"ஆளுமை:விசாலாட்சி மாதாஜி அம்மையார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(படைப்புகள்)
 
வரிசை 14: வரிசை 14:
  
 
== படைப்புகள் ==
 
== படைப்புகள் ==
* [[சிறுவர் ஞானத்தமிழ் நாடகம்]]
+
* சிறுவர் ஞானத்தமிழ் நாடகம்
* [[சிவவிரத மான்மியக் கதைகள்]]
+
* சிவவிரத மான்மியக் கதைகள்
* [[சிவராத்திரி புராண படனம்]]
+
* சிவராத்திரி புராண படனம்
* [[திருக்கேதீஸ்வரம் - சிறுகுறிப்பு]]
+
* திருக்கேதீஸ்வரம் - சிறுகுறிப்பு
* [[கந்தபுராண அமுதம்]]
+
* கந்தபுராண அமுதம்
* [[நல்லூர்க் கந்தன் நான்மணிக்கோவை]]
+
* நல்லூர்க் கந்தன் நான்மணிக்கோவை
* [[குப்பிளான் சோதி விநாயகர் கவசமணிக்கோவை]]
+
* குப்பிளான் சோதி விநாயகர் கவசமணிக்கோவை
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]

05:18, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் விசாலாட்சி
தந்தை சின்னையா
தாய் உமையம்மை
பிறப்பு 1931.11.12
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசாலாட்சி மாதாஜி அம்மையார் (1931.11.12) யாழ்ப்பாணம், குப்பிளானில் பிறந்தவர். இவரது தந்தை சின்னையா; தாய் உமையம்மை. ஆரம்பக் கல்வியைக் குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியைப் புன்னாலைக் கட்டுவன் அமெரிக்கன் மிஷன் பாடசாடலையிலும் பெற்றார். ஈழத்துப் பெண் புலவர் மாதாஜி அம்மையார். ஏழாலை அரசினர் பாடசாலையில் உயர் கல்வி கற்று இவர் இதே பாடசாலையில் மாணவ ஆசிரியராகக் கடமையாற்றினார். ஈழத்துச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகளைத தனது மானசீகக் குருவாக அடைந்து உபதேசம் பெற்றார். விசாலாட்சி அம்மையார் பிரவேச பண்டிதர், பால பண்டிதர் பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றுள்ளார். 1960ஆம் ஆண்டு ஆண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பயற்சியை முடித்த மாதாஜி. வடலூர் இராமலிங்க வள்ளலாரிடம் ஞானசமய தீட்சை பெற்று "மாதாஜி" ஆனார். 1964 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய மாதாஜி மலையகம் முழுவதும் சைவபிரசங்கம் மூலம் ஆன்மீக நெறியைப் பரப்பினார். மலையக மாணவர்களுக்கு தன்னாலான பொருளாதார உதவிகளை வழங்கினார். 1972ஆம் ஆண்டு கிளிநொச்சி குருகுலம் சென்று அநாதை மாணவிகளின் விடுதி மேற்பார்வையாளராக வேதனமின்றிக் கடமையாற்றினார். கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம், ஊரரெழு கணேச வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக கடமையாற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த தமிழவேள் அவர்களால் ஈழத்துப்பூதந்தேவனார் விழாவில் வைத்து இவருக்கு "முதுபெரும் புலவர்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். 1965ஆம் ஆண்டு தொடக்கம் வீரகேசரி, ஈழாடு, தினகரன், தினபதி, வலம்புரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் ஆத்மஜோதி இலண்டன் முரசு, கலசம், கோபுரம், இந்துசாதனம் போன்ற சஞ்சிகைகளிலும் எழுதிவந்துள்ளார்.

படைப்புகள்

  • சிறுவர் ஞானத்தமிழ் நாடகம்
  • சிவவிரத மான்மியக் கதைகள்
  • சிவராத்திரி புராண படனம்
  • திருக்கேதீஸ்வரம் - சிறுகுறிப்பு
  • கந்தபுராண அமுதம்
  • நல்லூர்க் கந்தன் நான்மணிக்கோவை
  • குப்பிளான் சோதி விநாயகர் கவசமணிக்கோவை