"ஆளுமை:பரமேஸ்வரன், சீதாலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=சீதாலட்சும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:53, 12 டிசம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சீதாலட்சுமி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஊடகவியலாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமேஸ்வரன், சீதாலட்சுமி யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்தவர். ஜனகமகள் சிவஞானம் என்னும் புனைபெயரில் 1975ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். வானொலிக்கே இவர் முதன்முதலில் ஆக்கங்களை எழுதியுள்ளார். ஜனகமகள் சிவஞானம் வானொலியின் இசையும் கதையும் நிகழ்ச்சியின் ஊடாகவே நேயர்களிடையே பிரபலமானவர். ஜனகமகள் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அத்தோடு சிறுகதைகள், குறுநாவல்களும் பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியதாக இலகுவானதாக இருப்பதே எழுத்தாளர் ஜனகமகளின் சிறப்பம்சமாகும். 1987ஆம் ஆண்டு ”விடைகளே விடுகதையானால்” என்ற இவரின் குறுநாவல் முரசொலி என்ற பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசையும், 1990ஆம் ஆண்ட கனகசெந்திநாதர் நினைவுக் குறுநாவல் போட்டியில் ”விழுதுகள்” என்ற குறுநாவல் முதலாமிடத்தையும் பெற்றுள்ளது. எழுத்துத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப்பெற்றுள்ள எழுத்தாளர் திருமணத்திற்கு பின்னர் ஜனகமகளின் பேனா கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் ஜனகமகள் வரன் என்ற புனைபெயரில் அவ்வப்பொழுது எழுதி வருகிறார்.