வகை உறவு, விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம் போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 25
- நூலக எண்: 1203 பக்கங்கள் 05-07